சொல் பொருள்
(பெ) சீழ்க்கை, சீழ்க்கையொலி, சீட்டி,
சொல் பொருள் விளக்கம்
சீழ்க்கை, சீழ்க்கையொலி, சீட்டி,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
whistle, shrill sound
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கணை விடு புடையூ கானம் கல்லென மடி விடு வீளையர் வெடி படுத்து எதிர – குறி 160,161 அம்பை எய்து, தட்டையை அடித்து ஒலிஎழுப்பி, காடு(முழுவதும்) கல்லெனும் ஓசை பிறக்கும்படி, (வாயை)மடித்து விடுகின்ற சீழ்க்கையராய், மிக்க ஓசையை உண்டாக்கி (அவ் வேழத்தை)எதிர்த்து நிற்க, வீளை அம்பின் வில்லோர் பெருமகன் – நற் 265/3 சீழ்க்கை ஒலியுடன் செல்லும் அம்பைக்கொண்ட வில்லோர்களின் தலைவன் வீளை பருந்தின் கோள் வல் சேவல் – அகம் 33/5 சீட்டி ஒலி எழுப்பும் பருந்தின் (இரையைக் குறிபார்த்துக்)கவர்வதில் திறமைமிக்க ஆண் பறவை
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்