சொல் பொருள்
(பெ) 1. தலைவன், பெருமை மிக்கோன்
சொல் பொருள் விளக்கம்
தலைவன், பெருமை மிக்கோன்.
பெருமையிற் சிறந்தோன். இச்சொல் விளியேற்றக்கால் அண்ணால் என அயல் நீண்டு பின்னர்க் கடைக் குறைந்து அண்ணா என நின்றது. (திருவாசக விரிவுரை. மறைமலை. 397.)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
chief, one of exalted worth
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கொன் ஒன்று கிளக்குவல் அடு போர் அண்ணல் கேட்டிசின் வாழி கெடுக நின் அவலம் – மது 207,208 மேலான ஒன்றைக் கூறுவேன், கொல்லும் போர்த்தொழில் வல்ல தலைவனே, கேட்பாயாக, நெடிது வாழ்க, கெடுக நின் மயக்கம், அண்ணல் யானை அடு போர் வேந்தர் – மது 348 தலைமைச்சிறப்புடைய யானையைக் கொல்லும் — போர்த்தொழிலை உடைய, வேந்தரை மணி மிடற்று அண்ணற்கு மதி ஆரல் பிறந்தோய் நீ – பரி 9/7 நீல நிறக் கழுத்தினையுடைய சிவபெருமானுக்கு, மதிப்பு வாய்ந்த கார்த்திகை மகளிரிடத்தில் பிறந்தவனே! நீ
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்