சொல் பொருள்

 யாழ்நரம்புக்குற்றவகை, பறை முகப்புத்தோல்களில் உள்ள குற்றம்

சொல் பொருள் விளக்கம்

 யாழ்நரம்புக்குற்றவகை

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

A defect in lute string

a defect in the leather face of a drum.

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

ஆய் தினை அரிசி அவையல் அன்ன
வேய்வை போகிய விரல் உளர் நரம்பின் – பொரு 16,17

ஆய்ந்தெடுத்த தினை அரிசியின் குற்றலைப் போன்ற
(யாழ் நரம்பின் குற்றமாகிய)வேய்வை போக விரலால் அசைக்கும் நரம்பின்

யாழ் நரம்பில் தினையரிசியைப் போலச் சிறியதாய் இருக்கும் முண்டுகள் அல்லது பிசிறுகள் எனலாம்.
அவற்றை விரலால் நீவிவிட்டுச் சரிசெய்வர்.

தேய்வை வெண்காழ் புரையும் விசி பிணி
வேய்வை காணா விருந்தின் போர்வை
அரி குரல் தடாரி – புறம் 369/19-21

கல்லில் தேய்த்து அரைக்கப்படும் வெள்ளிய சந்தனக்கட்டை போலும் இறுக இழுத்துக் கட்டப்பட்ட
குற்றமில்லாத புதிதாகப் போர்க்கப்பட்ட அரித்த ஓசையையுடைய தடாரிப்பறை.

அரைத்த சந்தனக் குழம்பில் நன்கு அரைபடாமல் இருக்கும் சிறிய துகள்களைப் போலப்
பறையின் தோல்பகுதிகளில் காணப்படும் முண்டுகள் அல்லது பிசிறுகள் இங்கே வேய்வை எனப்படுகின்றன.

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published.