சொல் பொருள்
தெளிவாக, வெளிச்சம் இருக்கும்போதே
வெள்ளென – விடிய
சொல் பொருள் விளக்கம்
வெள் என என்பது வெளிச்சம் உண்டாக என்பதாம். காலையில் கதிரோன் எழுந்ததும் கப்பியிருந்த இருள் அகலுதலால் வெள்ளெனத் தோன்றும். அத்தோற்றத்தின் வெள்ளெனல் வைகறைப் பொழுதைக் குறிப்பதாக வழக்கில் வந்தது. “வெள்ளென வா” அப்பொழுதுதான் நாம் வேலையை முடித்து இருட்டுவதற்கு முன் திரும்ப முடியும் என்பதில் வெள்ளெனல் வைகறைப் பொழுதாம். வைகறை என்பதும் (வைகு அறை) கப்பிய இருளை அகற்றுதல் என்னும் பொருளதே.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
clearly, while there is still light
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மீளி முன்பின் ஆளி போல உள்ளம் உள் அவிந்து அடங்காது வெள்ளென நோவாதோன்_வயின் திரங்கி வாயா வன் கனிக்கு அலமருவோரே – புறம் 207/8-11 மறம் பொருந்திய வலியையுடைய யாளியை ஒப்ப உள்ளம் உள்ளே புழுங்கித் தணியாது, யாவர்க்கும் தெரிய தம்மைக்கண்டு இரங்காதவனிடத்தே நின்று திரங்கி நமக்குக் கிடைக்காத கனியாத வலிய பழமாகிய பரிசிலின் பொருட்டு சுழல்வோர் யார்தாம். இழை கிளர் நெடும் தேர் இரவலர்க்கு அருகாது கொள் என விடுவை ஆயின் வெள்ளென ஆண்டு நீ பெயர்ந்த பின்னும் ஈண்டு நீடு விளங்கு நீ எய்திய புகழே – புறம் 359/15-18 பொன் இழை அணிந்த நெடிய தேர்களை இரவலர்க்குக் குறைவறக் கொடுத்துச் செல்லவிடுவாயாயின், உன் செல்வம் இருக்கும்போதே நீ மேலுலகத்துக்குச் சென்ற பின்னரும் இவ்வுலகில் நெடிது நிலைநிற்கும் நின் ஈகையால் உளதாகும் புகழ்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
இது ஒரு வழக்குச் சொல்.
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்