சொல் பொருள்
(பெ) 1. வடிக்கப்படும் கள், 2. தேன், 3. பழச்சாறு,
சொல் பொருள் விளக்கம்
1. வடிக்கப்படும் கள்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
toddy that is filtered, honey, fruit juice
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வெம் நீர் அரியல் விரல் அலை நறும் பிழி – பெரும் 281 வெந்நீரில்(போட்டு) இறுத்ததை விரலிடுக்கில் அலைத்துப்(பின் விரல்மூடிப்) பிழிந்த நறிய கள்ளை இறாலொடு கலந்த வண்டு மூசு அரியல் – அகம் 348/5 தேனொடு கூட்டியாக்கிய வண்டு மொய்க்கும் கள் அவிழ் நெல்லின் அரியல் ஆருந்து – புறம் 395/8 நெற்சோற்றினின்றும் இறக்கப்பட்ட வடித்த கள்ளை அருந்தும் வண்டு மூசு நெய்தல் நெல் இடை மலரும் அரியல் அம் கழனி ஆர்க்காடு அன்ன – நற் 190/5,6 வண்டினம் மொய்க்கும் நெய்தல் நெற்பயிர்களுக்கிடையே மலர்கின்ற, அந்தப் பூக்களினின்றும் தேன் வழிந்தோடும் அழகிய வயல்வெளியைக் கொண்ட ஆர்க்காடு போன்ற பலா அம் பழுத்த பசும் புண் அரியல் வாடை தூக்கும் நாடு கெழு பெரு விறல் – பதி 61/1,2 பலா மரத்தில் பழுத்து வெடித்த புதிய வெடிப்பிலிருந்து ஒழுகும் கள்போன்ற சாற்றின் மணத்தை வாடைக்காற்று அந்த வெளியெல்லாம் பரப்பும் நாட்டினைப் பொருந்திய பெரிய திறம் படைத்தவனும்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்