சொல் பொருள்
(வி.அ) 1. முற்றிலும், 2. பெரிதாக,
2. (வி.எ) நீங்கும்படியாக,
சொல் பொருள் விளக்கம்
1. முற்றிலும்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
entirely, wide, to leave
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஆறு செல் வருத்தம் அகல நீக்கி – பொரு 93 வழிபோன வருத்தத்தை என்னிடத்துச் சிறிதும் நில்லாமற் போக்கி ஏழையை என்று அகல நக்கு வந்தீயாய் நீ – கலி 114/5 கோழையே’ என்று பெரிதாகச் சிரித்துவிட்டு வருவாய் நீ சேண் புலம்பு அகல இனிய கூறி – மலை 167 தொலைவிலிருந்து வந்த உம் வருத்தம் நீங்க இனிய மொழிகள் கூறி
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்