சொல் பொருள்
அக்கு – தவசம்
தொக்கு – பணம்
சொல் பொருள் விளக்கம்
அஃகம் (அக்கம்) சுருக்கேல் என்பதில் அக்கம் தவசமாதல் அறிக. அக்கமும் காசும் சிக்கெனத்தேடு என்பதிலும் அக்கம் தவசமெனத் தெளிவாதல் அறிக. தொக்கு-தொகுக்கப் பெற்றது; தொகை பயிர்களில் தவசப் பயிர், பணப் பயிர் என இரு வகை இருத்தல் அறிக. ‘அக்குத் தொக்கு இல்லை’ என்பது மரபு மொழி. தவசமும், பணமும் இல்லை யென்றும், தவசமும், பணமும் தந்துதவுவார் இலர் என்றும் இரண்டையும் குறிக்கும்.
இனி உற்றார் உறவு இல்லை என்பதையும் குறித்தல் உண்டு. அக்கு-உற்றார்; தொக்கு-உறவு.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்