சொல் பொருள்
(பெ) நடு, உள், வயிறு,
சொல் பொருள் விளக்கம்
நடு, உள், வயிறு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
middle, interior, belly
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அகடு சேர்பு பொருந்தி அளவினில் திரியாது – மலை 33 (பொல்லம் பொத்துதல்) நடுவே சேரப்பட்டுக் கண்ணுக்கினியதாய் அளவிலே மாறுபடாமல் அகடு நனை வேங்கை வீ கண்டு அன்ன – புறம் 390/21 உள்ளிடம் நனைந்த வேங்கைப் பூவைக் கண்டாலொத்த குருகு உடைத்து உண்ட வெள் அகட்டு யாமை – ஐங் 81/1 நாரை உடைத்து உண்ட வெண்மையான வயிற்றை உடைய ஆமை
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்