Skip to content

சொல் பொருள்

இலை – தழை, ஓலை, ஓடு ஆகியவற்றால் கூரை அமை, சூழ், பதி, பொருந்தியிரு, சூடு, அணிந்திரு, மூடு, மூங்கில், மூங்கில் கட்டை

சொல் பொருள் விளக்கம்

இலை – தழை, ஓலை, ஓடு ஆகியவற்றால் கூரை அமை

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

roof, thatch, surround, set, as gems, be fitted with, put on, as a string of flowers; to wear, as crown, cover, bamboo, bamboo rod

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

இலை வேய் குரம்பை உழை அதள் பள்ளி – மது 310

குழையால் வேய்ந்த குடியிலிருக்கும் மான் தோலாகிய படுக்கையினையும், எத்தனை விதமாகக் கூரை வேயப்பட்டிருக்கிறது பாருங்கள்.

ஆரை வேய்ந்த அறை வாய் சகடம் – பெரும் 50

ஈத்து இலை வேய்ந்த எய் புற குரம்பை – பெரும் 88

ஊகம் வேய்ந்த உயர் நிலை வரைப்பின் – பெரும் 122

கற்றை வேய்ந்த கழி தலை சாம்பின் – பெரும் 150

கரு வை வேய்ந்த கவின் குடி சீறூர் – பெரும் 191

புது வை வேய்ந்த கவி குடில் முன்றில் – பெரும் 225

தாழை முடித்து தருப்பை வேய்ந்த/குறி இறை குரம்பை பறி உடை முன்றில் – பெரும் 264,265

வண் தோட்டு தெங்கின் வாடு மடல் வேய்ந்த/மஞ்சள் முன்றில் மணம் நாறு படப்பை – பெரும் 353,354

இருவி வேய்ந்த குறும் கால் குரம்பை – குறி 153

முண்டகம் வேய்ந்த குறி இறை குரம்பை – நற் 207/2

பொழி மழை துறந்த புகை வேய் குன்றத்து – பெரும் 19

பொழியும் மழை புறக்கணித்த (நிலத்தில் எழுந்த)ஆவி சூழ்ந்த மலையிலுள்ள

பூ வேய் கண்ணி – நற் 122/11


கருங்குவளை மலர்களைப் பதித்தது போன்ற கண்களையுடையவளே – இதனை, பூ ஏய் கண்ணி – பூக்களைப் போன்ற கண்களையுடையவளே என்றும் கூறுவர்.

அரி வேய் உண்கண் அமர்த்தனள் நோக்கி – அகம் 390/13

செவ்வரி பொருந்திய மையுண்ட கண்களால் மாறுபட்டனள் போல் எம்மை நோக்கி

தூ தகட்டு எதிர் மலர் வேய்ந்த கூந்தல் – நற் 52/2

தூய தகடு போன்ற மலரை எதிர்த்துக் கட்டிய சரத்தைச் சூடிய கூந்தலின்

கார் மலர் வேய்ந்த கமழ் பூ பரப்பு ஆக – கலி 98/16

கார்காலத்து மலர்கள் மேலாக மூடிய கமழ்கின்ற பூக்களாலான நீர்ப்பரப்பாக

வேய் புரை மென் தோள் இன் துயில் – குறி 242

மூங்கிலைப் போன்ற மென்மையான தோளிடத்துப் பெறும் இனிய துயிலை

வேய் பெயல் விளையுள் தே கள் தேறல் – மலை 171

மூங்கில் குழாய்க்குள் பெய்தலுற்று விளைவித்ததான தேனால் செய்த கள்ளின் தெளிவை

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *