சொல் பொருள்

வெதும்புதல், வெம்மையாதல், வெம்மை, மிகுந்த வெப்பம்

சொல் பொருள் விளக்கம்

வெதும்புதல், வெம்மையாதல்

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

becoming very hot, tropical heat

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

வெயில் வீற்றிருந்த வெம்பலை அரும் சுரம் – நற் 84/9

வெயில் மிகுந்து வெதுப்பும் வெம்மையையுடைய அரிய சுரத்தின்கண் – வெம்பல், வெதும்புதல்; ஐ சாரியை – ஔவை.சு.து உரை, விளக்கம்

வெயில் வீற்றிருந்த வெம்பலை அரும் சுரம் – நற் 84/9

வெயில் நிலைபெற்றிருந்த வெம்மையுடைய செல்லுதற்கு அரிய காட்டுவழியில் – வெம்பல் – வெம்மை, ஐ-சாரியை – பின்னத்தூரார் உரை, விளக்கம்

வெம்பலை அரும் சுரம் – ஐங் 325/3

வெப்பம் பொருந்திய அரிய சுரம்
– வெம்பல் – வெப்பம், ஐ – சாரியை – ஔவை.சு.து உரை, விளக்கம்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published.