சொல் பொருள்
(வி) 1. செருகு, 2. பதி,
சொல் பொருள் விளக்கம்
1. செருகு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
insert, infix, inlay
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நெடும் தொடர் குவளை வடிம்பு உற அடைச்சி மணம் கமழ் மனை-தொறும் பொய்தல் அயர – மது 588,589 நெடிய தொடராகவுள்ள குவளை மலர்களை வடிம்பிலே விழும்படி செருகி, மணம் கமழும் (தம்)இல்லங்களிலெல்லாம் விளையாடுதலைச் செய்ய பகன்றை நீல் உண் பச்சை நிறம் மறைத்து அடைச்சிய தோல் எறி பாண்டிலின் வாலிய மலர – அகம் 217/6-8 பகன்றையானது நீலம் ஊட்டப்பெற்ற தோலின் நிறம் மறையும்படி பதித்த கிடுகில் பதித்த வட்டக்கண்ணாடி போல வெள்ளியனவாக மலர
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்