Skip to content

சொல் பொருள்

(பெ) 1. மாலையில் ஒளி மங்கும் நேரம், 2. சந்தியா காலம், 3. ஊழிக்காலம்

சொல் பொருள் விளக்கம்

இரவும் பகலும் அல்லது பகலும் இரவும் கலக்கும் இடைவேளையே கால வகையில் அந்தி எனப்பட்டது

இடவகையில் அந்தி என்பது முத்தெருக்கள் கூடும் இடத்தைக் குறிக்கும்.

இரவும் பகலும் அல்லது பகலும் இரவும் கலக்கும் இடைவேளையே கால வகையில் அந்தி எனப்பட்டது. காலையில் நிகழ்வது காலை அந்தி என்றும், மாலையில் நிகழ்வது மாலை அந்தி என்றும் சொல்லப் பெறும்.

“காலை அந்தியும் மாலை அந்தியும்” (புறம். 34.)

காலை அந்திக்கு முன்னந்தி வெள்ளந்தி என்றும் மாலை அந்திக்குப் பின்னந்தி செவ்வந்தி என்றும் பெயருண்டு. அந்தி என்னும் பொதுச் சொல் சிறப்பாக ஆளப் பெறும்போது மாலை அந்தியையே குறிக்குமென்பது, அந்திக் கடை, அந்திக் காப்பு, அந்தி மல்லிகை, அந்திவண்ணன், அந்திவேளை முதலிய சொல் வழக்கால் அறியப் பெறும்.

இடவகையில் அந்தி என்பது முத்தெருக்கள் கூடும் இடத்தைக் குறிக்கும்.

“அந்தியும் சதுக்கமும் ஆவண வீதியும்” (சிலப். 14 : 213.)

பிற்காலத்தில் அந்தி என்னும் சொல் சகரமெய் முன்னிடப் பெற்றுச் சந்தி என்றாயிற்று.

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

Evening twilight

Twilight, as joining day with night

Dissolution of the universe at the end of an aeon

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

அந்தி மாட்டிய நந்தா விளக்கின் – பட் 247

(அவர்கள்)அந்திக்காலத்தே கொளுத்தின அணையாத விளக்கினையுடைய

காலை அந்தியும் மாலை அந்தியும் – புறம் 34/8

காலையாகிய அந்திப்பொழுதும், மாலையாகிய அந்திப்பொழுதும்

படர் அணி அந்தி பசும்_கண்_கடவுள்
இடரிய ஏற்று எருமை நெஞ்சு இடந்து இட்டு
குடர் கூளிக்கு ஆர்த்துவான் போன்ம் – கலி 101/24-26

துன்பத்தை நுகர்கின்ற அந்திக்காலமாகிய ஊழிமுடிவில் ஒருபாதி உமையின் பச்சைநிறத்தைக் காட்டும் இறைவன் வருத்தத்தைச் செய்யும் எருமை ஏற்றை ஏறுகின்ற கூற்றுவனின் நெஞ்சைப் பிளந்திட்டு அவன் குடலைக் கூளிப்பேய்க்கு வயிறாரக் கொடுக்கின்றவனைப் போன்றிருக்கிறது;

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *