Skip to content
அகில்

அகில் என்பதுஒரு வகை வாசனை மரம்

1. சொல் பொருள்

(பெ) ஒரு வகை வாசனை மரம்

2. சொல் பொருள் விளக்கம்

கள்ளி வயிற்றின் அகில் பிறக்கும்; மான் வயிற்றுள் ஒள்ளரி தாரம் பிறக்கும்; பெருங்கடலுள் பல்விலைய முத்தம் பிறக்கும்; அறிவார் யார், நல்லாள் பிறக்கும் குடி?

ஒரு வகைக் கள்ளிச்செடியின் வயிற்று வயிரத்தில்தான் அகில் பிறக்கும்

மொழிபெயர்ப்புகள்

3. ஆங்கிலம்

Eagle-wood, Aquilaria agallocha

அகில்
அகில்

4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு

அகில் ஆர் நறும் புகை ஐது சென்று அடங்கிய – புறம் 337/10

அகிலின் நிறைந்த மணமுள்ள புகை மெல்லிதாகச் சென்று அடங்கிய

குடமலைப் பிறந்த ஆரமும் அகிலும், நான்மணிக்கடிகை 4

அகிலும், துகிலும், ஆரமும், வாசமும்,

பட்டினப்பாலை 188

சிலப்பதிகாரம் 110

கள்ளி வயிற்று இன் அகில் பிறக்கும் மான் வயிற்று - நான்மணி:4/1

கொல்லை புனத்த அகில் சுமந்து கல் பாய்ந்து - ஐந்70:2/1

மேகம் தோய் சாந்தம் விசை திமிசு காழ் அகில்
நாகம் தோய் நாகம் என இவற்றை போக - திணை150:28/1,2

கள்ளி அகிலும் கரும் காக்கை சொல்லும் போல் - பழ:87/1

வேறு பல் துகிலின் நுடங்கி அகில் சுமந்து - திரு 296

அகில் உண விரித்த அம் மென் கூந்தலின் - சிறு 263

காழ் அகில் அம் புகை கொளீஇ யாழ் இசை - குறி 110

அகில் சுடு கானவன் உவல் சுடு கமழ் புகை - நற் 282/7

அமிழ்தம் ஊறும் செம் வாய் கமழ் அகில்/ஆரம் நாறும் அறல் போல் கூந்தல் - குறு 286/2,3

நறை அகில் வயங்கிய நளி புன நறும் புகை - குறு 339/1

பங்கம் செய் அகில் பல பளிதம் - பரி 10/82

அகில் கெழு சாந்தம் மாற்றி ஆற்ற - பரி 12/13

ஆவி உண்ணும் அகில் கெழு கமழ் புகை - பரி 17/30

ஏனல் இதணத்து அகில் புகை உண்டு இயங்கும் - கலி 39/8

அகில் ஆர் நறும் புகை ஐது சென்று அடங்கிய - புறம் 337/10

கனல் பொருத அகிலின் ஆவி கா எழ - பரி 10/72

நறையும் நரந்தமும் அகிலும் ஆரமும் - பொரு 238

நறு வீ நாகமும் அகிலும் ஆரமும் - சிறு 116

குட மலை பிறந்த ஆரமும் அகிலும்/தென் கடல் முத்தும் குண கடல் துகிரும் - பட் 188,189

இரும் காழ் அகிலொடு வெள் அயிர் புகைப்ப - நெடு 56

எரி உருகு அகிலோடு ஆரமும் கமழும் - பரி 18/53
அகில் மரம்
அகில் மரம்
அறம் செய் மாக்கள் அகில் முதல் புகைந்து - மணி:28/13

நான நல் அகில் நறும் புகை அன்றியும் - புகார்:2/67

குண திசை மருங்கின் கார் அகில் துறந்து - புகார்:4/36

காழ் அகில் சாந்தம் கமழ் பூம் குங்குமம் - மது:13/115

முகில் தோய் மாடத்து அகில் தரு விறகின் - மது:14/98

காழகம் செறிந்த உடையினன் காழ் அகில்
சாந்து புலர்ந்து அகன்ற மார்பினன் ஏந்திய - மது: 22/91,92

அகில் உண விரித்த அம் மென் கூந்தல் - வஞ்சி:28/17

யானை வெண் கோடும் அகிலின் குப்பையும் - வஞ்சி:25/37

தூசும் துகிரும் ஆரமும் அகிலும்
மாசு அறு முத்தும் மணியும் பொன்னும் - புகார்: 5/18,19

அகிலும் துகிலும் ஆரமும் வாசமும் - மது:14/108

ஒள் அகில் புகை திரண்டது ஒக்கும் மா மணி புறா - சிந்தா:1 70/3

அணி நிலம் மெழுகி சாந்தின் அகில் புகைத்து அம் பொன் போதில் - சிந்தா:1 113/3

அருமை சான்ற அகில் புகை வாசமும் - சிந்தா:1 130/2

இன் அகில் கொழும் புகை உயிர்க்கும் ஈர்ம் குழல் - சிந்தா:1 185/1

தாது உகு தாமம் அணிந்து அகில் விம்மிய - சிந்தா:1 229/3

அஞ்சும் அ மயானம் தன்னுள் அகில் வயிறு ஆர்ந்த கோதை - சிந்தா:1 301/2

தேக்கண் இன் அகில் தேனொடு கூட்டு அமைத்து - சிந்தா:3 534/1

நல் அகில் விம்மு கட்டில் தவிசொடு நிலை கண்ணாடி - சிந்தா:3 558/2

அகில் புகை தவழ்ந்து வானத்து அரு விசும்பு அறுத்து நீண்டு - சிந்தா:3 600/2

கரு நெறி பயின்ற குஞ்சி காழ் அகில் கமழ ஊட்டி - சிந்தா:3 696/1

இனிது இழிந்து இளையர் ஏத்த இன் அகில் கொழும் புகை - சிந்தா:3 704/3

அகில் கொண்ட கொள்ளி வட்டம் ஆருயிர் மேயும் நேமி - சிந்தா:3 796/1

முரிந்த மொய் திரை போன்ற அகில் புகை - சிந்தா:4 861/2

அகில் தரு கொழும் புகை மாடத்து ஆய் பொனின் - சிந்தா:5 1251/1

கொழு மென் இன் அகில் கூட்டுறும் மென் புகை - சிந்தா:5 1350/1

கலந்து அகில் நாறும் அல்குல் கவான் மிசை கொண்டிருந்தாள் - சிந்தா:5 1397/3

ஆங்கு எலாம் அகில் புகை அளாய வசமும் - சிந்தா:6 1440/3

தாம்பலரும் மருட்ட அகில் தவழும் தண் பூவணை - சிந்தா:7 1656/3

கன்னி கலிங்கம் அகில் ஆர்ந்து கவவி கிடந்த குறங்கினாள் - சிந்தா:7 1658/2

ஆய்ந்த தாமங்கள் நாற்றி அகில் புகை - சிந்தா:7 1714/2

ஆர் அகில் சேக்கை நீங்கி வெறு நிலத்து அடிகள் தாமே - சிந்தா:7 1720/1

பூம் துகில் கொடுத்த தீம் தேன் அகில் புகை பொன் அனார்-தம் - சிந்தா:7 1855/1

பூத்து அகில் தவழும் போர்வை பூசு சாந்து ஆற்றி பொன் நூல் - சிந்தா:8 1906/1

அண்ணல் நன் மாடத்து அங்கண் அகில் புகை அமளி ஏறி - சிந்தா:8 1984/2

கோல அகில் தேய்வை கொழும் சாந்தம் முலை மெழுகி - சிந்தா:9 2018/2

ஏந்து மலர் சேக்கை அகில் வளர்த்த இடு புகையும் - சிந்தா:9 2032/1

கூந்தல் அகில் புகையும் துகில் கொழும் மென் நறும் புகையும் - சிந்தா:9 2032/3

தாழ நாற்று-மின் தாமங்கள் அகில் குடம் பரப்பி - சிந்தா:12 2391/2

கிளர்ந்து அகில் சாந்து பூ கமழ்ந்து கேழ் கிளர் - சிந்தா:12 2408/2

ஆர் அகில் புகை வெறியினால் அமைத்து - சிந்தா:12 2422/3

அகில் கமழ் அங்கை சேப்ப அரிவையர் அலங்கல் தாங்கி - சிந்தா:12 2540/2

மறைந்த அகில் புகையான் மன்னர் மன்னன் வலம் செய்து - சிந்தா:12 2560/2

விம் அகில் புகையின் மேவி உடம்பினை வேது செய்து - சிந்தா:13 2667/1

இழிந்து கீழ் நிலை இன் அகில் சேக்கை மேல் - சிந்தா:13 2673/1

அரிவையர் பூசி ஆடி அகில் புகை ஆவி ஊட்டி - சிந்தா:13 2737/3

இன் அகில் ஆவி விம்மும் எழு நிலை மாடம் சேர்ந்தும் - சிந்தா:13 2840/1

அவணத்தவர் கூந்தல் அகில் புகையை - சிந்தா:13 2853/1

கூந்தல் அகில் புகையும் வேள்வி கொழும் புகையும் - சிந்தா:13 2977/1

தழு மலர் தாமம் நான்று சந்து அகில் மணந்து விம்மும் - சிந்தா:13 2993/1

மங்குலாய் அகில் புகை மணந்து கற்பக - சிந்தா:13 3000/1

மாலை-வாய் அகில் தவழ் குஞ்சி மாற்றலின் - சிந்தா:13 3032/3

மணி உமிழ் திரு கேசம் வானவர் அகில் புகையும் - சிந்தா:13 3087/1

நாங்கு கார் அகில் குங்குமம் இலவு நாரத்தை - சீறா:26/3

கிடந்த சந்தனம் கார் அகில் கிளை மணி கரி கோடு - சீறா:32/1

மரு மணம் பெறும் சந்து அகில் சண்பக வனத்தில் - சீறா:75/3

மான்மத குவையும் சந்தன தொகையும் மணி கரும் காழ் அகில் துணியும் - சீறா:84/1

அணி பெற ஒழுங்காய் வயின்வயின் திரண்ட அகில் புகை முகில் இனம் எனவும் - சீறா:88/1

போற்றும் காழ் அகில் புகை குழல் நிலம் புரண்டு அசைய - சீறா:209/3

குறைவு இல் சந்து அகில் செறி நெடு வரை குறுகினரே - சீறா:842/4

அகில் புகை வயங்கு மாடம் அணி அணி இமயம் போன்றும் - சீறா:920/1

சந்து அகில் கலவை சேறு தடவிய மகுட வீதி - சீறா:925/2

சந்து அகில் திலகம் குரவு தேக்கு ஆரம் தான்றி கோங்கு ஏழிலைம்பாலை - சீறா:1002/1

மந்தர மதிள் மண்டபத்திடை புகுந்து மலர் குழற்கு அகில் புகை மாட்டார் - சீறா:1014/3

பூணு நல் இழை பூணு-மின் குழற்கு அகில் புகை-மின் - சீறா:1101/1

புனை முகில் குலம் ஒத்து என அகில் புகைத்திடுவார் - சீறா:1115/4

பொங்கு பல் நறையூட்டிய காழ் அகில் புகைப்பது - சீறா:1117/2

சுமை இருள் காவின் முகில் தவழ்ந்து என்ன சுரி குழற்கு அகில் புகை கமழ்த்தி - சீறா:1201/4

கது அகில் கரிய கூந்தல் காரிகை பாத்திமா-தம் - சீறா:3042/3

புரி குழற்கு அகில் புகைத்து வெண் புது மலர் புனை-மின் - சீறா:3113/2

துறும ஊட்டு அகில் பழம் புகை களங்கு அற துடைப்பார் - சீறா:3118/4

பந்தி பந்தியின் நிறுவி ஒள் அகில் வளை பரப்பி - சீறா:3122/2

விரிந்த சந்து அகில் வயின்வயின் புகைத்திடல் விளங்கி - சீறா:3134/3

கந்தம் நிறை செண்பகம் அகில் கடு உடுப்பை - சீறா:4131/2

வேறு பல் துகிலின் நுடங்கி அகில் சுமந்து - திரு 296

இரும் காழ் அகிலொடு வெள் அயிர் புகைப்ப - நெடு 56

தே கண் அகில் புகை திசை-தொறும் கமழ - உஞ்ஞை:33/65

அகில் நாறு அங்கை சிவப்ப நல்லோர் - உஞ்ஞை:33/91

துகிர் துலாம் மண்டபத்து அகில் புகை கமழ - உஞ்ஞை:37/102

பூ பெய் செப்பும் புகை அகில் அறையும் - உஞ்ஞை:38/165

கம்பலை பந்தர் காழ் அகில் கழுமிய - உஞ்ஞை:39/2

தண் நறும் காழ் அகில் நுண் அயிர் கூட்டி - உஞ்ஞை:43/178

ஆர துணியொடு கார் அகில் கழுமிய - உஞ்ஞை:50/18

கழும ஊட்டும் காழ் அகில் நறும் புகை - உஞ்ஞை:54/10

சாந்து அரை அம்மியும் தேம் கண் காழ் அகில்
புகை துளை அகலும் சிகை தொழில் சிக்கமும் - உஞ்ஞை:57/35,36

கடுவும் கோட்டமும் காழ் அகில் குறையும் - இலாவாண:18/45

கட்டி தோய்த்த காழ் அகில் நறும் புகை - மகத:5/55

காழ் அகில் நறும் புகை ஊழ் சென்று உண்ட - மகத:13/86

காழ் அகில் நூறும் கண் சாலேகமும் - மகத:17/136

கறை மாண் காழ் அகில் கொழும் புகை கொளீஇ - மகத:22/209

ஐந்நூறு யானையும் அகில் நாறு அகற்சிய - மகத:26/72

கான காழ் அகில் தேன் நெய் தோய்த்து - வத்தவ:16/12

காழ் அகில் புகை நிறம் கடுக்கும் தூவி - நரவாண:1/67

கை-வயின் கொண்டு காழ் அகில் நறும் புகை - நரவாண:4/95

சுட்டு உருக்கு அகிலின் வட்டித்து கலந்த - உஞ்ஞை:38/190

அம் தண் அகிலும் சந்தன குழையும் - உஞ்ஞை:41/32

ஆரமும் சந்தும் அகிலும் தமாலமும் - உஞ்ஞை:50/32

கண் சாலேகமும் உள் காழ் அகிலும்
குங்கும தாதும் பைம் கறி பழனும் - உஞ்ஞை:51/25,26

கானத்து அகிலும் ஏனத்து எறியும் - உஞ்ஞை:58/86

நறையும் நந்தியும் அறை பயில் அகிலும்
வழையும் வாழையும் கழை வளம் கவினிய - இலாவாண:12/15,16

கவரியும் தவிசும் கமழ் புகை அகிலும்
சாத்து கோயும் பூ தகை செப்பும் - மகத:5/77,78

அம் தண் தகரமும் அரக்கும் அகிலும்
சந்தன குறையொடு சாந்திற்கு உரியவை - மகத:17/138,139

மண்டு அகில் புகையில் மூழ்கி ஆவண மறுகில் செல்வம் - வில்லி:5 21/2

அற்றை நாள் முதல் அநேக நாள் அகில் மணம் கமழும் - வில்லி:7 62/1

மடை பட்ட வாளை அகில் நாறும் மருத வேலி - வில்லி:7 83/1

அகில் துன்றிய குழலார் பலர் அர_மாதர் அளிக்கும் - வில்லி:12 153/3

சந்தொடு அகில் பூ இலைகள் தகவுடன் வழங்கி - வில்லி:19 30/3

வம்பு உலாம் அகில் சந்தனம் வருக்கை மாகந்தம் - வில்லி:27 55/1

வயங்கு கார் அகில் நறும் புகை உயிர்ப்பன மாடம் - வில்லி:27 60/4

சேத்து அகில் புழுகு சந்தனம் கமழும் திரு புயத்து அணிதரும் திரு தார் - வில்லி:42 218/3

பெருக்கு தண் சண்பக வனம் திடம் கொங்கொடு திறல் செழும் சந்து அகில் துன்றி நீடும் - திருப்:17/7

அகில் கமழ் கத்தூரி தனி அணை மிசை கை காசுக்கு - திருப்:104/3

நீடு வாச நிறைந்த அகில் புழுகு ஓட மீது திமிர்ந்த தனத்தினில் - திருப்:125/3

முலை புளகம் எழ அம் கை மருவு வளை கொஞ்ச முகில் அளகம் அகில் பொங்க அமுதான - திருப்:295/1

அகில் மிருக மத சலிலம் விட்டு பணித்த மலர் அமளிபட ஒளி விரவு ரத்ந ப்ரபை குழையொடு - திருப்:296/5

முழுகு புழுகு அகில் குழை வடி அழகியர் முதிர வளர் கனி அது கவர் இதழியர் - திருப்:373/3

அரசு மா கற்பகமொடு அகில் பலா இர்ப்பை மகிழ் அழகு வேய் அத்தி கமுகோடு அரம்பையுடன் - திருப்:495/19

பத்தி பூணாமலே உலகத்தின் மானார் சவாது அகில் பச்சை பாடீர பூஷித கொங்கை மேல் வீழ் - திருப்:556/3

பொருள் கவர் சிந்தை அரிவையர் தங்கள் புழுகு அகில் சந்து பனி நீர் தோய் - திருப்:560/1

விராவிய குரா அகில்பராரை முதிரா வளர் விராலிமலை ராஜத பெருமாளே - திருப்:571/8

இதம் உறு விரை புனல் முழுகிய அகில் மணம் உதவிய புகையினில் அளவி வகைவகை - திருப்:572/1

வருடை இனம் அது முருடு படும் அகில் மரமும் மருதமும் அடி சாய - திருப்:613/5

அகில் அடி பறிய எறி திரை அருவி ஐவன வெற்பில் வஞ்சி கணவா என்று - திருப்:657/3

நிரை தரு மணி அணி ஆர்ந்த பூரித ம்ருகமத களப அகில் சாந்து சேரிய - திருப்:696/1

வாள் தாய் வீசும் கர்ப்புர ம்ருகமதம் அகில் ஆரம் - திருப்:759/6

இன வளை பூண் கையார் கவரி இட வேய்ந்து மாலை புழுகு அகில் சாந்து பூசி அரசாகி - திருப்:774/3

கருதி அன நடை கொடி இடை இயல் மயில் கமழும் அகில் உடன் அளகிய ம்ருகமத - திருப்:821/3

பந்தி வரு மந்தி செண்பகம் அகில் சந்து செறி கொன்றை துன்றிய வன - திருப்:854/15

அயலூர் உறை மயிலா பல கலை மான் உழை புலி தோல்களை அகில் ஆரம் அது எறி காவிரி வண்டல் மேவும் - திருப்:909/7

தூளி படு நவ குங்குமமும் குளிர் ஆரம் அகில் புழுகும் புனை சம்ப்ரம - திருப்:916/5

முத்து இரத்ந மரகதம் வைத்த விசித்ர சித்ர முகபடம் மொச்சிய பச்சை அகில் மண தன பாரம் - திருப்:927/2

புழுகு அகில் களபம் ஒளி விடு தரளம் மணி பல செறிய வட மேரு - திருப்:1076/1

விரகம் விளைகின்ற கழு நீரை சேர்த்து அகில் ம்ருகமத மிகுந்த பனி நீரை தேக்கியே - திருப்:1173/5

புயல் சற்று விரித்து நிரைத்து ஒளி வளையிட்ட கரத்தை அசைத்து அகில்
புனை மெத்தை படுத்த பளிங்கு அறைதனில் ஏறி - திருப்:1178/3,4

பரிமள மலர் அடுத்து அகில் மணம் முழுகி மை பரவிய ம்ருகமத குழல் மானார் - திருப்:1259/1

ஆரத்தோடு அகில் உற்ற தரு குல மேகத்தோடு ஒருமித்து நெருக்கிய - திருப்:1317/15

கானவர் இடு கார் அகில் புகை ஓங்கு வேங்கடம் மேவி மாண் குறள் - நாலாயி:1048/3

வரை வளம் திகழ் மத கரி மருப்பொடு மலை வளர் அகில் உந்தி - நாலாயி:1155/3

கஞ்சன் உயிர் அது உண்டு இ உலகு உண்ட காளை கருதும் இடம் காவிரி சந்து அகில் கனகம் உந்தி - நாலாயி:1246/2

உண்ட பிரான் உறையும் இடம் ஒளி மணி சந்து அகில் கனகம் - நாலாயி:1252/2

மஞ்சு சேர் மாளிகை நீடு அகில் புகையும் மா மறையோர் - நாலாயி:1384/3

அகில் குறடும் சந்தனமும் அம் பொன்னும் அணி முத்தும் - நாலாயி:1532/1

மலை திகழ் சந்து அகில் கனகம் மணியும் கொண்டு வந்து உந்தி வயல்கள்-தொறும் மடைகள் பாய - நாலாயி:1620/3

அரி விரவு முகில் கணத்தால் அகில் புகையால் வரையோடும் - நாலாயி:1669/1

சீர் உற்ற அகில் புகை யாழ் நரம்பு பஞ்சமம் தண் பசும் சாந்து அணைந்து - நாலாயி:3875/3

அகிலின் புகையால் முகில் ஏய்க்கும் அணி ஆர் வீதி அழுந்தூரே - நாலாயி:1592/4

சந்தொடு கார் அகிலும் சுமந்து தடங்கள் பொருது - நாலாயி:596/1

அலைப்புண்ட யானை மருப்பும் அகிலும் அணி முத்தும் வெண் சாமரையோடு பொன்னி - நாலாயி:1220/3

துளை கை யானை மருப்பும் அகிலும் கொணர்ந்து உந்தி முன் - நாலாயி:1381/3

உழும் செறுவில் மணி கொணர்ந்து கரை மேல் சிந்தி உலகு எல்லாம் சந்தனமும் அகிலும் கொள்ள - நாலாயி:1499/3

அகில் விரை தூபம் ஏய்ந்த அணி கொள் பட்டு ஆடை சாத்தி - 1.திருமலை:5 16/1

மலை வளர் சந்து அகில் பீலி மலர் பரப்பி மணி கொழிக்கும் - 1.திருமலை:5 82/1

கரை வளர் கழையின் முத்தும் கார் அகில் குறடும் சந்தும் - 3.இலை:3 98/2

மேல் எல்லாம் அகில் தூபம் விருந்து எல்லாம் திருந்து மனை - 5.திருநின்ற:1 4/4

நெய் அகில் நறும் குறை நிறைத்த புகையாலும் - 6.வம்பறா:1 39/2

பரிய அகில் குறை பிளந்து புகைப்பார்கள் பாங்கு எல்லாம் - 6.வம்பறா:1 332/2

அகில் நறும் தூபம் விம்ம அணி கிளர் மணியால் வேய்ந்த - 6.வம்பறா:1 1231/1

சொல்_மாலை மலர் கல் வாய் அகில் என்னும் தொடை சாத்தி - 6.வம்பறா:2 294/3

பூ மலி மறுகில் இட்ட புகை அகில் தூபம் தாழ - 7.வார்கொண்ட:2 2/3

வதிகள் எங்கும் குளிர் பந்தர் மனைகள் எங்கும் அகில் புகை கார் - 7.வார்கொண்ட:4 142/2

தேம் கமழ் குங்குமம் கர்ப்பூரம் கார் அகில்
பாங்கு பட பனி நீரால் குழைத்து வைத்து - திருமந்:1004/2,3

வெறி மலர் குளவாய் கோலி நிறை அகில்
மா புகை கரை சேர் வண்டு உடை குளத்தின் - திருவா:3/90,91

கந்தம் அகில் புகையே கமழும் கணபதியீச்சுரம் காமுறவே - தேவா-சம்:62/4

கொத்து ஆர் மலர் குளிர் சந்து அகில் ஒளிர் குங்குமம் கொண்டு - தேவா-சம்:119/3

கடை ஆர்தர அகில் ஆர் கழை முத்தம் நிரை சிந்தி - தேவா-சம்:133/3

கொத்தின்னொடு சந்து ஆர் அகில் கொணர் காவிரி கரை மேல் - தேவா-சம்:167/2

பூ ஆர் குழலார் அகில் கொண்டு புகைப்ப - தேவா-சம்:345/1

தொங்கலும் கமழ் சாந்தும் அகில் புகையும் தொண்டர் கொண்டு - தேவா-சம்:659/1

கலை உடை விரி துகில் கமழ் குழல் அகில் புகை - தேவா-சம்:1309/1

கொச்சையள் நலை கூடு அகில் ஆர் உடன் மூடரே - தேவா-சம்:1380/3

சந்து உயர்ந்து எழு கார் அகில் தண் புனல் கொண்டு தம் - தேவா-சம்:1503/1

உருவி வீழ வயிரம் கொழியா அகில் உந்தி வெள் - தேவா-சம்:1519/2

சீரின் ஆர் மணியும் அகில் சந்தும் செறி வரை - தேவா-சம்:1569/1

அந்தணர்கள் ஆகுதியில் இட்ட அகில் மட்டு ஆர் - தேவா-சம்:1836/3

நவை ஆர் மணி பொன் அகில் சந்தனம் உந்தி - தேவா-சம்:1850/3

கரவு இல் மா மணி பொன் கொழித்து இழி சந்து கார் அகில் தந்து பம்பை நீர் - தேவா-சம்:2005/3

கரும் திரை மா மிடற்றாரும் கார் அகில் பல் மணி உந்தி - தேவா-சம்:2218/3

ஊகமொடு ஆடு மந்தி உகளும் சிலம்ப அகில் உந்தி ஒண் பொன் இடறி - தேவா-சம்:2382/3

வரை வந்த சந்தொடு அகில் உந்தி வந்து மிளிர்கின்ற பொன்னி வடபால் - தேவா-சம்:2428/3

பெருகு சந்தனம் கார் அகில் பீலியும் பெரு மரம் நிமிர்ந்து உந்தி - தேவா-சம்:2664/1

கந்தம் ஆர் மலரொடு கார் அகில் பல் மணி - தேவா-சம்:3089/3

சங்கம் ஆர் ஒலி அகில் தரு புகை கமழ்தரும் - தேவா-சம்:3132/2

பொன்னும் மா மணிகளும் பொரு திரை சந்து அகில்
தன்னுள் ஆர் வைகையின் கரைதனில் சமைவுற - தேவா-சம்:3147/1,2

கோடு சந்தனம் அகில் கொண்டு இழி வைகை நீர் - தேவா-சம்:3149/1

கார் அகில் இரும் புகை விசும்பு கமழ்கின்ற காளத்தி மலையே - தேவா-சம்:3542/4

சந்தினொடு கார் அகில் சுமந்து தட மா மலர்கள் கொண்டு கெடிலம் - தேவா-சம்:3629/3

வெதிர்களோடு அகில் சந்தம் முருட்டியே வேழம் ஓடகில்சந்தம் உருட்டியே - தேவா-சம்:4030/2

கரை கெழு சந்தும் கார் அகில் பிளவும் அளப்ப அரும் கன மணி வரன்றி - தேவா-சம்:4121/3

கார் ஊர் மழை பெய்து பொழி அருவி கழையோடு அகில் உந்திட்டு இரு கரையும் - தேவா-சுந்:93/1

கந்தம் கமழ் கார் அகில் சந்தனம் உந்தி - தேவா-சுந்:125/1

மலைத்த சந்தொடு வேங்கை கோங்கமும் மன்னு கார் அகில் சண்பகம் - தேவா-சுந்:362/3

கந்தின் மிக்க கரியின் மருப்போடு கார் அகில் கவரி மயிர் மண்ணி - தேவா-சுந்:587/3

அரைக்கும் சந்தனத்தோடு அகில் உந்தி ஐவனம் சுமந்து ஆர்த்து இருபாலும் - தேவா-சுந்:623/1

சந்தன வேரும் கார் அகில் குறடும் தண் மயில் பீலியும் கரியின் - தேவா-சுந்:702/1

கார் அகிலின் புகை விம்மும் கற்குடி மா மலையாரே - தேவா-சம்:461/4

தணல் முழுகு பொடி ஆடும் செக்கர் மேனி தத்துவனை சாந்து அகிலின் அளறு தோய்ந்த - தேவா-அப்:2914/3

வரை ஆர் சந்தோடு அகிலும் வரு பொன்னி - தேவா-சம்:263/1

அறை ஆர் புனலோடு அகிலும் வரு பொன்னி - தேவா-சம்:266/1

வேறு ஆர் அகிலும் மிகு சந்தனம் உந்தி - தேவா-சம்:354/3

கந்து அமர் சந்தும் கார் அகிலும் தண் கதிர் முத்தும் - தேவா-சம்:1092/1

கந்த மா மலர் சந்தொடு கார் அகிலும் தழீஇ - தேவா-சம்:1486/1

ஓடும் நதி சேரும் நித்திலமும் மொய்த்த அகிலும் கரையில் சார - தேவா-சம்:2254/3

தழை கொள் சந்தும் அகிலும் மயில் பீலியும் சாதியின் - தேவா-சம்:2758/1

அம் தண் வரை வந்த புனல் தந்த திரை சந்தனமொடு உந்தி அகிலும்
கந்த மலர் கொந்தினொடு மந்தி பல சிந்து கயிலாய மலை மேல் - தேவா-சம்:3536/1,2

கந்தம் மலி சந்தினொடு கார் அகிலும் வாரி வரு காவிரியுளால் - தேவா-சம்:3549/3

தூமம் நல் அகிலும் காட்டி தொழுது அடி வணங்கு-மின்னோ - தேவா-அப்:421/2

கல்-வாய் அகிலும் கதிர் மா மணியும் கலந்து உந்தி வரும் நிலவின் கரை மேல் - தேவா-சுந்:22/1

சிகரம் முகத்தில் திரள் ஆர் அகிலும் மிக உந்தி வரும் நிலவின் கரை மேல் - தேவா-சுந்:28/1

கலை கொம்பும் கரி மருப்பும் இடறி கலவம் மயில் பீலியும் கார் அகிலும்
அலைக்கும் புனல் சேர் அரிசில் தென்கரை அழகு ஆர் திரு புத்தூர் அழகனீரே - தேவா-சுந்:83/3,4

குளங்கள் பலவும் குழியும் நிறைய குட மா மணி சந்தனமும் அகிலும்
துளங்கும் புனலுள் பெய்துகொண்டு மண்டி திளைத்து எற்று சிற்றாறு அதன் கீழ் கரை மேல் - தேவா-சுந்:426/1,2

தண் ஆர் அகிலும் நல சாமரையும் அலைத்து எற்று சிற்றாறு அதன் கீழ் கரை மேல் - தேவா-சுந்:428/2

காடும் மலையும் நாடும் இடறி கதிர் மா மணி சந்தனமும் அகிலும்
சேடன் உறையும் இடம்தான் விரும்பி திளைத்து எற்று சிற்றாறு அதன் கீழ் கரை மேல் - தேவா-சுந்:432/1,2

பொறியும் மா சந்தன துண்டமோடு அகிலும் பொழிந்து இழிந்து அருவிகள் புன்புலம் கவர - தேவா-சுந்:754/1

புகழும் மா சந்தன துண்டமோடு அகிலும் பொன்மணி வரன்றியும் நல் மலர் உந்தி - தேவா-சுந்:756/1

சாந்தமும் அகிலொடு முகில் பொதிந்து அலம்பி தவழ் கன மணியொடு மிகு பளிங்கு இடறி - தேவா-சம்:849/3

தண்ணின் மலி சந்து அகிலொடு உந்தி வரு பொன்னி - தேவா-சம்:1811/3

சேரும் சந்தனம் அகிலொடு வந்து இழி செழும் புனல் கோட்டாறு - தேவா-சம்:2576/3

கரை தரும் அகிலொடு கன வளை புகுதரும் - தேவா-சம்:3129/2

சந்தம் ஆர் அகிலொடு சாதி தேக்க மரம் - தேவா-சம்:3181/1

வரை தரும் அகிலொடு மா முத்தம் உந்தியே - தேவா-சம்:3185/1

சந்தம் ஆர் அகிலொடு சாதியின் பலங்களும் தகைய மோதி - தேவா-சம்:3779/2

அலை அடைந்த புனல் பெருகி யானை மருப்பு இடறி அகிலொடு சந்து உந்தி வரும் அரிசிலின் தென் கரை மேல் - தேவா-சுந்:159/3

சலசல சந்து அகிலோடும் உந்தி சந்தனமே கரை சார்த்தி எங்கும் - தேவா-சம்:48/1

வரை தரு மா மணியும் வரை சந்து அகிலோடும் உந்தி - தேவா-சுந்:1010/3

வெயில் தியங்கிய என வெந்த அகில் புகை - தேம்பா:2 17/2

நாறிய நானமும் நறும் அகில் புகை - தேம்பா:2 27/1

ஆய் எரி திரண்டு விழித்த கண் கூச அகில் முதல் நறும் புகை நாளும் - தேம்பா:2 46/3

பொன் ஒளி காட்டும் செம் தீ புகை அகில் மணத்தை காட்டும் - தேம்பா:4 32/1

அகில் கவர் புகை தூது விட்டு அம் குழல் - தேம்பா:10 31/3

நஞ்சு தோய் மன நங்கை நறா அகில்
மஞ்சு தோய் துகில் ஆடி வதிந்த கால் - தேம்பா:10 34/2,3

வந்த நல் சுதை மணம் கொள் காழ் அகில்
வெந்த நல் புகை கலந்து வீங்கின - தேம்பா:10 107/2,3

அகில் அடும் புகையும் வாச பூம் புகையும் அடர்ந்து நல் இருள் செயும் தெருவில் - தேம்பா:12 63/1

பொன் கலத்து அலர் நறா புனலும் உய்த்து அகில் அலர் புகையும் ஆட்டி - தேம்பா:19 24/2

வரை உமிழ் உயிர்ப்பு என்று அகில் புகை உமிழ்ந்த மாடம் நீள் கோன் நகர்-தன்னில் - தேம்பா:20 67/2

நறை பட்டு ஆவி செய் நல் அகில் வெந்த-கால் - தேம்பா:20 82/1

வெந்த அகில் சேக்கை நீங்கி வெறு நிலத்து அடிகள் தாமே - தேம்பா:28 18/1

ஆதலேனும் நாறிய வெந்த அகில் பூம் புகை தவழ்ந்து - தேம்பா:28 21/1

மரு விஞ்சு அகில் பூம் தவிசு இருளே வகை துஞ்சு இடம் என்பார் - தேம்பா:28 27/2

தூய் வளர் மலர் பூம் சேக்கையை பரப்பி சூழ் அகில் நறும் புகை தோய்த்து - தேம்பா:28 91/1

நாறு பூம் புகை நாறும் அகில் புகை - தேம்பா:28 98/1

மின் உயிர்த்து எரி விளக்கு ஏற்றி வெந்து அகில்
இன் உயிர்த்து எழும் புகை தேக்கும் இஞ்சி சூழ் - தேம்பா:29 26/1,2

அடும் செம் தீயினும் அட்ட அகில் மணம் இனிது அன்றோ - தேம்பா:29 103/1

தொகு மணி பறைகள் ஆர்ப்பும் சுட்ட அகில் புகையும் சொல்ல - தேம்பா:36 92/3

அகிலில் தோய் துகில் வாடையோடு ஆட விண் - தேம்பா:9 54/2

ஒருவர் அகிலோடு மலர் ஊறு புகை காட்ட - தேம்பா:12 85/2

ஆறு அணிந்து சென்று ஆர்கலி மேய்ந்து அகில்
சேறு அணிந்த முலை திருமங்கை-தன் - பால:1 2/2,3

அகில் இடும் புகை அட்டில் இடும் புகை - பால:2 41/1

அகில் இடு கொழும் புகை அளாய் மயங்கின - பால:3 35/1

வேய்ந்த கார் அகில் புகை உண்ட மேகம் போய் - பால:3 41/2

அலம்பும் மா மணி ஆரத்தோடு அகில் அளை புளின - பால:9 1/1

அகில் புகை கதுவும்-தோறும் புலர்வன ஆட கண்டார் - பால:10 3/4

அகில் இடு கொழும் புகை அழுங்கலின் முழங்கா - பால:15 27/3

அணியும் முலையார் அகில் ஆவி புலர்த்தும் நல்லார் - பால:16 45/2

தேனும் நாவியும் தேக்கு அகில் ஆவியும் - பால:18 20/3

தாமமும் நானமும் ததைந்த தண் அகில்
தூமம் உண் குழலியர் உண்ட தூ நறை - பால:19 9/1,2

செறி அகில் தேய்வையும் மான் மதத்து எக்கரும் - பால:20 13/2

சந்தனம் அகில் நாறும் சாந்தொடு தெரு எங்கும் - பால:23 24/1

எயிலினில் நடுவாரும் எரி அகில் இடுவாரும் - பால:23 27/4

மஞ்சு என அகில் புகை வழங்கும் மாளிகை - அயோ:4 193/1

அட்டிலும் இழந்தன புகை அகில் புகை - அயோ:4 199/1

அகில் புனை குழல் மாதே அணி இழை எனல் ஆகும் - அயோ:9 11/1

பரிய கால் அகில் சுட நிமிர் பசும் புகை படலம் - அயோ:10 18/2

நானம் நாள்மலர் நறை அகில் நாவி தேன் நாறும் - அயோ:10 19/1

நகை இழந்தன வாள் முகம் நாறு அகில்
புகை இழந்தன மாளிகை பொங்கு அழல் - அயோ:11 24/1,2

தங்கு தண் சாந்து அகில் கலவை சார்கில - அயோ:12 37/1

அகில் இடு தூபம் அன்ன ஆய் மயில் பீலி ஆர்த்த - அயோ:13 58/1

இந்தனம் எனைய என்ன கார் அகில் ஈட்டத்தோடும் - ஆரண்:13 134/1

ஆறு இடு விரை அகில் ஆரம் ஆதிய - கிட்:1 15/2

இருண்ட காழ் அகில் தடத்தொடு இற்று வீழ்ந்த சந்து வந்து - கிட்:7 5/3

அந்தி இடு அகில் புகை நுழைந்த குளிர் அன்னம் - கிட்:10 75/2

விளக்கு ஒளி அகில் புகை விழுங்கு அமளி மென் கொம்பு - கிட்:10 79/1

சிந்துவார தரு நறை தேக்கு அகில்
சந்தம் மா மயில் சாயலர் தாழ் குழல் - கிட்:11 19/1,2

தாங்கும் ஆர் அகில் தண் நறும் சந்தனம் - கிட்:13 16/1

அஞ்சு வரும் வெம் சுரனும் ஆறும் அகன் பெரும் சுனையும் அகில் ஓங்கு ஆரம் - கிட்:13 25/1

நலத்த மாதர் நறை அகில் நாவியும் - சுந்:2 150/1

தோகையர் இட்ட தூமத்து அகில் புகை முழுதும் சுற்ற - யுத்1:10 20/2

இந்தனத்து அகில் சந்தனம் இட்டு மேல் - யுத்4-மிகை:38 6/1

தாய் பிளந்து உக்க கார் அகில்களும் தழை இலா - பால:7 8/2

அணியும் ஆனை வெண்கோடும் அகிலும் தண் - பால:1 7/2

சுரத்து இடை அகிலும் மஞ்ஞை தோகையும் தும்பி கொம்பும் - பால:10 10/2

அகிலும் ஆரமும் ஆர அங்கு ஓங்குமே - பால:16 28/3

அகிலும் ஆரமும் மாரவம் கோங்குமே - பால:16 28/4

ஆரமும் அகிலும் துன்றி அவிர் பளிக்கு அறை அளாவி - கிட்:3 31/1

ஆரமும் அகிலும் நீவி அகன்ற தோள் அமலன் செ வாய் - சுந்:4 52/1

பூவும் ஆரமும் அகிலும் என்று இனையன புகைய - சுந்:13 34/2

ஆறுகின்றில தழல் அகிலும் நாவியும் - யுத்1:2 13/2

அசும்பு பாய் தேனும் பூவும் ஆரமும் அகிலும் மற்றும் - யுத்1:8 17/1

அடுக்கலின் அளிந்த செந்தேன் அகிலொடு நாறும் அன்றே - பால:1 13/4

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *