Skip to content

அக்குவேர் ஆணிவேர்

சொல் பொருள்

அக்குவேர் – மெல்லியவேர், சல்லி வேர், பக்க வேர்
ஆணிவேர் – ஆழ்ந்து செல்லும் வலிய வேர்.

சொல் பொருள் விளக்கம்

அக்குதல்-சுருங்குதல்; மெலிதாதல். ஒரு மரத்தின் வேர்களுள் பக்கத்துச் செல்லும் வேர் பலவாய் மெலியவாய் இருக்கும்.
ஆணிவேர் நேர் கீழ் இறங்குவதாய் ஒன்றாய் வலியதாய் இருக்கும்.

‘அக்கு வேராக ஆணிவேராக ஆய்தல்’ என்பது வழக்கு.

‘அக்குவேறு ஆணிவேறு’ காண்க.

குறிப்பு:

இது ஒரு இணைச்சொல்.

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *