Skip to content

சொல் பொருள்

(பெ) 1. சேரநாட்டில் ஓர் இடம், 2. கோட்டை, அரண், 

சொல் பொருள் விளக்கம்

1. சேரநாட்டில் ஓர் இடம்

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

a city in chera country

fort, protective structure

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

குட்டுவன்
அகப்பா அழிய நூறி செம்பியல்
மதில் தீ வேட்ட ஞாட்பினும் – நற் 14/3-5

பல்யானைச் செல்கெழு குட்டுவன்
அகப்பா என்னும் நகரை அழித்து, அங்கே செம்பினால் இயன்றுள்ள
மதிலைத் தீயிட்டு அழித்த போரில் எழுந்த ஆரவாரத்திலும்
– இங்கே குறிக்கப்பெறும் அகப்பா மலையாள மாவட்டத்து வள்ளுவ நாட்டுப்பகுதியில் இருந்து
மறைந்தது; அதன் நினைவுக்குறியாக மீப்பா, மீப்பாயூர் என்ற பெயருடன் ஒரு பகுதி நிற்கிறது.
– ஔவை.சு.து, உரை, விளக்கம்

இங்கே செம்பியல் என்பதனைச் செம்பியன் என்று கொள்வார் பின்னத்தூரார். செம்பியன் என்பவன்
சோழன். எனவே இங்கு உரை முற்றிலும் மாறுபடுகிறது.

குட்டுவன்
அகப்பா அழிய நூறி செம்பியன்
மதில் தீ வேட்ட ஞாட்பினும் – நற் 14/3-5

சேரலாதனது
கழுமலத்தின் மதில் ஒருங்கழிய இடித்தொழித்து, கிள்ளிவளவன்
அற்றைப்பகலே அவ்வூரைத் தீயினவாய்ப்பெய்த போரினுங்காட்டில்
– எனவே பின்னத்தூரார் அகப்பா என்பதைக் கழுமலம் என்று கொள்கிறார் என அறிகிறோம்.
– செம்பியன் என்பான் கிள்ளிவளவன் என்றும் அவனால் அழிக்கப்பட்ட மதில் கழுமலத்தில் இருந்தது
என்றும் பழைய உரையாசிரியர் கூறுவர் என்கிறார் கு.வெ.பா (NCBH). இவர்கள் அகப்பா என்பதைக்
கோட்டை என்று பொருள்கொண்டிருக்கிறார்கள்.

ஆனால், பதிற்றுப்பத்துப் பாடல் ஔவை.சு.து.அவர்களின் கூற்றுக்கு வலிமை சேர்க்கிறது

கடி மிளை குண்டு கிடங்கின்
நெடு மதில் நிரை பதணத்து
அண்ணல் அம் பெரும் கோட்டு அகப்பா எறிந்த
பொன் புனை உழிஞை வெல் போர் குட்டுவ – பதி 22/24-27

பாதுகாப்பான காவல்காடும் ஆழமான அகழியும் கொண்ட,
நெடிய மதிலில் வரிசையாய் அமைந்த உயர்ந்த மேடைகளையும் கொண்ட,
பெருமை மிக்க அழகிய பெரிய சிகரங்களைக் கொண்ட அகப்பா என்னும் கோட்டையை அழித்த
பொன்னால் செய்த உழிஞை மாலையை அணிந்த வெல்லுகின்ற போரைச் செய்யும் குட்டுவனே!

இங்குக் குட்டுவன் எனப்படுபவன் பல்யானைச்செல்கெழுகுட்டுவன்.

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *