சொல் பொருள்

மிரளு, வெருவு, மதம்கொள், களிகொள், நறுமணம், அச்சம், முறைமை, ஒழுங்கு, வெறியாட்டு, தெய்வ ஆவேசம் வந்து ஆவியால் பற்றப்பட்டு ஆடும் ஆட்டம், தெய்வம்ஏறுதல் (முருகன்)

சொல் பொருள் விளக்கம்

மதம்கொள்

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

be frightened, be frenzied, be intoxicated, fragrance, fear, order, regularity, Dance of a priest possessed by a spirit or a deity, being possessed by a deity (mostly Lord Muruga)

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

மேனி மறைத்த பசலையள் ஆனாது
நெஞ்சம் வெறியா நினையா நிலன் நோக்கா
அஞ்சா அழாஅ அரற்றா இஃது ஒத்தி – கலி 143/6-8

மேனி முழுக்கப் பரவிய பசலையையுடையவளாய், அமைதி இழந்து,
மனம் மருண்டு, எதையெதையோ நினைத்துக்கொண்டு, தலையைக் குனிந்துகொண்டு,
அஞ்சி, அழுது, அரற்றுகின்ற இவள் ஒருத்தி

வேங்கை தொலைத்த வெறி பொறி வாரணத்து – கலி 43/1

“புலியைக் கொன்ற, மதம் நிறைந்த, புள்ளிகளைக் கொண்ட யானையின்

சின மாந்தர் வெறி குரவை – புறம் 22/22

சினத்தையுடைய வீரர் களித்தாடும் குரவைக்கூத்தொலி

வெறி_உற விரிந்த அறுவை மெல் அணை – நற் 40/5

நறுமணம் கமழ விரிக்கப்பட்ட விரிப்பினைக் கொண்ட மென்மையான அணையில்

கானவன்
சிறுபுறம் கடுக்கும் பெரும் கை வேழம்
வெறி கொள் சாபத்து எறி கணை வெரீஇ
அழுந்துபட விடர்_அகத்து இயம்பும் – நற் 228/5-8

வேட்டுவனின்
முதுகைப் போன்ற பெரும் துதிக்கையைக் கொண்ட வேழம்
அச்சங்கொண்ட வில்லானது எறிகின்ற அம்பினை அஞ்சி
ஆழ்ந்துபட மலைப்பிளவுகளில் பிளிறும்,

வெறி கொண்ட புள்_இனம் வதி சேரும் பொழுதினான்
செறி வளை நெகிழ்த்தான்_கண் சென்றாய் மற்று அவனை நீ
அறியவும் பெற்றாயோ அறியாயோ மட நெஞ்சே – கலி 123/12-14

ஒழுங்குமுறையில் பறந்து செல்லும் பறவைக் கூட்டம் தம் இருப்பிடம் சேரும் மாலைப்பொழுதில்
செறிவான வளையல்கள் கழன்றோடுமாறு செய்தவனிடம் சென்றாய், அவன் உள்ளத்தை நீ
அறிந்துகொள்ளும் வாய்ப்பைப் பெற்றாயோ, அல்லது அறியாமலேயே வந்துவிட்டாயோ அறிவுகெட்ட நெஞ்சமே?

வேலன் தைஇய வெறி அயர் களனும் – திரு 222

வேலன் இழைத்த வெறியாட்டு ஆடும் களத்திலும்

அறியாமையின் வெறி என மயங்கி
அன்னையும் அரும் துயர் உழந்தனள் – ஐங் 242/1,2

அறியாமையினால், தெய்வம் ஏறியதாகத் தவறாக எண்ணி
அன்னையும் நீக்குதற்கரிய துயரத்தில் ஆழ்ந்தாள்;

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published.