Skip to content
அருவி

அருவி என்பது மலைகளின் ஊடே பாயும் நீர்.

1. சொல் பொருள்

(பெ) செங்குத்தான அல்லது சாய்வான மலையின் வழியே பாயும் நீர்

அருவி என்ற செந்தமிழ்ச் சொல் ஆர் என்ற முதலடிப் பிறந்ததென்பர் தமிழறிஞர். ஆர்த்தல் ஒலித்தல் என்னும் பொருட்டு.

2. சொல் பொருள் விளக்கம்

அருவி என்ற செந்தமிழ்ச் சொல் ஆர் என்ற முதலடிப் பிறந்ததென்பர் தமிழறிஞர். ஆர்த்தல் ஒலித்தல் என்னும் பொருட்டு. (செந்தமிழ்ச் செல்வி. சிலம்பு 3 : 310)

அருவி
அருவி

மொழிபெயர்ப்புகள்

3. ஆங்கிலம்

Water Falls

4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு

இழுமென இழிதரும் அருவி/பழம் முதிர் சோலை மலை கிழவோனே – திரு 316,317

அருவி மா மலை நிழத்தவும் மற்று அ – பொரு 235

பிறங்கு வெள் அருவி வீழும் சாரல் – சிறு 90

விடர் கால் அருவி வியன் மலை மூழ்கி – சிறு 170

அண்ணல் யானை அருவி துகள் அவிப்ப – சிறு 200

கல் வீழ் அருவி கடல் படர்ந்து ஆங்கு – பெரும் 427

முடங்கு இறை சொரிதரும் மா திரள் அருவி/இன் பல் இமிழ் இசை ஓர்ப்பனள் கிடந்தோள் – முல் 87,88

அருவி
அருவி

வரை தாழ் அருவி பொருப்பின் பொருந – மது 42

கவலை அம் குழும்பின் அருவி ஒலிப்ப – மது 241

அருவி ஆன்ற அணி இல் மா மலை – மது 306

கலிழ்ந்து வீழ் அருவி பாடு விறந்து அயல – நெடு 97

அவிர் துகில் புரையும் அம் வெள் அருவி/தவிர்வு இல் வேட்கையேம் தண்டாது ஆடி – குறி 55,56

அருவி தந்த பழம் சிதை வெண் காழ் – மலை 174

பாடு இன் அருவி பயம் கெழு மீமிசை – மலை 278

அருவி நுகரும் வான்அரமகளிர் – மலை 294

நெடு வரை இழிதரு நீத்தம் சால் அருவி/கடு வரல் கலுழி கட்கு இன் சேயாற்று – மலை 554,555

பெரு வரை அடுக்கத்து அருவி ஆர்ப்ப – நற் 7/2

மால் கடல் திரையின் இழிதரும் அருவி/அகல் இரும் கானத்து அல்கு அணி நோக்கி – நற் 17/2,3

மணி என இழிதரும் அருவி பொன் என – நற் 28/5

வாலியோன் அன்ன வயங்கு வெள் அருவி/அம் மலை கிழவோன் நம் நயந்து என்றும் – நற் 32/2,3

அருவி
அருவி

அருவி இன் இயத்து ஆடும் நாடன் – நற் 34/5

பொரு இல் ஆயமோடு அருவி ஆடி – நற் 44/1

ஒளிறு வெள் அருவி ஒண் துறை மடுத்து – நற் 65/4

ஒலி வெள் அருவி ஒலியின் துஞ்சும் – நற் 77/7

கண்ணீர் அருவி ஆக – நற் 88/8

வரை வெள் அருவி மாலையின் இழிதர – நற் 93/2

மா கடல் முகந்து மணி நிறத்து அருவி/தாழ் நீர் நனம் தலை அழுந்துபட பாஅய் – நற் 112/6,7

அருவி ஆன்ற நீர் இல் நீள் இடை – நற் 137/5

அருவி ஆர்க்கும் பெரு வரை நாடனை – நற் 147/6

அருவி முழவின் பாடொடு ஒராங்கு – நற் 176/9

அம் வெள் அருவி குட வரைஅகத்து – நற் 201/7

அருவி ஆர்க்கும் பெரு வரை அடுக்கத்து – நற் 205/1

அருவி ஆர்க்கும் பெரு வரை நண்ணி – நற் 213/1

இலங்கு வெள் அருவி வியன் மலை கவாஅன் – நற் 257/4

Falls
அருவி

பெரு வரை அடுக்கத்து அருவி ஆடி – நற் 259/5

அருவி ஆர்க்கும் அணங்கு உடை நெடும் கோட்டு – நற் 288/1

பெரு வரை அடுக்கத்து அருவி ஆடி – நற் 334/2

அருவி அடுக்கத்து ஒரு வேல் ஏந்தி – நற் 334/7

அருவி இழிதரும் பெரு வரை நாடன் – நற் 347/7

அ மடல் பட்ட அருவி தீம் நீர் – நற் 355/4

அருவி ஆர்க்கும் அயம் திகழ் சிலம்பின் – நற் 365/7

வாஅன் இழிதரும் வயங்கு வெள் அருவி/கங்கை அம் பேர் யாற்று கரை இறந்து இழிதரும் – நற் 369/8,9

சூர் உடை சிலம்பின் அருவி ஆடி – நற் 373/5

தேன் தூங்கு உயர் வரை அருவி ஆர்ப்ப – நற் 396/2

அருவி ஆர்க்கும் பெரு வரை அடுக்கத்து – நற் 399/1

கருவி மா மழை வீழ்ந்து என அருவி/விடர்அகத்து இயம்பும் நாட எம் – குறு 42/2,3

பெரு வரை மிசையது நெடு வெள் அருவி/முதுவாய் கோடியர் முழவின் ததும்பி – குறு 78/1,2

ஒலி வெள் அருவி ஓங்கு மலை நாடன் – குறு 88/1

வரை இழி அருவி உண்துறை தரூஉம் – குறு 90/5

அருவி மா மலை தத்த – குறு 94/6

மால் வரை இழிதரும் தூ வெள் அருவி/கல் முகை ததும்பும் பன் மலர் சாரல் – குறு 95/1,2

அருவி வேங்கை பெரு மலை நாடற்கு – குறு 96/1

அருவி பரப்பின் ஐவனம் வித்தி – குறு 100/1

கல் பொருது இரங்கும் கதழ் வீழ் அருவி/நிலம் கொள் பாம்பின் இழிதரும் – குறு 134/5,6

அருவி தந்த நாள்குரல் எருவை – குறு 170/2

தூங்கு தோல் கடுக்கும் தூ வெள் அருவி/கல் உயர் நண்ணியதுவே நெல்லி – குறு 235/2,3

அருவி ஆர்ந்த தண் நறும் காந்தள் – குறு 259/2

அருவி அன்ன பரு உறை சிதறி – குறு 271/1

வரையின் தாழ்ந்த வால் வெள் அருவி/கொன் நிலை குரம்பையின் இழிதரும் – குறு 284/6,7

ஒழுகு வெள் அருவி ஓங்கு மலை நாடன் – குறு 315/2

பாடு இன் அருவி ஆடுதல் இனிதே – குறு 353/3

துன் அரும் நெடு வரை ததும்பிய அருவி/தண்ணென் முழவின் இமிழ் இசை காட்டும் – குறு 365/3,4

பூசல் ஆயம் புகன்று இழி அருவி/மண்-உறு மணியின் தோன்றும் – குறு 367/5,6

ஆழி தலை வீசிய அயிர் சேற்று அருவி/கூழை பெய் எக்கர் குழீஇய பதுக்கை – குறு 372/4,5

கணம்கொள் அருவி கான் கெழு நாடன் – ஐங் 183/1

ஒலி வெள் அருவி ஓங்கு மலை நாடன் – ஐங் 205/3

அலங்கு மழை பொழிந்த அகன் கண் அருவி/ஆடு கழை அடுக்கத்து இழிதரு நாடன் – ஐங் 220/1,2

துணி நீர் அருவி நம்மோடு ஆடல் – ஐங் 224/3

ஒல்லென இழிதரும் அருவி நின் – ஐங் 233/3

மாஅல் அருவி தண் பெரும் சிலம்ப – ஐங் 238/3

வாழிய இலங்கும் அருவி/சூர் மலை நாடனை அறியாதோனே – ஐங் 249/3,4

கடு வரல் அருவி காணினும் அழுமே – ஐங் 251/4

வாள் வனப்பு உற்ற அருவி/கோள் வல் என் ஐயை மறைத்த குன்றே – ஐங் 312/3,4

கறங்கு இசை அருவி வீழும் – ஐங் 395/5

அருவி அற்ற பெரு வறல் காலையும் – பதி 28/9

அருவி அற்ற பெரு வறல் காலையும் – பதி 43/14

அருவி ஆம்பல் மலைந்த சென்னியர் – பதி 62/17

அடை அடுப்பு அறியா அருவி ஆம்பல் – பதி 63/19

இழுமென இழிதரும் பறை குரல் அருவி/முழுமுதல் மிசைய கோடு-தொறும் துவன்றும் – பதி 70/24,25

அருவி ஆம்பல் நெய்தலொடு அரிந்து – பதி 71/2

அம் வெள் அருவி உ வரையதுவே – பதி 78/2

அருவி அரு வரை அன்ன மார்பின் – பதி 88/35

மலை மாசு கழிய கதழும் அருவி இழியும் – பரி 6/5

வரை அழி வால் அருவி வா தாலாட்ட – பரி 6/52

கரை அழி வால் அருவி கால் பாராட்ட – பரி 6/53

வரைவரை தொடுத்த வயங்கு வெள் அருவி/இரவு இருள் பகல் ஆக இடம் அரிது செலவு என்னாது – பரி 7/4,5

அருவி தாழ் மாலை சுனை – பரி 8/16

நெறி நீர் அருவி அசும்பு உறு செல்வம் – பரி 8/128

வேய் பயில் சோலை அருவி தூர்த்தர – பரி 11/23

அருவி உருவின் ஆரமொடு அணிந்த நின் – பரி 13/11

அலங்கும் அருவி ஆர்த்து இமிழ்பு இழிய – பரி 15/21

மலையின் இழி அருவி மல்கு இணர் சார் சார் – பரி 16/32

ஒருதிறம் அண்ணல் நெடு வரை அருவி நீர் ததும்ப – பரி 17/14

கீழோர் வயல் பரக்கும் வார் வெள் அருவி பரந்து ஆனாது அரோ – பரி 17/40

அம் வெள் அருவி அணி பரங்குன்றிற்கும் – பரி 17/43

அருவி ஆர்ப்ப முத்து அணிந்தன வரை – பரி 18/46

அருவி சொரிந்த திரையின் துரந்து – பரி 20/103

பாணி முழவு இசை அருவி நீர் ததும்ப – பரி 21/36

அசும்பும் அருவி அரு விடர் பரந்த – பரி 21/52

காதலர் எயிறு ஏய்க்கும் தண் அருவி நறு முல்லை – கலி 32/16

தண் அருவி நறு முல்லை தாது உண்ணும் பொழுது அன்றோ – கலி 35/10

தண் தாழ் அருவி அரமகளிர் ஆடுபவே – கலி 40/23

கறங்கு வெள் அருவி ஓலின் துஞ்சும் – கலி 42/3

அதிர் இசை அருவி தன் அம் சினை மிசை வீழ – கலி 44/3

கால் பொர நுடங்கல கறங்கு இசை அருவி நின் – கலி 45/8

அயம் நந்தி அணி பெற அருவி ஆர்த்து இழிதரும் – கலி 53/6

மணி வரை மருங்கின் அருவி போல – கலி 103/11

அமைவரல் அருவி ஆர்க்கும் – கலி 105/73

கணம்கொள் அருவி கான் கெழு நாடன் – அகம் 22/2

அருவி ஆன்ற பைம் கால்-தோறும் – அகம் 28/4

அய வெள் அருவி சூடிய உயர் வரை – அகம் 38/16

இன் இசை அருவி பாடும் என்னதூஉம் – அகம் 68/3

பாடு இன் அருவி பனி நீர் இன் இசை – அகம் 82/3

அருவி ஆன்ற பெரு வரை மருங்கில் – அகம் 91/3

தண் பல் அருவி தாழ் நீர் ஒரு சிறை – அகம் 92/10

அருவி ஆம்பல் அகல் அடை துடக்கி – அகம் 96/5

கறங்கு வெள் அருவி பிறங்கு மலை கவாஅன் – அகம் 118/1

ஒளிறுவன இழிதரும் உயர்ந்து தோன்று அருவி/நேர்கொள் நெடு வரை கவாஅன் – அகம் 162/23,24

அருவி ஆர்க்கும் பெரு வரை சிலம்பின் – அகம் 168/8

பிரசமொடு விரைஇய வயங்கு வெள் அருவி/இன் இசை இமிழ் இயம் கடுப்ப இம்மென – அகம் 172/2,3

அருவி ஆன்ற உயர் சிமை மருங்கில் – அகம் 185/10

அருவி தந்த அரவு உமிழ் திரு மணி – அகம் 192/11

ஓங்கு வெள் அருவி வேங்கடத்து உம்பர் – அகம் 213/3

வரை இழி அருவி ஆரம் தீண்டி – அகம் 228/2

அருவி ஆன்ற வெருவரு நனம் தலை – அகம் 241/8

அருவி ஆர்க்கும் அயம் திகழ் சிலம்பின் – அகம் 262/14

அருவி தந்த அணங்கு உடை நெடும் கோட்டு – அகம் 272/3

வாள் இலங்கு அருவி தாஅய் நாளை – அகம் 278/7

இட்டு ஆறு இரங்கும் விட்டு ஒளிர் அருவி/அரு வரை இழிதரும் வெரு வரு படாஅர் – அகம் 288/10,11

நல் வரை நாடனொடு அருவி ஆடியும் – அகம் 302/4

வால் வெள் அருவி புனல் மலிந்து ஒழுகலின் – அகம் 308/4

வரை இழி அருவி பாட்டொடு பிரசம் – அகம் 318/5

சிறு வெள் அருவி துவலையின் மலர்ந்த – அகம் 345/15

பாடு இமிழ் அருவி பாறை மருங்கின் – அகம் 352/3

அருவி ஆம்பல் கலித்த முன்துறை – அகம் 356/18

பெரு வரை இழிதரும் நெடு வெள் அருவி/ஓடை யானை உயர் மிசை எடுத்த – அகம் 358/12,13

அருவி துவலையொடு மயங்கும் – அகம் 359/15

இலங்கு வெள் அருவி போலவும் – அகம் 362/14

பாடு இன் அருவி சூடி – அகம் 378/23

அருவி பாய்ந்த கரு விரல் மந்தி – அகம் 382/9

பெய்யினும் பெய்யாது ஆயினும் அருவி/கொள் உழு வியன் புலத்து உழை கால் ஆக – புறம் 105/4,5

ஒருசார் அருவி ஆர்ப்ப ஒருசார் – புறம் 115/1

பாடு ஆன்று இரங்கும் அருவி/பீடு கெழு மலையன் பாடியோரே – புறம் 124/4,5

பறை இசை அருவி முள்ளூர் பொருந – புறம் 126/8

சிறு வெள் அருவி பெரும் கல் நாடனை – புறம் 137/13

குணில் பாய் முரசின் இரங்கும் அருவி/நளி இரும் சிலம்பின் சீறூர் ஆங்கண் – புறம் 143/9,10

கல் முழை அருவி பன் மலை நீந்தி – புறம் 147/1

கல் மிசை அருவி தண்ணென பருகி – புறம் 150/16

சாரல் அருவி பய மலை கிழவன் – புறம் 152/11

தண் பல இழிதரும் அருவி நின் – புறம் 154/12

கறங்கு வெள் அருவி கல் அலைத்து ஒழுகும் – புறம் 158/3

அருவி ஆர்க்கும் கழை பயில் நனம் தலை – புறம் 168/1

அருவி தாழ்ந்த பெரு வரை போல – புறம் 198/1

அருவி மாறி அஞ்சுவர கருகி – புறம் 224/12

பறை இசை அருவி நன் நாட்டு பொருநன் – புறம் 229/14

கழை கண் நெடு வரை அருவி ஆடி – புறம் 251/4

கறங்கு வெள் அருவி ஏற்றலின் நிறம் பெயர்ந்து – புறம் 252/1

எழிலி தோயும் இமிழ் இசை அருவி/பொன் உடை நெடும் கோட்டு இமையத்து அன்ன – புறம் 369/23,24

ஒலி வெள் அருவி வேங்கட நாடன் – புறம் 381/22

கல் இழி அருவி வேங்கடம் கிழவோன் – புறம் 389/11

பறை இசை அருவி பாயல் கோவே – புறம் 398/30

இழுமென இழிதரும் அருவி/வான் தோய் உயர் சிமை தோன்றி கோவே – புறம் 399/33,34

இலங்கும் அருவித்து இலங்கும் அருவித்தே – கலி 41/18

இலங்கும் அருவித்து இலங்கும் அருவித்தே/வானின் இலங்கும் அருவித்தே தான் உற்ற – கலி 41/18,19

வானின் இலங்கும் அருவித்தே தான் உற்ற – கலி 41/19

வாள் நிறம் கொண்ட அருவித்தே நம் அருளா – கலி 42/11

ஒளிறு இலங்கு அருவிய மலை கிழவோனே – பெரும் 500

இலங்கு அருவிய வரை நீந்தி – மது 57

ஒன்று இலங்கு அருவிய குன்று இறந்தோரே – நற் 18/10

எழுந்து வீழ் அருவிய மலை கிழவோனே – நற் 228/9

நெடு நீர் அருவிய கடும் பாட்டு ஆங்கண் – நற் 251/1

நிரந்து இலங்கு அருவிய நெடு மலை நாடன் – ஐங் 228/2

அயம் இழி அருவிய அணி மலை நன் நாட – கலி 46/9

கல் மிசை அருவிய காடு இறந்தோரே – அகம் 25/22

வயங்கு வெள் அருவிய குன்றத்து கவாஅன் – அகம் 202/1

இலங்கு வெள் அருவிய அறை வாய் உம்பர் – அகம் 251/14

கறங்கு மிசை அருவிய பிறங்கு மலை நள்ளி நின் – புறம் 148/1

பெரு வரை மருங்கின் அருவியின் நுடங்க – மது 374

கல் இழி அருவியின் ஒல்லென ஒலிக்கும் – நற் 107/5

கல் மிசை அருவியின் கழூஉம் சாரல் – நற் 151/4

அருவியின் ஒலித்தல் ஆனா – நற் 313/10

வரை இழி அருவியின் தோன்றும் நாடன் – குறு 106/2

குன்று இழி அருவியின் வெண் தேர் முடுக – குறு 189/2

அருவியின் விளைக்கும் நாடனொடு – குறு 371/3

வரை இழி அருவியின் ஒளிறு கொடி நுடங்க – பதி 25/11

வரை மிசை இழிதரும் அருவியின் மாடத்து – பதி 47/3

வரை மிசை அருவியின் வயின்வயின் நுடங்க – பதி 69/2

அருவியின் ஒலிக்கும் வரி புனை நெடும் தேர் – பதி 92/7

பனி புலர்பு ஆடி பரு மணல் அருவியின்/ஊதை ஊர்தர உறை சிறை வேதியர் – பரி 11/83,84

இறுவரை இழிதரும் பொன் மணி அருவியின்/நிறனொடு மாறும் தார் புள்ளு பொறி புனை கொடி – பரி 13/3,4

அரும் சிமை இழிதரும் ஆர்த்து வரல் அருவியின்/ததும்பு சீர் இன் இயம் கறங்க கைதொழுது – அகம் 138/8,9

கல் பால் அருவியின் ஒலிக்கும் நல் தேர் – அகம் 184/17

ததைந்து செல் அருவியின் அலர் எழ பிரிந்தோர் – அகம் 303/7

வேங்கையும் புலி ஈன்றன அருவியும்/தேம் படு நெடு வரை மணியின் மானும் – நற் 389/1,2

இமிழ் இசை அருவியொடு இன் இயம் கறங்க – திரு 240

இலங்கு வெள் அருவியொடு சிலம்பு_அகத்து இரட்ட – மது 299

பரந்து இலங்கு அருவியொடு நரந்தம் கனவும் – பதி 11/22

தண்டா அருவியொடு இரு முழவு ஆர்ப்ப – பரி 23/52

இலங்கு தாழ் அருவியோடு அணி கொண்ட நின் மலை – கலி 46/25

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *