Skip to content

சொல் பொருள்

(வி) 1. செருகு,  2. பதி,

சொல் பொருள் விளக்கம்

1. செருகு,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

 insert, infix, inlay

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

நெடும் தொடர் குவளை வடிம்பு உற அடைச்சி
மணம் கமழ் மனை-தொறும் பொய்தல் அயர – மது 588,589

நெடிய தொடராகவுள்ள குவளை மலர்களை வடிம்பிலே விழும்படி செருகி,
மணம் கமழும் (தம்)இல்லங்களிலெல்லாம் விளையாடுதலைச் செய்ய

பகன்றை
நீல் உண் பச்சை நிறம் மறைத்து அடைச்சிய
தோல் எறி பாண்டிலின் வாலிய மலர – அகம் 217/6-8

பகன்றையானது
நீலம் ஊட்டப்பெற்ற தோலின் நிறம் மறையும்படி பதித்த
கிடுகில் பதித்த வட்டக்கண்ணாடி போல வெள்ளியனவாக மலர

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *