Skip to content
வேம்பு

வேம்பு என்பதுவேப்பமரம்.

1. சொல் பொருள்

வேப்பமரம், அதன் பூ, இலை முதலியன,

2. சொல் பொருள் விளக்கம்

உழவர் இதன் பகுதிகளைச் சிறந்த பூச்சிக்கொல்லியாக பயன்படுத்துகின்றனர்.

பாண்டிய வேந்தரின் குடிப்பூ வேப்பம் பூ மாலை. 1995ல் யுரோப்பிய காப்புரிமைக்கழகம் வேம்பு தொடர்பான காப்புரிமையை அமெரிக்க ஐக்கிய நாடுகள் விவசாயத்துறைக்கு வழங்கியது. பிறகு இந்திய அரசாங்கம் காப்புரிமை வழங்கப்பட்ட இச்செயற்பாடு 2000 ஆண்டுகளாக இந்தியாவில் நடைமுறையில் இருப்பதாக கூறி இதை எதிர்த்தது. கிபி2000ல் இந்தியாவிற்கு சாதகமாக யுரோப்பிய காப்புரிமைக்கழகம் தீர்ப்பளித்தது.

மொழிபெயர்ப்புகள்

3. ஆங்கிலம்

Neem, margosa, Azadirachta indica

4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு

மோகூர் மன்னன் முரசம் கொண்டு
நெடுமொழி பணித்து அவன் வேம்பு முதல் தடிந்து – பதி 44/14,15

பகை மன்னனாகிய மோகூர் மன்னனின் முரசத்தைக் கைப்பற்றி,
அவன் கூறிய வஞ்சினத்தை முறித்து அவனைப் பணிவித்து, அவனது காவல்மரமாகிய வேம்பினை அடியோடு
வீழ்த்தி

அர வாய் வேம்பின் அம் குழை தெரியலும் – பொரு 144

அர(த்தின்) வாய் (போலும் வாயையுடைய)வேம்பின் அழகிய தளிரால் செய்த மாலையினையும்

வேம்பு தலை யாத்த நோன் காழ் எஃகமொடு – நெடு 176

வேப்பம் பூ மாலையைத் தலையிலே கட்டின வலிய காம்பினையுடைய வேலோடே

வேம்பும் கடுவும் போல வெம் சொல் - பொருள். செய்யு:112/2

தேன் அருந்தினர் தீய வேம்பு இன்பம் என்று அருந்தார் - தேம்பா:32 20/1

தேவரே தின்னினும் வேம்பு - நாலடி:12 2/4

வேளாண்மை வெம் கருனை வேம்பு ஆகும் கேளாய் - நாலடி:21 7/2

வெருக்கு கண் வெம் கருனை வேம்பு ஆம் விருப்புடை - நாலடி:21 10/2

வேம்பு அடு நெய் பெய்து அனைத்துஅரோ தேம் படு - நாலடி:24 9/2

தேவரே தின்னினும் வேம்பு - பழ:114/4

வேம்பின் இலையுள் கனியினும் வாழை தன் - நாலடி:25 4/1

வேம்பு தலை யாத்த நோன் காழ் எஃகமொடு - நெடு 176

நெடுமொழி பணித்து அவன் வேம்பு முதல் தடிந்து - பதி 44/15

கரும் சினை விறல் வேம்பு அறுத்த - பதி 49/16

தீம் கனி இரவமொடு வேம்பு மனை செரீஇ - புறம் 281/1

வேம்பு சினை ஒடிப்பவும் காஞ்சி பாடவும் - புறம் 296/1

வேம்பும் ஆரும் போந்தையும் மூன்றும் - புறம் 338/6

அர வாய் வேம்பின் அம் குழை தெரியலும் - பொரு 144

கோட்டு இணர் வேம்பின் ஏட்டு இலை மிடைந்த - பெரும் 59

பொரி அரை வேம்பின் புள்ளி நீழல் - நற் 3/2

சிறியிலை வேம்பின் பெரிய கொன்று - நற் 103/2

பராரை வேம்பின் படு சினை இருந்த - நற் 218/7

வேம்பின் ஒண் பழம் முணைஇ இருப்பை - நற் 279/1

கரும் கால் வேம்பின் ஒண் பூ யாணர் - குறு 24/1

வேம்பின் பைம் காய் என் தோழி தரினே - குறு 196/1

அத்த வேம்பின் அமலை வான் பூ - குறு 281/3

குறும் சினை வேம்பின் நறும் பழம் உணீஇய - ஐங் 339/2

வேம்பின் ஒண் பூ உறைப்ப - ஐங் 350/2

சினை அலர் வேம்பின் பொருப்பன் பொருத - கலி 92/27

வாடா வேம்பின் வழுதி கூடல் - அகம் 93/9

பிறிது ஒன்று கடுத்தனள் ஆகி வேம்பின்/வெறி கொள் பாசிலை நீலமொடு சூடி - அகம் 138/4,5

கரும் சினை வேம்பின் தெரியலோன் அல்லன் - புறம் 45/2

மன்ற வேம்பின் மா சினை ஒண் தளிர் - புறம் 76/4

குடுமி களைந்த நுதல் வேம்பின் ஒண் தளிர் - புறம் 77/2

மன்ற வேம்பின் ஒண் குழை மிலைந்து - புறம் 79/2

மன்ற வேம்பின் ஒண் பூ உறைப்ப - புறம் 371/7

கான வேம்பின் காய் திரங்க - புறம் 389/2

தெய்வம் சேர்ந்த பராரை வேம்பில்/கொழுப்பு ஆ எறிந்து குருதி தூஉய் - அகம் 309/4,5

வேம்பு தலை யாத்த நோன் காழ் எஃகமொடு - நெடு 176

வேம்பு உற்ற முந்நீர் விழுங்க விரையாது நின்றான் - சிந்தா:3 513/2

வருத்தும் காஞ்சிரமும் வேம்பும் வாய் கொள்வார் யாவர் சொல்லாய் - சிந்தா:13 2722/4

வேம்பு முதல் தடிந்த ஏந்து வாள் வலத்து - வஞ்சி:27/125

ஆர் புனை தெரியலும் அலர் தார் வேம்பும்
   சீர் கெழு மணி முடிக்கு அணிந்தோர் அல்லால் - வஞ்சி: 26/19,20

வேர் முதல் ஊசல் வேம்பின் சினை-தொறும் - உஞ்ஞை:52/11

தேன் சுவை கொளீஇ வேம்பின் ஊட்டும் - இலாவாண:11/173

தேம்பட மொழிந்து வேம்பு மனத்து அடக்கி - உஞ்ஞை:40/203

பத்தியின் எயிறும் உள்ளும் கண்டமும் படர்ந்து வேம்பின்
  கைத்தது கூற கேட்டோர் செவியினும் கசக்கும்-மன்னோ - சீறா:2833/3,4

மென்றிடில் இனியவை வேம்புக்கு இல்லையால் - சீறா:1817/4

வேம்பின் புழு வேம்பு அன்றி உண்ணாது அடியேன் - நாலாயி:2028/1

ஓம்பி இருந்து எம்மை ஓதுவித்து வேம்பின்
  பொருள் நீர்மை ஆயினும் பொன் ஆழி பாடு என்று - நாலாயி:2239/2,3

வேம்பின் புழு வேம்பு அன்றி உண்ணாது அடியேன் - நாலாயி:2028/1

வேம்பும் கறி ஆகும் என்று - நாலாயி:2475/4

விரை இளம் தளிரும் சூட்டி வேம்பு இழைத்து இடையே கோத்த - 3.இலை:3 18/3

புனையும் நறும் தொடை வாகை பூழியர் வேம்புடன் புனைந்து - 9.கறை:3 7/4

மெய்யகத்தே பெறும் வேம்பு அதுவாமே - திருமந்:207/4

மிளகு நெல்லியும் மஞ்சளும் வேம்பு இடில் - திருமந்:849/3

வேம்பு ஏறி நோக்கினன் மீகாமன் கூரையில் - திருமந்:1623/3

மூங்கில் முளையில் எழுந்தது ஓர் வேம்பு உண்டு - திருமந்:2887/1

வேம்பு கிடந்து வெடிக்கின்றவாறே - திருமந்:2887/4

எட்டியும் வேம்பும் இனியது ஓர் வாழையும் - திருமந்:2901/2

வேம்பினில் சார்ந்து கிடந்த பனையில் ஓர் - திருமந்:2887/2
வேப்பமரம்
வேப்பமரம்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *