Skip to content

சொல் பொருள்

முதுகு

சொல் பொருள் விளக்கம்

முதுகு

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

back

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

யாற்று அறல் புரையும் வெரிந் உடை கொழு மடல்
வேல் தலை அன்ன வை நுதி நெடும் தகர்
ஈத்து இலை – பெரும் 86-88

ஆற்றின் அறலை ஒக்கும் முதுகினை உடையதும், கொழுவிய மடலினையுடையதும் ஆகிய,
வேலின் முனையைப் போன்ற கூர்மையான முனையைக்கொண்ட, நெடிய மேட்டில் உள்ள
ஈந்தினுடைய இலை

செ வெரிந் உறழும் கொழும் கடை மழை கண்
தளிர் ஏர் மேனி மாஅயோயே – அகம் 42/3,4

சிவந்த பின்புறத்தைப் போன்ற வளமையான, குளிர்ந்த கடைக்கண்ணையும்
தளிரைப் போன்ற அழகிய மேனியையும் உடைய மாநிறத்தவளே!

வேதின வெரிநின் ஓதி முது போத்து – குறு 140/1

பன்னரிவாளைப் போன்ற முதுகையுடைய முதிய ஆண் ஓந்தியானது

உயவல் யானை வெரிநு சென்று அன்ன
கல் ஊர்பு இழிதரும் புல் சாய் சிறு நெறி – அகம் 65/14,15

பட்டினியால் மெலிந்து வருந்திய யானையின்முதுகில் நடந்து செல்வது போலும்
பாறையில் ஏறியும் இறங்கியும் செல்லும் மூங்கில்கள் சாய்ந்த சிறு நெறிகளியுடைய

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *