Skip to content

சொல் பொருள்

1. (வி.அ) அவ்விடம்,

2. (இ.சொ) அசைச்சொல்,

சொல் பொருள் விளக்கம்

அவ்விடம்,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

 there

an expletive,

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

வருமே சே_இழை அந்தில்
கொழுநன் காணிய அளியேன் யானே – குறு 293/7,8

வருகிறாள் செவ்விய அணிகலன்களை அணிந்த பரத்தை, அவ்விடத்தில்
தலைவனைக் காணும்பொருட்டு; இரங்கத்தக்கவள் நான்

அஞ்சல் என்மரும் இல்லை அந்தில்
அளிதோ தானே நாணே – குறு 395/6,7

நீ அஞ்சற்க என்று என்னை ஆற்றுவிப்பாரும் இலராயினர்
இரக்கத்தக்கதாயிருந்தது எனது நாணம் அந்தில் – அசைநிலை – பொ.வே.சோ உரை – விளக்கம்.

பல் மீன் கூட்டம் என் ஐயர் காட்டிய
எந்தையும் செல்லும்-மார் இரவே அந்தில்
அணங்கு உடை பனி துறை கைதொழுது ஏத்தி
யாயும் ஆயமோடு அயரும் – அகம் 240/6-9

தான் அகப்படுத்த பலவாய மீன் கூட்டங்களை என் அண்ணன்மார்க்குக் காட்டுதற்கு என் தந்தையும் இரவில் மனைக்கன் போதரும், ஆங்கே
தெய்வமுடைய குளிர்ந்த துறையில், அத் தெய்வத்தைக் கையால் வணங்கித் துதித்து என் தாயும் ஆயத்தாருடன் அதற்குச் சிறப்புச் செய்யும்.

– அந்தில் – அசை என்னலுமாம் – நாட்டார் உரை

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

1 thought on “அந்தில்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *