சொல் பொருள்
(பெ) 1. கோசர் குடித் தலைவன் – ஒரு சிறந்த வள்ளல்
2. சோழமன்னனின் மகள்
சொல் பொருள் விளக்கம்
1. கோசர் குடித் தலைவன் – ஒரு சிறந்த வள்ளல்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
a philanthropist
daughter of a chozha king
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: இன் கடும் கள்ளின் அஃதை களிற்றொடு நன்கலன் ஈயும் நாள்மகிழ் இருக்கை – அகம் 76/3,4 இனிய கடுங்கள்ளினையுடைய அஃதை என்பவனின், யானைகளோடு நல்ல அணிகலன்களையும் ஈயும் அத்தாணிமண்டப அமர்வு (நாளோலக்கம்) – மா வீசு வண் மகிழ் அஃதை போற்றி – அகம் 113/4 அம் கலுழ் மாமை அஃதை தந்தை அண்ணல் யானை அடுபோர்ச் சோழர் – அகம் 96/12,13 அழகு ஒழுகும் மாமை நிறத்தினையுடைய அஃதை என்பவளின் தந்தையாகிய பெருமை தங்கிய யானையைக்கொண்ட, போரில் அழிக்கும் சோழர் – பார்க்க – அகுதை
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்