Skip to content
வேழம்

வேழம் என்பது யானை, ஒருவகைப் புல்

1. சொல் பொருள்

யானை, பேய்க்கரும்பு, வேழக்கரும்பு, கொறுக்கை, கொறுக்கைப்புல், கொறுக்கைச்சி, கொறுக்கச்சி, கொறுக்காந்தட்டை, மூங்கில், கரும்பு,

2. சொல் பொருள் விளக்கம்

வேழம் என்னும் சொல் வேழப்புல்லையும், அப்புல்லை விரும்பி உண்ணும் யானையையும் குறிக்கும். கரும்பு மென் கரும்பு என்றும், சாறில்லாத நாணலை, ‘வேழக் கரும்பு’ என்றும் கூறுவர். இதனைப் பேய்க்கரும்பு என்பாரும் உளர். இதன் மலர் கரும்பைப் போன்றது

ஐங்குறுநூறு என்னும் சங்கநூல் தொகுப்பில் ஓரம்போகியார் என்னும் புலவர் பாடிய 100 மருதத்திணைப் பாடல்களில் இரண்டாம் பத்தாக உள்ளது வேழப்பத்து என்னும் பகுதி.

  1. வேழமும் செருந்தியும் வயலில் விளையும்
  2. வெண்கடம்ப மரச் சோலையில் வேழ வெண்பூ பூக்கும்
  3. கொடிகள் வேழத்தில் ஏறிப் படரும்
  4. வேழம் மூங்கில் போல் துளை கொண்டிருக்கும்
  5. வேழப்பூ கரும்புப்பூ போல இருக்கும்
  6. வேழப்பூ குதிரைக் குடுமி போல இருக்கும்.
  7. வேழத்துப் பூக்காம்பிலும் துளை உண்டு
  8. வேழப்பூ வானில் பறந்தாடும் குருகுப் பறவை போல ஆடும்.

வேழக்கரும்பு மூங்கில் அமைப்பில் குச்சியாக அமைந்திருப்பதால், தண்டு என்ற குச்சிகள் கூரை வீட்டிற்குக் கட்டுக் குச்சிகளாகப் பயன்படும். இதன் மூலம் தட்டி முதலியனவும் செய்யப்படுகின்றன.

வேழம்
வேழம்

மொழிபெயர்ப்புகள்

3. ஆங்கிலம்

elephant, a large coarse grass, kaus, European bamboo reed., bamboo, hardy sugar cane

saccharum arundinaceum, retz., Tripidium arundinaceum, a kind of reed, arundo donax

4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு

வேழம்
வேழம்

வேழக்கு உரித்தே விதந்து களிறு எனல் – பொருள். மரபி:34/1

வைந்நுதி பொருத வடு ஆழ் வரி நுதல்
வாடா மாலை ஓடையொடு துயல்வர
படு மணி இரட்டும் மருங்கின் கடு நடை
கூற்றத்து அன்ன மாற்று அரு மொய்ம்பின்
கால் கிளர்ந்து அன்ன வேழம் மேற்கொண்டு – திரு 78-82

கூரிய நுனி(யையுடைய தோட்டி) வெட்டின வடு அழுந்தின புகரையுடைய நெற்றியில்
வாடாத மாலையான பொன்னரிமாலை நெற்றிப்பட்டத்தோடு கிடந்து அசைய,
தாழ்கின்ற மணி மாறிமாறி ஒலிக்கின்ற பக்கத்தினையும், கடிய நடையினையும்,
கூற்றுவனை ஒத்த பிறரால் தடுத்தற்கரிய வலிமையினையும் உடைய,
காற்று எழுந்ததைப் போன்ற (ஓட்டத்தையுடைய)களிற்றில் ஏறி

குழை மாண் ஒள்இழை நீ வெய்யோளொடு
வேழ வெண் புணை தழீஇ – அகம் 6/7,8

குழை முதலான சிறந்த அணிகளையுடைய நீ விரும்பியவளுடன்
வேழக் கரும்பினாலான வெண்மையான தெப்பத்தில் ஏறி,

மனை நடு வயலை வேழம் சுற்றும் – ஐங் 11/1

வீட்டில் நடப்பட்ட வயலைக்கொடி வெளியிற் சென்று கொறுக்கச்சியைச் சுற்றிக்கொண்டிருக்கும்

வேழம் நிரைத்து வெண் கோடு விரைஇ
தாழை முடித்து தருப்பை வேய்ந்த
குறி இறை குரம்பை பறி உடை முன்றில் – பெரும் 263-265

மூங்கில்கோலை நெடு வரிசையாகச் சார்த்தி, வெண்மையான மரக்கொம்புகளை குறுக்காகப் பரப்பி,
தாழைநாரால் (இரண்டையும்)முடித்துத் தருப்பைப்புல்லை (அதன் மேல்)வேய்ந்த
குறுகிய இறப்பையுடைய குடிலின், (மீன்பிடிக்கும்)பறியினையுடைய முற்றத்தில்
– வேழம் – வேழக்கோல் – பேய்க்கருப்பந்தட்டை; கொறுக்கைச்சியுமாம்; மூங்கிற்கோல் எனினுமாம் –
பொ.வே.சோ உரை விளக்கம்.

வளரா வாடை உளர்பு நனி தீண்டலின்
வேழ வெண் பூ விரிவன பல உடன் – நற் 241/4,5

மெல்லென வீசும் வாடை கோதிவிடுவதாக ஊன்றித் தீண்டுவதால்
கரும்பின் வெள்ளையான பூக்கள் பலவும் சேர்ந்து விரிவனவாய்

வேழ பழனத்து நூழிலாட்டு – மது 257

வேழ வெண் பூ விரிவன பல உடன் – நற் 241/5

வேழ மூதூர் ஊரன் – ஐங் 15/3

புதல் மிசை நுடங்கும் வேழ வெண் பூ – ஐங் 17/1

வேழ வெண் பூ வெள் உளை சீக்கும் – ஐங் 19/3

மிக வரினும் மீது இனிய வேழ பிணவும் – பரி 10/15

வேழ வெண் புணை தழீஇ பூழியர் – அகம் 6/8

வேழ நோக்கின் விறல் வெம் சேஎய் – புறம் 22/29

வேழ முகவை நல்கு-மதி – புறம் 369/27

புலி விளையாடிய புலவு நாறு வேழத்தின்/தலை மருப்பு ஏய்ப்ப கடை மணி சிவந்த நின் – நற் 39/5,6

பிடி கணம் மறந்த வேழம் வேழத்து/பாம்பு பதைப்பு அன்ன பரூஉ கை துமிய – முல் 69,70

வேழத்து அன்ன வெருவரு செலவின் – மது 392

நெடும் சுழி பட்ட கடுங்கண் வேழத்து/உரவு சினம் தணித்து பெரு வெளில் பிணி-மார் – மலை 325,326

கடுங்கண் வேழத்து கோடு நொடுத்து உண்ணும் – குறு 100/4

ஓங்கு பூ வேழத்து தூம்பு உடை திரள் கால் – ஐங் 16/1

காம்பு கண்டு அன்ன தூம்பு உடை வேழத்து/துறை நணி ஊரனை உள்ளி என் – ஐங் 20/3,4

மதன் உடை வேழத்து வெண் கோடு கொண்டு – பதி 30/11

மதர் புலி வெரீஇய மையல் வேழத்து/இனம் தலைமயங்கிய நனம் தலை பெரும் காட்டு – அகம் 39/11,12

கொழும் கோல் வேழத்து புணை துணை ஆக – அகம் 186/8

இரும் புலி தொலைத்த பெரும் கை வேழத்து/புலவு நாறு புகர் நுதல் கழுவ கங்குல் – அகம் 272/1,2

மீளி வேழத்து நெடுந்தகை புலம்ப – அகம் 381/2

புகர் முக வேழத்து மருப்பொடு மூன்றும் – புறம் 374/13

நலம் கவளம் கொள்ளும் நகை முக வேழத்தை/இன்று கண்டாய் போல் எவன் எம்மை பொய்ப்பது நீ – கலி 97/20,21

கால் கிளர்ந்து அன்ன வேழம் மேற்கொண்டு – திரு 82

பிடி புணர் வேழம் பெட்டவை கொள்க என – பொரு 126

வெருவரு செலவின் வெகுளி வேழம்/தரவு இடை தங்கல் ஓவு இலனே வரவு இடை – பொரு 172,173

வேழம் காவலர் குரம்பை ஏய்ப்ப – பெரும் 51

கணம் சால் வேழம் கதழ்வு-உற்று ஆஅங்கு – பெரும் 259

வேழம் நிரைத்து வெண் கோடு விரைஇ – பெரும் 263

பிடி கணம் மறந்த வேழம் வேழத்து – முல் 69

வென்று எழு கொடியொடு வேழம் சென்று புக – நெடு 87

மையல் வேழம் மடங்கலின் எதிர்தர – குறி 165

வாரி கொள்ளா வரை மருள் வேழம்/கறங்கு மணி துவைக்கும் ஏறு உடை பெரு நிரை – மலை 572,573

கன்று உடை வேழம் நின்று காத்து அல்கும் – நற் 85/5

புகர் முக வேழம் புலம்ப தாக்கி – நற் 158/6

மட பிடி தழீஇய தட கை வேழம்/தேன் செய் பெரும் கிளை இரிய வேங்கை – நற் 202/4,5

காண்-தொறும் பொலியும் கதழ் வாய் வேழம்/இரும் கேழ் வய புலி வெரீஇ அயலது – நற் 217/2,3

சிறுபுறம் கடுக்கும் பெரும் கை வேழம்/வெறி கொள் சாபத்து எறி கணை வெரீஇ – நற் 228/6,7

உரவு சின வேழம் உறு புலி பார்க்கும் – நற் 336/7

வாலா வேழம் வணர் குரல் கவர்தலின் – நற் 393/4

பிடி பசி களைஇய பெரும் கை வேழம்/மென் சினை யாஅம் பொளிக்கும் – குறு 37/2,3

மயங்கு துயர்-உற்ற மையல் வேழம்/உயங்கு உயிர் மட பிடி உலை புறம் தைவர – குறு 308/3,4

மனை நடு வயலை வேழம் சுற்றும் – ஐங் 11/1

கரை சேர் வேழம் கரும்பின் பூக்கும் – ஐங் 12/1

அடைகரை வேழம் வெண் பூ பகரும் – ஐங் 13/2

கொடி பூ வேழம் தீண்டி அயல – ஐங் 14/1

இரும் சாய் அன்ன செருந்தியொடு வேழம்/கரும்பின் அலமரும் கழனி ஊரன் – ஐங் 18/1,2

சுரும்பு உண களித்த புகர் முக வேழம்/இரும் பிணர் துறுகல் பிடி செத்து தழூஉம் நின் – ஐங் 239/1,2

சேய் உயர் பணை மிசை எழில் வேழம் ஏந்திய – பரி 1/4

எரி சடை எழில் வேழம் தலை என கீழ் இருந்து – பரி 11/2

பொரு சமம் கடந்த புகழ் சால் வேழம்/தொட்டதை தைப்பு அமை சருமத்தின் தாள் இயை தாமரை – பரி 21/2,3

உறல் ஊறு கமழ் கடாத்து ஒல்கிய எழில் வேழம்/வறன் உழு நாஞ்சில் போல் மருப்பு ஊன்றி நிலம் சேர – கலி 8/4,5

எழு உறழ் தட கையின் இனம் காக்கும் எழில் வேழம்/அழுவம் சூழ் புகை அழல் அதர்பட மிதித்து தம் – கலி 25/9,10

ஒடுங்கா எழில் வேழம் வீழ் பிடிக்கு உற்ற – கலி 40/26

வரி நுதல் எழில் வேழம் பூ நீர் மேல் சொரிதர – கலி 44/5

மறம் மிகு வேழம் தன் மாறுகொள் மைந்தினான் – கலி 53/3

கவழம் அறியா நின் கை புனை வேழம்/புரி புனை பூம் கயிற்றின் பைபய வாங்கி – கலி 80/6,7

கடி அரணம் பாயா நின் கை புனை வேழம்/தொடியோர் மணலின் உழக்கி அடி ஆர்ந்த – கலி 86/7,8

எழில் மருப்பு எழில் வேழம் இகுதரு கடாத்தால் – கலி 138/1

புலி செத்து வெரீஇய புகர் முக வேழம்/மழை படு சிலம்பில் கழைபட பெயரும் – அகம் 12/11,12

இனம் சால் வேழம் கன்று ஊர்பு இழிதர – அகம் 197/14

இரவு புனம் மேய்ந்த உரவு சின வேழம்/தண் பெரும் படாஅர் வெரூஉம் – அகம் 309/15,16

மையல் வேழம் மெய் உளம் போக – அகம் 388/23

வேழம் வீழ்த்த விழு தொடை பகழி – புறம் 152/1

செரு நவில் வேழம் கொண்மூ ஆக – புறம் 373/2

வெம் சின வேழம் நல்கினன் அஞ்சி – புறம் 394/12

மட மா இரும் பிடி வேழ
உண்கண்ணுள் நீர் – கைந்:17/2,3

வரை புரை வேழத்த வன் பகை என்று அஞ்சி – பழ:317/1

கடும் சின வேழத்து எதிர் சேறல் இன்னா – இன்னா40:30/2

செயிர் வேழம் ஆகுதல் இன்று – நாலடி:36 8/4

வெம் சின வேழம் பிடியோடு இயைந்து ஆடும் – கார்40:38/2

ஓவா கணை பாய ஒல்கி எழில் வேழம்
தீவாய் குருதி இழிதலால் செம் தலை – கள40:12/1,2

மடி செவி வேழம் இரீஇ அடி ஓசை – ஐந்50:16/2

கொல் இயல் வேழம் குயவரி கோள் பிழைத்து – திணை150:25/1

வேழம் பிடி தழூஉம் வேய் சூழ் மலை நாட – பழ:265/3

கரும் கை கத வேழம் கார் பாம்பு குப்பம் – கைந்:8/1

காந்தள் அரும் பகை என்று கத வேழம்
ஏந்தல் மருப்பிடை கை வைத்து இனன் நோக்கி – கைந்:9/1,2

கடும் சின வேங்கை கதழ் வேழம் சாய்க்கு – கைந்:16/2

புகர் முக சிறு கண் வேழ பொருப்பொடு பொருப்பு தாக்கி – சீறா:929/1

கட தட கரத்து வேழ காவலர்க்கு அசனி ஒப்பார் – சீறா:1572/3

பணை மருப்பு இரட்டை வேழ பகடு தொண்டலத்தில் நீண்ட – சீறா:5002/1

பொலம் தேர் மீமிசை புகர் முக வேழத்து
இலங்கு தொடி நல்லார் சிலர் நின்று ஏற்றி – மணி:3/142,143

வேழம் வேட்டு எழும் வெம் புலி போல – மணி:20/95

கால் கிளர்ந்து அன்ன வேழம் மேற்கொண்டு – திரு 82

வென்று எழு கொடியொடு வேழம் சென்று புக – நெடு 87

வேழ வெண் திரள் தட கை வெருட்டி மற்று இளம் கன்னி – சிந்தா:1 174/1
விரும்பினர் எதிர்கொண்டு ஓம்ப வேழ வெம் தீயின் நீங்கி – சிந்தா:1 401/2
நீள் நில வேந்து எனும் வேழ பேரினம் – சிந்தா:3 774/3
விரும்புவார் வேழ வேல் போர் நூற்றுவர் நூறு கோடிக்கு – சிந்தா:3 785/3
வேழ வெண்கோட்டு மெல் கோல் தின்று கூன் குருதி வாளால் – சிந்தா:3 803/1
பொங்கிய முழக்கில் வேழ பேரினம் புலம்பினால் போல் – சிந்தா:3 811/3
செறி எயிற்று ஆளி வேழ பேரினம் செகுத்தது அன்றே – சிந்தா:3 814/3
துள்ளும் மானொடு வேழ தொகுதியும் – சிந்தா:4 870/2
வெம் களி விடும் மத வேழ பேரினம் – சிந்தா:5 1179/2
வேல் உடை தடக்கையார்கள் வேழ மேல் சென்ற-போழ்தில் – சிந்தா:7 1677/1
வேழ வேந்தற்கு விழு பெரும் கணி விரித்து உரைத்தான் – சிந்தா:12 2386/4
மின் இலங்கு எயிற்று வேழம் வேழத்தால் புடைத்து திண் தேர் – சிந்தா:4 1154/1
களம் கொள் வேழத்தின் ஏற்றினர் கடி முரசு அறைவான் – சிந்தா:12 2388/4
அணைப்ப அரும் களி கொள் வேழத்து அத்தினபுரத்து வேந்தன் – சிந்தா:3 610/3
குட வரை நெற்றி பாய்ந்த கோளரி போன்று வேழத்து
உடல் சினம் கடவ குப்புற்று உரும் என உரறி ஆர்த்தான் – சிந்தா:4 980/3,4
பெய் பூம் கழலான் வேழத்து இழிந்து பிறை போல் குலாய – சிந்தா:10 2198/3
வேல் மிடை சோலை வேழத்து இன்னுயிர் விழுங்கும் என்றான் – சிந்தா:10 2206/4
தூம்பு உடை நெடும் கை வேழம் துற்றிய வெள்ளிலே போல் – சிந்தா:1 232/1
சாய்ந்த பின் தறுகண் ஆண்மை கட்டியங்காரன் வேழம்
காய்ந்தனன் கடுக உந்தி கப்பணம் சிதறினானே – சிந்தா:1 285/3,4
கொன்று அவன் வேழம் வீழ்ப்ப மற்ற போர் களிற்றில் பாய்ந்து – சிந்தா:1 286/3
பானாள் பிறை மருப்பின் பைம் கண் வேழம் பகு வாய் ஓர் பை அணல் மா நாகம் வீழ்ப்ப – சிந்தா:1 296/1
மிக்க நாளினால் வேழம் மு மதம் – சிந்தா:2 414/1
கார் விளை மேகம் அன்ன கவுள் அழி கடாத்த வேழம்
போர் விளை இவுளி திண் தேர் புனை மயிர் புரவி காலாள் – சிந்தா:2 433/1,2
வேழம் மும்மதத்தொடு தாழ் புயல் கலந்து உடன் – சிந்தா:3 571/1
விலங்கல் அன்ன வேக வேழம் நான்கு வெல்லும் ஆற்றலான் – சிந்தா:3 689/1
விலங்கின தேர் தொகை வேழம் காய்ந்தன – சிந்தா:3 779/3
விழித்து மேல் சென்ற வேழம் வேலினால் விலக்கி நிற்பார் – சிந்தா:3 783/2
தேன் எறி குன்றம் ஒத்த திண் கச்சை துணிந்த வேழம்
மான் நெறி காட்டும் திண் தேர் கயிறு அற்று மறிய வேந்தர் – சிந்தா:3 800/2,3
அளித்தவை பாடி ஆட குறுநரி நக்கு வேழம்
விளித்தன கழுகும் பாறும் விலா இற்றுக்கிடந்த அன்றே – சிந்தா:3 804/3,4
கடாம் திறந்திட்டு வானின் களகள முழங்கும் வேழம்
படாம் திறந்து ஊழி தீயின் பதுமுகன் காட்டியிட்டான் – சிந்தா:3 806/1,2
மருப்பினால் வேழம் வீழா மன்னரை வாலில் சீறா – சிந்தா:3 807/1
பில்கும் மும்மத வேழம் பெயர்ந்ததே – சிந்தா:4 984/4
ஒரு கை இரு மருப்பின் மும்மதத்தது ஓங்கு எழில் குன்று அனைய வேழம்
திருகு கனை கழல் கால் சீவகன் வென்று இளையாட்கு உடைந்து தேன் ஆர் – சிந்தா:4 985/1,2
வெம் சின வேழம் உண்ட வெள்ளிலின் வெறியம் ஆக – சிந்தா:4 1024/1
மிகை நிற களிற்றை நோக்கி வேழம் என் உற்றது என்றான் – சிந்தா:4 1077/4
வெம் சின வேழம் உண்ட விளங்கனி போன்று நீங்கி – சிந்தா:4 1122/2
தருக்கு உடை வேழம் வாளார் ஞாட்பினுள் தகைமை சான்ற – சிந்தா:4 1133/3
பிடியொடு நின்ற வேழம் பெரு வளைப்புண்ட வண்ணம் – சிந்தா:4 1137/1
மின் இலங்கு எயிற்று வேழம் வேழத்தால் புடைத்து திண் தேர் – சிந்தா:4 1154/1
இந்திர திருவில் சூழ்ந்த இன மழை குழாத்தின் வேழம்
கொந்து அழல் காட்டு தீயால் வளைப்புண்ட குழாத்தை நோக்கி – சிந்தா:7 1753/2,3
புண் மல்கு மத்தகத்த போர் வேழம் பொற்பு அழித்த – சிந்தா:7 1808/1
விண் அகத்து இயங்கும் மேக குழாம் என நிரைத்த வேழம்
திண் நுக புரவி திண் தேர் விரைந்தன நிரந்த பாய்மா – சிந்தா:7 1859/2,3
விண்டவர் உடலம் கீறி சுளித்து நின்று அழலும் வேழம்
ஒண் கொடி உருவ திண் தேர் ஒளி மயிர் புரவி பண்ணி – சிந்தா:10 2151/1,2
வீற்று இங்கு இருந்தேன் என மகிழ்ந்து வென்றி வேழம் இருநூறும் – சிந்தா:10 2174/2
மன்னன் ஆங்கு ஓர் மத வேழம் வாரி மணாளன் என்பதூஉம் – சிந்தா:10 2175/1
மேலவர் அடக்குபு வேழம் ஏறலின் – சிந்தா:10 2212/2
மலை கோட்ட எழில் வேழம் தவ நூறி மத யானை – சிந்தா:10 2234/3
விண் புக உயிரை பெய்வான் வீழ்தரு கடாத்த வேழம்
மண் பக இடிக்கும் சிங்கம் என கடாய் மகதர் கோமான் – சிந்தா:10 2250/2,3
தேம் கமழ் தெரியல் தீம் பூம் தாரவன் ஊர்ந்த வேழம்
காம்பிலிக்கு இறைவன் ஊர்ந்த களிற்றொடு மலைந்தது அன்றே – சிந்தா:10 2253/3,4
கூற்று என வேழம் வீழா கொடி நெடும் தேர்கள் நூறா – சிந்தா:10 2283/1
விரை பரி தேரும் ஈர்த்து வேழம் கொண்டு ஒழுகி வெள்ள – சிந்தா:10 2297/3
தன் மதம் திவண்ட வண்டு தங்கிய காட்டுள் வேழம்
பின் மதம் செறித்திட்டு அஞ்சி பிடி மறந்து இரிந்து போகும் – சிந்தா:10 2313/1,2
வாள்களாலே துகைப்புண்டு வரை புண் கூர்ந்த போல் வேழம்
நீள் கால் விசைய நேமி தேர் இமைத்தார் நிலத்தில் காண்கலா – சிந்தா:11 2354/1,2
அரைத்த சாந்து அணிந்த கோட்ட ஆயிரத்து எட்டு வேழம்
நிரைத்தன மண்ணு நீர்க்கு முரசொடு முழவம் விம்ம – சிந்தா:12 2414/2,3
இடை நிலம் இன்றி வேழம் ஈண்டின மள்ளர் தொக்கார் – சிந்தா:12 2525/4
வெம்பு மும்மத வேழம் விலக்குவார் – சிந்தா:13 3066/2
விளிவரும்-குரைய ஞான வேழம் மேல் கொண்டு நின்றான் – சிந்தா:13 3070/4
ஊன் முழங்கு வெம் குருதி வேழமுடன் மூழ்க – சிந்தா:3 845/3
செம்பொன் தேரும் வேழமும் ஊர்ந்து நிதி சிந்தி – சிந்தா:1 363/3
கொடி எனும் பிடி உடை குமர வேழமும்
வெடிபடு போர் தொழில் காண விஞ்சையர் – சிந்தா:3 776/2,3
மெய் படை வீழ்த்தல் நாணி வேழமும் எறிதல் செல்லான் – சிந்தா:10 2259/2
வீறு இன்மையின் விலங்காம் என மத வேழமும் எறியான் – சிந்தா:10 2261/1
வென்று ஆயின மத வேழமும் உளவோ என வினவி – சிந்தா:10 2262/2
மஞ்சு இவர் குன்று என மலைந்த வேழமே – சிந்தா:10 2230/4

மேகம் நிகர்த்தன வேழ மருப்பு மிதித்து – தேம்பா:15 63/1
மின் ஆர் வேல் ஊன் உமிழ்ந்து ஒழுகும் வேழ மருப்பும் எதிர்த்து – தேம்பா:28 25/1
சுளகொடு சவரம் வீசும் தோற்றமே போன்று வேழம்
புளகொடு மதத்தின் சீறி புடைத்த தன் செவி கால் வீச – தேம்பா:12 20/1,2
உடலொடு வேழம் உருண்டு உகு வெம் குருதி – தேம்பா:15 66/3
மேல் புறத்து எழும் கார் ஒத்த வேழம் மேல் எதிர்த்த போழ்தில் – தேம்பா:28 12/2
வேல் கடல் பரி கடல் வேழம் தேரொடு – தேம்பா:29 64/1
சால் வளர் முகிலின் வேழம் சந்தனம் மேய்ந்து சீற – தேம்பா:30 124/1
மேகம் ஒத்து இழி மத வேழம் மீ சிலர் – தேம்பா:32 61/1
விண் தாரையின் வேழம் உகும் கடமும் – தேம்பா:36 67/2
வீய் துணையும் அகி துணையும் வேழமுடன் அரி துணையும் – தேம்பா:28 83/1
மீன் நிகர் பொன் சிவிகையும் மால் வேழமும் பாய் பரிமாவும் – தேம்பா:10 11/2
கடம் மாறு இல வெம் சின வேழமொடும் கனம் ஈரும் கொடிஞ்சி விமானமொடும் – தேம்பா:24 24/1

உருவ தார் தென்னவன் ஓங்கு எழில் வேழத்து
இரு கோடும் செய்தொழில் வேறு ஆல் ஒரு கோடு – முத்தொள்:100/1,2

வேழம் வரும் அளவும் வெயிலே துற்றி திரிவாரும் – தேவா-சம்:491/2
வேழம் பொரு தெண் நீர் அதிகை வீரட்டானத்து – தேவா-சம்:503/2
வேய் அடைந்த தோளி அஞ்ச வேழம் உரித்தது என்னே – தேவா-சம்:519/2
பிழைத்த பிடியை காணாது ஓடி பெரும் கை மத வேழம்
அழைத்து திரிந்து அங்கு உறங்கும் சாரல் அண்ணாமலையாரே – தேவா-சம்:746/3,4
தரு வளர் கானம் தங்கிய துங்க பெரு வேழம்
மரு வளர் கோதை அஞ்ச உரித்து மறை நால்வர்க்கு – தேவா-சம்:1094/1,2
வெருவி வேழம் இரிய கதிர் முத்தொடு வெண் பளிங்கு – தேவா-சம்:1519/1
பரு கை மத வேழம் உரித்து உமையோடும் – தேவா-சம்:1858/2
அஞ்ச வேழம் உரித்த பெருமான் அமரும் இடம் – தேவா-சம்:2739/2
வேழம் அழு உரித்த வெண்காடு மேவிய – தேவா-சம்:2957/3
வேழம் உரித்த பிரான் விரும்பும் இடம் வெண்டுறையே – தேவா-சம்:3454/4
விரித்தார் நான்மறை பொருளை உமை அஞ்ச விறல் வேழம்
உரித்தார் ஆம் உரி போர்த்து மதில் மூன்றும் ஒரு கணையால் – தேவா-சம்:3486/1,2
பாழி உறை வேழம் நிகர் பாழ் அமணர் சூழும் உடலாளர் உணரா – தேவா-சம்:3523/1
தாழை முகிழ் வேழம் மிகு தந்தம் என உந்து தகு சண்பை நகரே – தேவா-சம்:3605/4
வெதிர்களோடு அகில் சந்தம் முருட்டியே வேழம் ஓடகில்சந்தம் உருட்டியே – தேவா-சம்:4030/2
வேழம் உரித்த நிலையும் விரி பொழில் வீரட்டம் சூழ்ந்து – தேவா-அப்:19/3
தரித்தது ஓர் கோல காலபயிரவன் ஆகி வேழம்
உரித்து உமை அஞ்ச கண்டு ஒண் திரு மணி வாய் விள்ள – தேவா-அப்:712/2,3
பனை கை மும்மத வேழம் உரித்தவன் – தேவா-அப்:1082/1
வெம் குலாம் மத வேழம் வெகுண்டவன் – தேவா-அப்:1849/2
மா குன்று எடுத்தோன்-தன் மைந்தன் ஆகி மா வேழம் வில்லா மதித்தான்-தன்னை – தேவா-அப்:2444/1
வெம் சினத்த வேழம் அது உரிசெய்தாரும் வெண்ணி அமர்ந்து உறைகின்ற விகிர்தனாரே – தேவா-அப்:2683/4
கான் இரிய வேழம் உரித்தார் போலும் காவிரிப்பூம்பட்டினத்து உள்ளார் போலும் – தேவா-அப்:2900/1
வெருவ வேழம் செற்றது என்னே வேலை சூழ் வெண்காடனீரே – தேவா-சுந்:59/4
வேழம் உரிப்பர் மழுவாளர் வேள்வி அழிப்பர் சிரம் அறுப்பர் – தேவா-சுந்:548/1
விண் பணிந்து ஏத்தும் வேதியா மாதர் வெருவிட வேழம் அன்று உரித்தாய் – தேவா-சுந்:700/1
மாற்று களிறு அடைந்தாய் என்று மத வேழம் கை எடுத்து – தேவா-சுந்:807/1
வேழம் அருள்புரிந்தான் நொடித்தான்மலை உத்தமனே – தேவா-சுந்:1020/4
வரை கை வேழம் உரித்தும் அரன் நடமாட்டானால் மனை-தோறும் – தேவா-சுந்:1028/1
வேழம்பத்து ஐவர் வேண்டிற்று வேண்டி போய் – தேவா-அப்:1711/1
கோவணமோ தோலோ உடை ஆவது கொல் ஏறோ வேழமோ ஊர்வதுதான் – தேவா-அப்:2340/1

பொள்ளல் நல் வேழத்து உரியாய் புலன் நின்-கண் போதல் ஒட்டா – திருவா:6 24/3

வேழ முன்னாய் கலையாய் பிறவாய் பின்னும் மெல் தழையாய் – திருக்கோ:61/3
பரும் கண் கவர் கொலை வேழ படையோன் பட படர் தீ – திருக்கோ:70/1
அரம்பையர்-தம் இடமோ அன்றி வேழத்தின் என்பு நட்ட – திருக்கோ:251/3
தேன் முதிர் வேழத்தின் மென் பூ குதர் செம்மல் ஊரன் திண் தோள் – திருக்கோ:369/2
முழக்கி எழுவன மும்மத வேழம்

அடக்க அறிவு என்னும் கோட்டையை வைத்தேன் – திருமந்:2034/1,2
கொழுத்தன வேழம் குலைக்கின்றவாறே – திருமந்:2034/4

வேரல் விளையும் குளிர் முத்தும் வேழ மருப்பின் ஒளிர் முத்தும் – 2.தில்லை:6 2/2
தார் மணி இசைப்பும் வேழ முழக்கமும் தடம் தேர் சீரும் – 3.இலை:1 32/2
வேழ கரும்பினோடு மென் கரும்பு தண் வயலில் – 3.இலை:2 2/1
வேழத்து அரசு அங்கண் விரைந்து நடந்து சென்று – 4.மும்மை:1 34/1
காய் தழல் உமிழ் கண் வேழம் திரிந்து மேல் கதுவ அச்சம் – 3.இலை:1 24/2
மை வரை அனைய வேழம் புரண்டிட மருங்கு வந்த – 3.இலை:1 25/2
சென்னி இ துங்க வேழம் சிவகாமி ஆண்டார் கொய்து – 3.இலை:1 40/2
பொங்கி தன் வேழம் எல்லாம் பூட்டவும் நேர் நில்லாமை – 3.இலை:4 23/3
மை வரை அனைய வேழம் கண் கட்டி விட்டால் மற்ற – 4.மும்மை:1 30/3
மின்னும் மணி மாளிகை வாயிலின் வேழம் மீது – 4.மும்மை:1 44/1
வேடத்தால் வரும் கூற்றின் மிக்கது ஒரு விறல் வேழம் – 5.திருநின்ற:1 110/4
எண் திசையோர்களும் காண இறைஞ்சி எழுந்தது வேழம் – 5.திருநின்ற:1 117/4
ஆண்ட அரசை வணங்கி அஞ்சி அ வேழம் பெயர – 5.திருநின்ற:1 118/1

வேலை நீர் நிறத்து அன்னவன் தாலோ வேழ போதகம் அன்னவன் தாலோ – நாலாயி:708/2
வெம் சினத்த வேழ வெண் மருப்பு ஒசித்து உருத்த மா – நாலாயி:794/1
வெம் சின வேழ மருப்பு ஒசித்த வேந்தர்-கொல் ஏந்து இழையார் மனத்தை – நாலாயி:1763/1
வேழ மருப்பை ஒசித்தான் விண்ணவர்க்கு எண்ணல் அரியான் – நாலாயி:2988/3
விலங்கல் போல்வன விறல் இரும் சினத்தன வேழங்கள் துயர்கூர – நாலாயி:959/3
வெண் புழுதி மேல் பெய்துகொண்டு அளைந்தது ஓர் வேழத்தின் கரும் கன்று போல் – நாலாயி:94/1
ஆங்கு வேழத்தின் கொம்பு கொண்டு வன் பேய் முலை – நாலாயி:1963/2
ஒரு தனி வேழத்து அரந்தையை ஒரு நாள் – நாலாயி:2672/12
வில் பிடித்து இறுத்து வேழத்தை முறுக்கி மேலிருந்தவன் தலை சாடி – நாலாயி:397/1
வேழம் துயர் கெட விண்ணோர் பெருமானாய் – நாலாயி:220/3
கடி கொள் வேங்கையின் நறு மலர் அமளியின் மணி அறை மிசை வேழம்
பிடியினோடு வண்டு இசை சொல துயில்கொளும் பிரிதி சென்று அடை நெஞ்சே – நாலாயி:960/3,4
கான் அமர் வேழம் கைஎடுத்து அலற கரா அதன் காலினை கதுவ – நாலாயி:1076/2
வெம்பு சினத்து அடல் வேழம் வீழ வெண் மருப்பு ஒன்று பறித்து இருண்ட – நாலாயி:1120/3
மேவு சினத்து அடல் வேழம் வீழ முனிந்து அழகாய – நாலாயி:1174/2
வெவ் வாய மா கீண்டு வேழம் அட்ட விண்ணவர்_கோன் தாள் அணைவீர் விகிர்த மாதர் – நாலாயி:1182/2
முதலை தனி மா முரண் தீர அன்று முது நீர் தட செம் கண் வேழம் உய்ய – நாலாயி:1219/1
தூம்பு உடை பனை கை வேழம் துயர் கெடுத்தருளி மன்னும் – நாலாயி:1288/1
கடி கொள் பூம் பொழில் காமரு பொய்கை வைகு தாமரை வாங்கிய வேழம்
முடியும் வண்ணம் ஓர் முழு வலி முதலை பற்ற மற்று அது நின் சரண் நினைப்ப – நாலாயி:1420/1,2
தூ வாய புள் ஊர்ந்து வந்து துறை வேழம்
மூவாமை நல்கி முதலை துணித்தானை – நாலாயி:1520/1,2
பூணாது அனலும் தறுகண் வேழம் மறுக வளை மருப்பை – நாலாயி:1540/1
குன்றால் மாரி தடுத்தவனை குல வேழம் அன்று – நாலாயி:1601/1
குல தலைய மத வேழம் பொய்கை புக்கு கோள் முதலை பிடிக்க அதற்கு அனுங்கி நின்று – நாலாயி:1620/1
கும்பம் மிகு மத வேழம் குலைய கொம்பு பறித்து மழ விடை அடர்த்து குரவை கோத்து – நாலாயி:1625/1
கொலை ஆர் வேழம் நடுக்குற்று குலைய அதனுக்கு அருள்புரிந்தான் – நாலாயி:1704/2
தூம்பு உடை கை வேழம் வெருவ மருப்பு ஒசித்த – நாலாயி:1785/1
சிலையால் இலங்கை செற்றான் மற்று ஓர் சின வேழம்
கொலை ஆர் கொம்பு கொண்டான் மேய குறுங்குடி மேல் – நாலாயி:1807/1,2
வெருவி புனம் துறந்த வேழம் இரு விசும்பில் – நாலாயி:2121/2
அரவம் அடல் வேழம் ஆன் குருந்தம் புள் வாய் – நாலாயி:2135/1
இடர் ஆர் படுவார் எழு நெஞ்சே வேழம்
தொடர் வான் கொடு முதலை சூழ்ந்த படம் உடைய – நாலாயி:2159/1,2
பெருகு மத வேழம் மா பிடிக்கு முன் நின்று – நாலாயி:2256/1
புரிந்து மத வேழம் மா பிடியோடு ஊடி – நாலாயி:2326/1
விண்டிட எங்கள் இராமாநுச முனி வேழம் மெய்ம்மை – நாலாயி:2854/2
விம்ம வளர்ந்தவனே வேழமும் ஏழ் விடையும் விரவிய வேலை-தனுள் வென்று வருபவனே – நாலாயி:66/3
வில் பெரு விழவும் கஞ்சனும் மல்லும் வேழமும் பாகனும் வீழ – நாலாயி:1068/1

திரிபுரம் எரிய வேழ சிலை மதன் எரிய மூரல் திரு விழி அருள் மெய் ஞான குருநாதா – திருப்:124/5
வாகை வேடர் பேதை காதல வேழ மங்கையை புணர்ந்த வெற்ப கந்த செந்தில் வேளே – திருப்:469/6
வேழ முகற்கு தம்பி எனும் திரு முருகோனே – திருப்:839/7
புகர் முக வேழ கணபதியாருக்கு இளைய விநோத பெருமாளே – திருப்:934/8
வேடு கொண்டுள வேடா வேடைய வேழ வெம் புலி போலே வேடர்கள் – திருப்:997/13
விபுதர் குல வேழ மங்கை துங்க பரிமள படீர கும்ப விம்ப – திருப்:1016/15
காதும் வேழ சிலை பாரம் மீன கொடி காம வேள் மைத்துன பெருமாளே – திருப்:1105/8
வேலை விழி வேடச்சியார் கணவனே மத்த வேழ முகவோனுக்கும் இளையோனே – திருப்:1216/7
வேலை கட்டாணி மகாரத சூரர்க்கு சூரனை வேல் விடு வேழத்தில் சீர் அருள் ஊறிய இளையோனே – திருப்:877/6
வேழத்தின் ஆபத்தை மீள்வித்த மால் ஒக்க வேதத்திலே நிற்கும் அயனாரும் – திருப்:1033/6
மூழ்கு நீப ப்ரதாப மார்ப அத்த மூரி வேழத்தின் மயில் வாழ்வே – திருப்:1212/6
அடல் வடி வேல்கள் வாளிகள் அவைவிட ஓடல் நேர் படும் அயில் விழியாலும் மால் எனும் மத வேழத்து
அளவிய கோடு போல் வினை அளவளவான கூர் முலை அதின் முகம் மூடும் ஆடையின் அழகாலும் – திருப்:728/1,2
கடலை எள் பயறு நல் கதலியின் கனி பல கனி வயிற்றினில் அடக்கிய வேழம் – திருப்:409/2
கரும் கொற்ற மத வேழம் முனிந்துற்ற கலை மேவி கரந்து உள்ள மட மானின் உடனே சார் – திருப்:488/5
கொம்பு குத்தி சம்பு அழுத்தி திண் தலத்தில் தண்டு வெற்பை கொண்டு அமுக்கி சண்டை இட்டு பொரும் வேழம் – திருப்:593/6
வேழம் உண்ட விளா கனி அது போல மேனி கொண்டு வியாபக மயல் ஊறி – திருப்:653/1
விசையுறு காலம் புலன் நெறியே வெம் கனல் உயிர் வேழம் திரியாதே – திருப்:665/3
இசையுறவே அன்று அசைவு அற ஊதும் எழில் அரி வேழம் எனை ஆள் என்று – திருப்:665/5
முருகு அவிழ் தாரும் சூட்டி ஒரு தனி வேழம் கூட்டி முதல் மற மானின் சேர்க்கை மயல்கூர்வாய் – திருப்:676/6
வேழம் மீது உறையும் வஜ்ர தேவர் கோ சிறை விடுத்து வேதனாரையும் விடுத்து முடி சூடி – திருப்:1155/7
கற்பக வேழம் ஏய்வன பச்சிள ஏனல் மீது உறை கற்புடை மாது தோய் தரும் அபிராம – திருப்:1205/5
வேளை தனக்கு உசிதமாக வேழம் அழைத்த பெருமாளே – திருப்:1294/4

சமர வேழ முகாசுரன் சாய்ந்தனன் – வில்லி:5 102/1
வேழ மா முகத்தில் கை தலம் புடைத்தான் விழிகள் ஆயிரங்களும் சிவந்தான் – வில்லி:9 43/2
வெம் பராகம் வெளியில் உற்று எழுந்தபோது வேழ வில் – வில்லி:30 4/1
விக்ர மா மத தட கை வேழ வீரர் தம்முடன் – வில்லி:30 12/2
வேழ வெம் படையுடை வேந்தர் சூழவே – வில்லி:32 4/4
பிளவு உற்ற வேழ நுதல் நித்தில பெட்டி போலும் – வில்லி:36 34/4
விட்டவிட்ட ரத துரங்க வேழ வாகனத்தொடும் – வில்லி:40 40/1
துதி வெம் கை வேழ மறவர் பலரொடு துதி வெம் கை வேழ மறவர் துதையினர் – வில்லி:44 74/2
துதி வெம் கை வேழ மறவர் பலரொடு துதி வெம் கை வேழ மறவர் துதையினர் – வில்லி:44 74/2
வில்லாலும் வாளாலும் வேலாலும் பரி நெடும் தேர் வேழத்தாலும்
தொல் ஆண்மை தவறாமல் செரு மலைந்தோர் சான்றாக சூழ்ந்து நிற்ப – வில்லி:46 143/1,2

மறம் தந்த வேழத்துடன் பட்ட பகதத்தன் வலி கூறினார் – வில்லி:40 83/4
விஞ்சை கடவுள் சிகரம் நிகர் வேழத்துடனே விழ பொருதான் – வில்லி:40 70/2
வேந்தனும் மன்னவனுடன் பல் வேந்தரோடும் வெம் பனை கை பல கோடி வேழத்தோடும்
ஏந்து தடம் புய சிகரி வீமன்-தன்னோடு இகல் மலைந்து தொலைந்து இரிந்தார் இவரை அல்லால் – வில்லி:46 83/2,3
புண் புக உட்கி உழைக்கும் வேழம் போல்வான் – வில்லி:14 118/4
வெம் பரி தடம் தேர் வேழம் வேல் சிலை வடி வாள் வல்லோர் – வில்லி:28 21/2
களத்திடை மடிந்தன கலிங்கன் வேழம் என்று – வில்லி:30 20/1
மெய் போல் வெம் போர் செய்தன வீரன் விறல் வேழம்
பொய் போல் நின்ற வரு பகதத்தன் போர் வேழம் – வில்லி:32 35/3,4
பொய் போல் நின்ற வரு பகதத்தன் போர் வேழம் – வில்லி:32 35/4
வந்து சூழ வேழம் மீது வய மடங்கல் செல்வ போல் – வில்லி:40 28/3
அகன் பட்ட நுதல் வேழம் அன்னான் மேல் எறிந்து எறிந்திட்டு ஆர்த்த காலை – வில்லி:42 178/2
வீமன் வயம் புனை தேரினை விட்டு ஒரு வெம் போர் வேழம் மேல் கொண்டான் – வில்லி:44 6/4
சேண் உயர் போதர எழு முழம் உடையது தெவ்வர் அஞ்சும் அ வேழம் – வில்லி:44 10/4
பிளவுண்டு வேல் விழுதலின் மகிபதி பிழை கொண்ட வேழம் அனைய மெலிவினன் – வில்லி:44 80/1
மாலினால் பொரு கை வேழம் வாசி தேர் பதாதி மாய – வில்லி:45 111/3
மதம் படு வேழம் அன்ன மத்திரராசன்-தானும் – வில்லி:46 42/1
வெம் கையால் வாரும் கொற்ற வேழமா மேற்கொண்டானே – வில்லி:45 113/4
மன்னர் வேழமும் சேனையும் எதிரெதிர் மயங்க – வில்லி:27 61/1
வென்றி வேழமும் வேழமும் ஊர்ந்தன – வில்லி:29 20/2
வென்றி வேழமும் வேழமும் ஊர்ந்தன – வில்லி:29 20/2
மண்டினார் மணி முடியும் வேழமும் வாசியும் பல துணிபட – வில்லி:29 43/3
முற்ற வெம் பிண குவையும் வேழமும் முடுகு வாசியும் தேரும் மொய்ம்பு உற – வில்லி:31 26/3
எங்கும் தானும் வேழமும் ஆகி எதிர் சென்றான் – வில்லி:32 34/4
தேர்களும் துரங்கமொடு வேழமும் கலந்து வரு சேனை மண்டலங்களுடனே – வில்லி:38 30/2

வேழ வேட்டம் விதியின் வினாய – உஞ்ஞை:32/29
மறவோன் சேனை வேழ சங்கமும் – உஞ்ஞை:33/78
வெண் துகில் பூட்டிய வேழ குழவியும் – உஞ்ஞை:39/74
வேழ தாழ் கை காழொடு சேர்த்த – உஞ்ஞை:42/105
வேழ வேட்டத்து வீழ நூறி – உஞ்ஞை:54/132
குழிப்படு வேழ கூன் மருப்பு இரட்டையும் – உஞ்ஞை:58/83
விண் தோய் கானத்து வேழ வேட்டத்து – இலாவாண:10/12
வெம் சின வேழ வெகுளி நீக்கும் – இலாவாண:11/92
தோழர் சூழ வேழ மேல்கொண்டு – மகத:18/80
அடக்க_அரும் வேழ தட கை வீழவும் – மகத:20/46
பயிர் கொள் வேழத்து பணை எருத்து இரீஇ – உஞ்ஞை:38/124
விசைய வேழத்து இசை எருத்து ஏற்றி – உஞ்ஞை:39/39
பைம் கண் வேழத்து பகடு அன்று ஈர்ந்தது இவள் – உஞ்ஞை:45/41
வெம் முரண் வேழத்து வெம் சினம் அடக்கிய – உஞ்ஞை:47/80
பைம் கண் வேழத்து படை திறல் வேந்தன் – உஞ்ஞை:56/267
அணை மிசை அமர்தந்து அஞ்சுவரு வேழத்து
பணை எருத்து ஏற்றி பல்லவர் சூழ – இலாவாண:2/37,38
உத்தம வேழத்து உயர் புறம் பொலிய – இலாவாண:2/61
உருத்த மன்னர் ஊர்ச்சி வேழத்து
மருப்பு கை அமைத்து வாய் முதல்-தோறும் – இலாவாண:4/107,108
பைம் கண் வேழத்து பணை மருப்பு உலக்கையின் – இலாவாண:14/49
அழி கவுள் வேழத்து அணி எருத்து ஏற்றிய – மகத:5/34
வெம் சின வேழத்து வெகுட்சி நீக்கி – மகத:18/98
தகை மலி வேழம் தலைக்கடை இழிதந்து – உஞ்ஞை:32/99
வேழம் விலக்கிய யாழொடும் செல்க என – உஞ்ஞை:33/139
மத வலி வேழம் மையலுறுத்த – உஞ்ஞை:37/232
உயிர் நடுக்குறாஅ வேழம் பண்ணி – உஞ்ஞை:38/121
கூற்ற வேழம் குணம் சிதைந்தது-கொல் என்று – உஞ்ஞை:43/135
வேக உள்ளத்து வேழம் தெரிந்து – இலாவாண:2/195
கூற்ற வேழம் அடக்கிய குமரற்கு – இலாவாண:8/80
கூற்று உறழ் வேழம் குணம் சிதைந்து அழிய – இலாவாண:9/43
மையல் வேழம் அடக்கிய மன்னனை – இலாவாண:9/69
தெருட்டுதற்கு ஆய இ தீ குறி வேழம்
யாதின் சிதைந்தது அஃது அறிய உரைக்க என – இலாவாண:9/79,80
விசை உடை வேழம் வணக்கும் விச்சையும் – இலாவாண:11/155
நீல வேழம் நினைந்து உழன்றாங்கு – இலாவாண:19/212
புதிதின் கொண்ட பூ கவின் வேழம்
பணி செய பிணிக்கும் பாகர் போல – மகத:1/34,35
விலக்க_அரும் வேழம் விடுதிராயின் – மகத:5/102
பெரு வலி வேழம் பிணித்திசினாஅங்கு – மகத:17/42
வீழ நூறி வேழம் தொலைச்சி – மகத:17/247
வனப்பொடு புணர்ந்த வார் கவுள் வேழம்
சின போர் அண்ணற்கு செல்க என போக்கி – மகத:18/69,70
வெம் முரண் வேழம் வீழ்த்து மாற்றார் – மகத:20/66
வென்றோன் ஏறிய வேழம் சார்ந்து அவன் – மகத:20/107
வெற்றி முரசம் வேழம் ஏற்றி – மகத:27/182
வேழம் எல்லாம் – வத்தவ:3/93
அழி கவுள் வேழம் அடக்கும் நல் யாழ் – வத்தவ:5/13
அஞ்சா பைம் கண் ஓர் வெம் சின வேழம்
எழு வகை மகளிர் இன்பம் எய்தி – நரவாண:3/76,77
வேழம் பிறவும் விழைதக்கது என – நரவாண:3/86
வேழம் நினைஇ வேட்கை மீதூர்ந்து – நரவாண:3/95
விரை செலல் இவுளியொடு வெம் கண் வேழம்
பசும்பொன் ஓடை பண்ணொடு கொடுப்பினும் – நரவாண:5/10,11
கோடு உடை வேழம் பாடு பெற பண்ணி – நரவாண:7/18
வேழமும் புரவியும் பண்ணுக விரைந்து என – உஞ்ஞை:56/188
உளை பொலி மாவும் வேழமும் ஊர்ந்து அவர் – உஞ்ஞை:56/229
விரை பரி மாவும் வேழமும் தேரும் – உஞ்ஞை:57/50
மை அணி வேழமும் மாவும் பண்ணி – இலாவாண:12/37
ஏறுதற்கு அமைந்த இரும் கவுள் வேழமும்
வீறுபெற பண்ணி விரைந்தன வருக – மகத:19/94,95
வேழமும் புரவியும் ஊழூழ் விரைஇ – மகத:19/211
மாவும் வேழமும் மா மணி தேரும் – மகத:24/152
அதிர் குரல் வேழமும் புரவியும் அடக்கி – மகத:27/47
வார் கவுள் வேழமும் வசத்தது அன்றி அவன் – மகத:27/165
ஒரு நூறு ஆகிய உயர் நிலை வேழமும்
கோலம் ஆன கோபத்தில் பிறந்தன – வத்தவ:11/31,32
மாவும் வேழமும் வழக்கு நனி நீக்கி – வத்தவ:15/139
வெற்ற தானையும் வேழமும் நீக்கி – நரவாண:2/10
வீர நோக்கினர் வேழமொடு வீழவும் – மகத:20/61

உறை கவுள் வேழ கைஅகம் புக்கு – வஞ்சி:30/121
திகை_முக வேழத்தின் செவிஅகம் புக்கன – வஞ்சி:25/155
நண்ணிய நூற்றுவர் நகை_வேழம்பரும் – வஞ்சி:26/131
நகை வேழம்பரொடு வகை தெரி இருக்கையும் – புகார்:5/53
வில் பொலியும் சேனையும் மா வேழமும் கற்பு உண்ண – மது:21/59

காணுதற்கு இனிய வேழ கன்றொடு களிக்கும் முன்றில் – பால:16 7/2
மேவலாம் தகைமைத்து அல்லால் வேழ வில் தட கை வீரற்கு – பால:18 15/1
சிந்துரமும் இங்கு இவை செறிந்த மத வேழ
பந்திகள் வய பரி பசும்பொனின் வெறுக்கை – அயோ:3 97/2,3
வீட்டுண்டு அலறும் குரலால் வேழ குரல் அன்று எனவே – அயோ:4 81/1
கலந்த முத்து என வேழ முத்து இமைப்பன காணாய் – அயோ:10 6/4
வேழ நெடும் படை கண்டு விலங்கிடும் வில்லாளோ – அயோ:13 15/2
குறிகொளா மத வேழ குழு அனார் – ஆரண்:7 27/2
கானே காவல் வேழ கணங்கள் கத வாள் அரி கொன்ற – சுந்:8 41/1
தின்று தீர்குதும் என்குநர் உரும் என தெழிக்குநர் சின வேழ
கன்று புல்லிய கோள் அரி குழு என கனல்கின்ற தறுகண்ணார் – யுத்1:3 81/3,4
நகங்களின் பெரிய வேழ நறை மத அருவி காலும் – யுத்2:15 145/1
விலங்கினிர் போலும் வெள்ளம் நூற்றை ஓர் வில்லின் வேழ
குலங்களினோடும் கொல்ல கூடுமோ என்ன கொன்றை – யுத்3:22 157/2,3
மின்னும் ஓடை ஆடல் வய போர் மிடல் வேழ
கன்னம் மூலத்து அற்றன வெண் சாமரை காணீர் – யுத்4:33 13/1,2
வீரனார் உடல் துறந்து விண் புக்கார் கண் புக்க வேழ வில்லால் – யுத்4:38 28/2
வென்றி வெம் சின வேழங்கள்-தம்மொடும்
துன்று வாசி தொகைகளும் கேண்ம் எனா – யுத்4-மிகை:33 1/2,3
விண் தொடர் நெடு வரை தேனும் வேழத்தின்
வண்டு உளர் நறு மத மழையும் மண்டலால் – கிட்:1 12/1,2
உண்டை கொள் மத வேழத்து ஓடைகள் அணிவாரும் – பால:23 28/4
இரு கை வேழத்து இராகவன் தன் கதை – பால-மிகை:0 9/2
விருந்து ஆகின்றாய் என்றனள் வேழத்து அரசு ஒன்றை – அயோ:6 20/3
ஓளிம் முற்றாது உற்று உயர் வேழத்து ஒளிர் வெண் கோடு – யுத்4:33 14/1
வேழத்துக்கு இடு-மின் என விட்டான் – யுத்1:3 90/4
இடி கொள் வேழத்தை எயிற்றொடும் எடுத்து உடன் விழுங்கும் – அயோ:10 35/1
விட்டன நெடு வரை வேழம் வேழத்தை
முட்டின ஒத்தன முகத்தின் வீழ்வன – யுத்2:18 90/3,4
வந்தது வேழம் என்ன மயில் என இரியல் போவார் – பால:14 54/4
நீர் சிறை பற்றி ஏறா நின்ற குன்று அனைய வேழம் – பால:14 59/4
வேரொடும் கொடு கிரி என நடந்தது ஓர் வேழம் – பால:15 2/4
வெண் நிற நறும் பொடி புனைந்த மத வேழம் – பால:15 19/4
மீன் எனும் பிடிகளோடும் விளங்கும் வெண் மதி நல் வேழம்
கூனல் வான் கோடு நீட்டி குத்திட குமுறி பாயும் – பால:16 4/1,2
புது கொண்ட வேழம் பிணிப்போர் புனை பாடல் ஓதை – பால:16 46/1
இம்பரால் பிணிக்க அரும் இராம வேழம் சேர் – பால-மிகை:0 18/3
வேகம் அடங்கிய வேழம் என்ன வீழ்ந்தான் – அயோ:3 15/4
விட்ட சென்றன விடா மத மழை அன வேழம்
வட்ட வேங்கையின் மலரொடும் ததைந்தன வயங்கும் – அயோ:10 8/2,3
நெடிய கை எடுத்து நீட்டி நீந்தின நெடும் கை வேழம் – அயோ:13 49/4
மெய்கள் நோகின்ற பிடிகளை விரும்பிய வேழம்
கைகள் நோகில தாங்கின நிற்பன காணாய் – அயோ-மிகை:10 1/3,4
பிடி எலாம் மதம் பெய்திட பெரும் கவுள் வேழம்
ஒடியுமால் மருப்பு உலகமும் கம்பிக்கும் உயர் வான் – ஆரண்:7 71/1,2
மின்னும் வால் உளை மடங்கலை முனிந்தன வேழம்
துன்னினால் என சுடு சினத்து அரக்கர்-தம் தொகுதி – ஆரண்:7 74/3,4
உறங்கல பிறங்கல் அயல் நின்ற உயர் வேழம் – கிட்:10 74/4
நின்றன திசை-கண் வேழம் நெடும் களி செருக்கு நீங்க – சுந்:8 18/1
விசையின் திண் பணை வெம் சின வேழம் – யுத்1:3 91/4
ஓடின புரவி வேழம் ஓடின உருளை திண் தேர் – யுத்2:16 168/1
விட்டன நெடு வரை வேழம் வேழத்தை – யுத்2:18 90/3
முழங்கின முரசம் வேழம் முழங்கின மூரி திண் தேர் – யுத்2:18 184/1
குறை தலை வேழம் வீழ விசும்பின்-மேல் கொண்டு நின்றான் – யுத்2:18 221/3
ஓளி ஒண் கணைகள்-தோறும் உந்திய வேழம் ஒற்றை – யுத்2:19 96/1
மீண்டனர் குரக்கு வீரர் விழுந்தன சின கை வேழம்
தூண்டின கொடி தேர் அற்று துணிந்தன தொடுத்த வாசி – யுத்3-மிகை:22 6/2,3
ஒழுகி பாயும் மு மத வேழம் உயிரோடும் – யுத்4:33 7/1
பொன்னின் ஓடை மின் பிறழ் நெற்றி புகர் வேழம்
பின்னும் முன்னும் மாறின வீழ்வின் பிணையுற்ற – யுத்4:33 11/1,2
வெருவரும் முழக்கு என வேழம் ஆர்த்து எழ – யுத்4-மிகை:41 221/3
மானும் வேழமும் நாகமும் மாதர் தோள் – பால:16 25/3
மானும் வேழமும் நாகமும் மாடு எலாம் – பால:16 25/4
ஆவும் மாவும் அழி கவுள் வேழமும்
மேவு காதல் நிதியின் வெறுக்கையும் – அயோ:11 32/2,3
வேய் உயர் குன்றும் வென்றி வேழமும் பிறவும் எல்லாம் – சுந்:1 17/2
பருமித்த கிரியின் தோன்றும் வேழமும் பதுமத்து அண்ணல் – சுந்:8 4/2
வெம் மலை வேழமும் பொருத வேறு இனி – யுத்2:16 251/3
வில் இடும் முகில் என பொலிந்த வேழமே – பால:14 10/4
பிடியொடு நடந்தன பெரும் கை வேழமே – அயோ:12 28/4

கந்து அடையும் வேழ கடைத்தலை-வாய் வந்து அடைந்த – நள:65/2
வெம் தறுகண் வேழத்தை வேரி கமலத்தின் – நள:6/1
முன்னின்றான் வேழம் முதலே என அழைப்ப – நள:3/3
வேழக்கரும்பு
வேழக்கரும்பு

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

1 thought on “வேழம்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *