சொல் பொருள்
வேலமரம்
சொல் பொருள் விளக்கம்
வேலமரம்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
babul, Vachellia nilotica
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வெளிறு இல் காழ வேலம் நீடிய – நற் 302/8 உட்புழல் இல்லாமல் நன்கு வயிரமேறிய வேலமரங்கள் உயர்ந்து வளர்ந்த இதன் இலை மிகச் சிறியதாக இருக்கும். சிறியிலை வேலம் பெரிய தோன்றும் – பதி 58/14 சிள்வீடு கறங்கும் சிறியிலை வேலத்து – அகம் 89/6 இதன் உச்சி பரட்டைத்தலை போல் இருக்கும். அலந்தலை வேலத்து உலவை அம் சினை – பதி 39/12 சிதைந்துபோன தலையையுடைய வேலமரத்தின் காய்ந்துபோன கிளைகளில்,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்