சொல் பொருள்
வெந்தது
சொல் பொருள் விளக்கம்
வெந்தது
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
that which is cooked or boiled in water or fried in oil
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: துராஅய் துற்றிய துருவை அம் புழுக்கின் பராஅரை வேவை பருகு என தண்டி – பொரு 103,104 அறுகம் புல் கட்டுக்களை கவ்வித்தின்ற செம்மறிக்கிடாயின் அழகிய புழுக்கப்பட்ட(இறைச்சியின்) பெரிய (மேல்)தொடை நெகிழ வெந்ததனைத் ‘உண்பாயாக’ என்று வற்புறுத்தி, பரூஉ குறை பொழிந்த நெய்க்கண் வேவையொடு குரூஉ கண் இறடி பொம்மல் பெறுகுவிர் – மலை 168,169 பெரிய பெரிய தசைகள் மிகுதியாகப்போட்ட நெய்யின்கண் வெந்த பொரியலுடன், (மிகுந்த)நிறங்கொண்ட கண்போன்ற (பருக்கைகளாலான)தினைச்சோற்றுக் குவியலைப் பெறுவீர்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்