Skip to content

சொல் பொருள்

(பெ) 1. மார்பு, 2. விரிவு, 3. விசாலம், 4. பெரியதன்மை,

சொல் பொருள் விளக்கம்

1. மார்பு,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

chest, width, extent expanse, greatness

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

தண் தார் அகலம் வண்டு இமிர்பு ஊத – நற் 235/8

குளிர்ந்த மாலை அணிந்த மார்பினில் வண்டுகள் ஒலிப்புடன் தேனருந்த

அணியொடு வந்து ஈங்கு எம் புதல்வனை கொள்ளாதி
மணி புரை செம் வாய் நின் மார்பு அகலம் நனைப்பதால் – கலி 79/7,8

பரத்தையர் மனையில் அணிந்துகொண்ட அணியோடு வந்து இங்கு எம் புதல்வனை தூக்கிக்கொள்ளவேண்டாம்,
பவழம் போன்ற அவனது சிவந்த வாயிலிருந்து ஒழுகும் நீர் உன் அகன்ற மார்பை நனைப்பதால்,

நின் தோற்றமும் அகலமும் நீரின் உள – பரி 4/30

உனது வெளிப்பாடும், விசாலமும் கடலினிடத்தில் உள்ளன;

போற்றார் பொறுத்தலும் சூழ்ச்சியது அகலமும்
வலியும் தெறலும் அளியும் உடையோய் – புறம் 2/7,8

பகைவரைப் பொறுத்தலும், பொறுக்கமுடியாவிட்டால் அவரை அழிக்கச் சூழும் உசாவினது பெருமையும்
மனவலியும், அவரை அழித்தலும், அவருக்கு அருள் செய்யும் அருளும் உடையோய்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *