Skip to content

அச்சாணி

சொல் பொருள்

அச்சின் கடைசியில் சொருகும் ஆணி

அச்சு-உருள் கோத்த மரம்; ஆணி – உருள் கழலாது அதன் கடைக்கண் செருகுமது.

சொல் பொருள் விளக்கம்

சக்கரம் கழலாதவாறு அச்சின் கடைசியில் சொருகும் ஆணி.

அச்சு-உருள் கோத்த மரம்; ஆணி – உருள் கழலாது அதன் கடைக்கண் செருகுமது. அது வடிவால் சிறிதாய் இருந்தே பெரிய பாரத்தைக் கொண்டுய்க்கும் திட்பம் உடைத்து. (திருக். 667. பரி.)

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

Key part of Axle

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு
அச்சாணி அன்னார் உடைத்து. - திருக்குறள் 667

உருளும் பெரிய தேர்க்கு அச்சில் இருந்து தாங்கும் சிறிய ஆணிபோன்றவர்கள் உலகத்தில் உள்ளனர். அவர்களுடைய உருவின் சிறுமையைக் கண்டு இகழக் கூடாது.

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி!

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *