Skip to content

சொல் பொருள்

வேள்விசெய், விரும்பு, மணம்புரி, வேளிர் குலத்தான், முருகன், வேட்கை

சொல் பொருள் விளக்கம்

முருகன்

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

offer sacrifices, long for, marry, one belonging to the Velir class, Lord Muruga, craving

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

வேளா பார்ப்பான் வாள் அரம் துமித்த
வளை களைந்து ஒழிந்த கொழுந்தின் அன்ன – அகம் 24/1,2

வேள்வி செய்யாத பார்ப்பான் அறுக்கும் அரத்தால் துண்டாக்கி எடுத்த
வளையல்கள் போக எஞ்சிய சங்கின் தலைப்பகுதியைப் போன்ற

நனவினான் வேறு ஆகும் வேளா முயக்கம் – கலி 68/21

உண்மையில் உன் மனம் வேறிடத்தில் இருக்கும் நீ விரும்பாத முயக்கத்தை

விளங்கு இழை பொலிந்த வேளா மெல் இயல்
சுணங்கு அணி வன முலையவளொடு நாளை
மணம்புகு வைகல் ஆகுதல் ஒன்றோ – புறம் 341/9-11

விளங்குகின்ற இழைகளால் பொற்புமிக்க மணமாகாத மெல்லிய இயல்பினையும்
சுணங்கு பரந்த அழகிய முலையினையுடைய அவளுடனே நாளையே
மணம்புரிந்துகொள்ளும் நாள் ஆகுதல் ஒன்று

விளங்கு பெரும் திருவின் மான விறல் வேள்
அழும்பில் அன்ன நாடு இழந்தனரும் – மது 344,345

விளங்கும் பெரிய செல்வத்தினை உடைய மான விறல் வேள்(என்னும் குறுநில மன்னனுடைய)
அழும்பில் என்னும் ஊரை ஒத்த நாடுகளை இழந்தவர்களும்,

ஆண்டகை விறல் வேள் அல்லன் இவள்
பூண் தாங்கு இள முலை அணங்கியோனே – ஐங் 250/4,5

ஆண்தகைமை உள்ள வெற்றி சிறக்கும் முருகவேள் அல்லன் – இவளின்
பூண் விளங்கும் இளமையான முலைகளை நோயுறச் செய்தவன்

தோள் நலம் உண்டு துறக்கப்பட்டோர
வேள் நீர் உண்ட குடை ஓர் அன்னர் – கலி 23/9

தோள்களை அணைத்துச் சுகம் கண்டபின் கைவிடப்பட்டவர்கள்
மிக்க அவாவுடன் நீர் குடித்துவிட்டுத் தூக்கியெறிந்துவிட்ட பனையோலைக் குடைக்கு ஒப்பானவர்கள்;
வேணீர் உண்டோர் – வேட்கையால் நீர் உண்டோர் – மா.இரா.உரை விளக்கம்.

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *