சொல் பொருள்
அகவிக் கூறுதலான் (அழைத்தல்) அகவல் எனக் கூறப்பட்டது
சொல் பொருள் விளக்கம்
அகவிக் கூறுதலான் (அழைத்தல்) அகவல் எனக் கூறப்பட்டது. அஃதாவது, கூற்றும் மாற்றமும் ஆகி ஒருவன் கேட்ப அவற்கு ஒன்று செப்பிக் கூறாது தாம் கருதிய வாறெல்லாம் வரையாது சொல்வதோர் ஆறும் உண்டு. அதனை வழக்கின் உள்ளார் அழைத்தல் என்றும் சொல்லுப; அங்ஙனஞ் சொல்லுவார் சொல்லின்கண் எல்லாம் தொடர்ந்து கிடந்த ஓசை அகவல் எனப்படும்; அவை: தச்சுவினைமாக்கள் கண்ணும், களம்பாடும் வினைஞர் கண்ணும், கட்டுங்கழங்கு மிட்டு உரைப் பார் கண்ணும், தம்மில் உறழ்ந்துரைப்பார் கண்ணும், பூசல் இசைப்பார்கண்ணும் கேட்கப்படும். கழங்கிட்டு உரைப்பார் அங்ஙனமே வழக்கின் உள்ளதாய்க் கூறும் ஓசை ஆசிரியப்பா எனப்படும் என்றவாறு. (தொல். பொருள். 393. பேரா.)
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்