Skip to content
அதவம்

அதவம் என்பதுஅத்தி மரம்

1. சொல் பொருள்

(பெ) அத்தி மரம், நெய்த்துடுப்பு

2. சொல் பொருள் விளக்கம்

அத்தி மரம்

மொழிபெயர்ப்புகள்

3. ஆங்கிலம்

country fig, Ficus carica

அதவம்
அதவம்

4.தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு

இது அதவு என்றும் அழைக்கப்படும்

அதவ தீம் கனி அன்ன செம் முக
துய் தலை மந்தி வன் பறழ் – நற் 95/3,4

அத்தியின் இனிய கனி போன்ற சிவந்த முகத்தையும், பஞ்சுத்தலையையும் கொண்ட குரங்கின் வலிய குட்டி

ஆற்று அயல் எழுந்த வெண் கோட்டு அதவத்து
எழு குளிறு மிதித்த ஒரு பழம் போல – குறு 24/3,4

ஆற்றுப் பக்கத்தில் உயர்ந்து நிற்கும் வெள்ளைக் கிளைகளையுடைய அத்திமரத்தின் ஏழு நண்டுகள் பற்றிக் குழைத்த ஒரு பழம் போல

அதவம் ஆய் நறு நெய் உண்டு உலகில் அன்பர் கருதிற்று - ஆரண்:1 44/3
அதவம்
அதவம்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *