Skip to content

சொல் பொருள்

விரும்பினாய், வேள்விசெய்தாய்

சொல் பொருள் விளக்கம்

விரும்பினாய்

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

(you) liked, (you) performed sacrifices

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

கடல் கெழு மாந்தை அன்ன எம்
வேட்டனை அல்லையால் நலம் தந்து சென்மே – நற் 395/9,10

கடல் சூழ்ந்த மாந்தை என்னும் நகரத்தைப் போன்ற எம்மை
நீதான் விரும்பினாய் இல்லை, எனவே உன்பொருட்டு இழந்த என் நலத்தைத் தந்துவிட்டுச் செல்வாயாக!

கேள்வி கேட்டு படிவம் ஒடியாது
வேள்வி வேட்டனை உயர்ந்தோர் உவப்ப – பதி 74/1,2

வேதங்களைச் சொல்லக்கேட்டு, விரதங்களை இடைவிடாமல் கைக்கொண்டு
வேள்விகளைச் செய்து முடித்தாய், உயர்ந்தவர்கள் மனம் மகிழ;

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *