சொல் பொருள்
அடி – அடித்தல் என்பது முதனிலையளவில் ‘அடி’யென நின்றது.
பிடி – பிடித்தல் என்பதும் முதனிலையளவில் ‘பிடி’ என நின்றது.
சொல் பொருள் விளக்கம்
அடியும் பிடியும் என உம்மைத் தொகையாய் அமைந்து இணைச் சொல்லாகியது. அடியும் பிடியும் என்பதும் அது. சண்டை, போர், விளையாட்டு என்பவற்றில் தாக்குவாரும் தடுப்பாரும் என இரு திறத்தர் உளரன்றோ’! தாக்குவார் வினைப்பாடு ‘அடி’; தடுப்பார் வினைப்பாடு ‘பிடி’. வெட்சி, கரந்தை; வஞ்சி, காஞ்சி; உழிஞை, நொச்சி; தும்பை, வாகை எனப் புறத் தினைகள் இரு கூறுபட்டு அமைதலை அறிக. “நீயடித்தால் என்கை புளியங்காய் பிடுங்கவா போகும்”; என்பதும், “குனியக் குனியக் குட்டுபவனும் முட்டாள்; குட்டக் குட்டக் குனிபவனும் முட்டாள்” என்பதும் வழங்கு மொழிகள்.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்