சொல் பொருள்
முதுகு
சொல் பொருள் விளக்கம்
முதுகு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
back
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: யாற்று அறல் புரையும் வெரிந் உடை கொழு மடல் வேல் தலை அன்ன வை நுதி நெடும் தகர் ஈத்து இலை – பெரும் 86-88 ஆற்றின் அறலை ஒக்கும் முதுகினை உடையதும், கொழுவிய மடலினையுடையதும் ஆகிய, வேலின் முனையைப் போன்ற கூர்மையான முனையைக்கொண்ட, நெடிய மேட்டில் உள்ள ஈந்தினுடைய இலை செ வெரிந் உறழும் கொழும் கடை மழை கண் தளிர் ஏர் மேனி மாஅயோயே – அகம் 42/3,4 சிவந்த பின்புறத்தைப் போன்ற வளமையான, குளிர்ந்த கடைக்கண்ணையும் தளிரைப் போன்ற அழகிய மேனியையும் உடைய மாநிறத்தவளே! வேதின வெரிநின் ஓதி முது போத்து – குறு 140/1 பன்னரிவாளைப் போன்ற முதுகையுடைய முதிய ஆண் ஓந்தியானது உயவல் யானை வெரிநு சென்று அன்ன கல் ஊர்பு இழிதரும் புல் சாய் சிறு நெறி – அகம் 65/14,15 பட்டினியால் மெலிந்து வருந்திய யானையின்முதுகில் நடந்து செல்வது போலும் பாறையில் ஏறியும் இறங்கியும் செல்லும் மூங்கில்கள் சாய்ந்த சிறு நெறிகளியுடைய
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்