Skip to content
அரை

அரை என்பதன் பொருள்அரசமரம்

1. சொல் பொருள்

  1. (வி) கூழாக்கு,

2. (பெ) 1. இடுப்பு, இடை, 2. தண்டு, 3. அடிமரம், 4. நடுப்பகுதி, 5. பாதி, 6.அரசமரம்.

2. சொல் பொருள் விளக்கம்

சிறுத்த அல்லது ஒடுங்கிய இடை

உடம்பின் நடுநடுப்பகுதி, பாதி

அரையம், இக்காலத்தே இஃது அரசமரம் என மருவி வழங்கும்; முன்னாளில் அரை என்றே நின்று பின்பு புணரியல் நிலையிடைப்பெற்ற அம்முச் சாரியையை இறுதியாகக் கொண்டு வழங்குவதாயிற்று.

பனையும் அரையும் ஆவிரைக் கிளவியும், நினையுங் காலை அம்மொடு சிவணும்” (தொல். 284)

என்பது காண்க. இங்கே கூறிய ஆவிரை ஆவிரம் என நின்று ஆவாரம் என மருவிவிட்டது. (ஐங்குறு. 325. ஒளவை சு.து.)

மொழிபெயர்ப்புகள்

3. ஆங்கிலம்

grind, crush, waist, loins, stem, trunk, mid portion, half

4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு

பனையும் அரையும் ஆவிரை கிளவியும் - எழுத். உயி.மயங்:81/1

அரை உற்று அமைந்த ஆரம் நீவி – அகம் 100/1

நறுமணம் கூட்டி அரைக்கப்பெற்று முடித்த சந்தனத்தைப் பூசி

இழை மருங்கு அறியா நுழை நூல் கலிங்கம்
எள் அறு சிறப்பின் வெள் அரை கொளீஇ – மலை 561,562

இழை இருக்
குமிடம் தெரியாத அளவில் நுண்ணிய நூலால் நெய்த புடைவைகளை
ஏளனம் அற்ற சிறப்பு உண்டாக உட்கூடுபாய்ந்த இடுப்பில் உடுத்தி,

முள் அரை தாமரை முகிழ் விரி நாள்போது – சிறு 183

முள்(இருக்கும்) தண்டினை(க்கொண்ட) தாமரையின் அரும்பு விரிந்த அன்றைய பூவின்

பரி அரை கமுகின் பாளை அம் பசும் பூ – பெரும் 7

பருத்த அடிமரத்தையுடைய கமுகின் பாளையாகிய அழகினையுடைய இளம் பூ

குளகு அரை யாத்த குறும் கால் குரம்பை – பெரும் 148

தழைகள் தம் நடுப்பகுதியிலே கட்டின குறுகிய கால்களையுடைய குடிலின்

உரவு உரும் உரறும் அரை இருள் நடுநாள் – நற் 68/8

வலிய இடி முழங்குகின்ற இரவின் அரைப்பாகமான நடுச்சாமத்தில்

அரையோடு அலர் பிண்டி மருவி குண்டிகை - தேவா-சம்:502/1

அரச மரத்தையும் தழைத்த அசோக மரத்தையும் புனித மரங்களாகக் கொண்டு குண்டிகையாக

மெய்யின் அளபே அரை என மொழிப - எழுத். நூல்:11/1

அரை அளபு குறுகல் மகரம் உடைத்தே - எழுத். நூல்:13/1

அரை என வரூஉம் பால் வரை கிளவிக்கு - எழுத். தொகை:23/1

ஐ என் இறுதி அரை வரைந்து கெடுமே - எழுத். உயி.மயங்:81/3

ஆண்மர கிளவி அரைமர இயற்றே - எழுத். புள்.மயங்:9/1

அத்து இட்ட கூறை அரை சுற்றி வாழினும் - நாலடி:29 1/1

செய்யன் சிவந்த ஆடையன் செ அரை/செயலை தண் தளிர் துயல்வரும் காதினன் - திரு 206,207

முள் அரை தாமரை முகிழ் விரி நாள்_போது - சிறு 183

பரி அரை கமுகின் பாளை அம் பசும் பூ - பெரும் 7

துளை அரை சீறுரல் தூங்க தூக்கி - பெரும் 54

நீள் அரை இலவத்து அலங்கு சினை பயந்த - பெரும் 83

முள் அரை தாமரை புல் இதழ் புரையும் - பெரும் 114

குளகு அரை யாத்த குறும் கால் குரம்பை - பெரும் 148

திரள் அரை பெண்ணை நுங்கொடு பிறவும் - பெரும் 360

அ நிலை அணுகல் வேண்டி நின் அரை/பாசி அன்ன சிதர்வை நீக்கி - பெரும் 467,468

திணி நிலை கடம்பின் திரள் அரை வளைஇய - குறி 176

கல் எறிந்து எழுதிய நல் அரை மராஅத்த - மலை 395

புல் அரை காஞ்சி புனல் பொரு புதவின் - மலை 449

எள் அறு சிறப்பின் வெள் அரை கொளீஇ - மலை 562

பொரி அரை வேம்பின் புள்ளி நீழல் - நற் 3/2

அரை செறி கச்சை யாப்பு அழித்து அசைஇ - நற் 21/2

செவ்வி சேர்ந்த புள்ளி வெள் அரை/விண்டு புரையும் புணர் நிலை நெடும் கூட்டு - நற் 26/2,3

உரவு உரும் உரறும் அரை இருள் நடுநாள் - நற் 68/8

முளி கொடி வலந்த முள் அரை இலவத்து - நற் 105/1

புல் அரை இரத்தி பொதி புற பசும் காய் - நற் 113/2

மா அரை புதைத்த மணல் மலி முன்றில் - நற் 135/2

பொரி அரை ஞெமிர்ந்த புழல் காய் கொன்றை - நற் 141/3

மா அரை மறைகம் வம்-மதி பானாள் - நற் 307/7

ஆடு அரை பெண்ணை தோடு மடல் ஏறி - நற் 338/9

ஆடு அரை ஒழித்த நீடு இரும் பெண்ணை - நற் 354/2

நல் அரை முழு_முதல் அ-வயின் தொடுத்த - நற் 354/6

நரை உரும் உரரும் அரை இருள் நடுநாள் - குறு 190/5

ஆடு அரை புதைய கோடை இட்ட - குறு 248/4

பொரி அரை முழுமுதல் உருவ குத்தி - குறு 255/2

அரை நாள் வாழ்க்கையும் வேண்டலன் யானே - குறு 280/5

புல் அரை உகாஅய் வரி நிழல் வதியும் - குறு 363/4

புல் அரை ஓமை நீடிய - ஐங் 316/4

முள் அரை இலவத்து ஒள் இணர் வான் பூ - ஐங் 320/1

பொரி அரை கோங்கின் பொன் மருள் பசு வீ - ஐங் 367/1

நூலாகலிங்கம் வால் அரை கொளீஇ - பதி 12/21

கல் பிறங்கு வைப்பின் கடறு அரை யாத்த நின் - பதி 53/4

கறங்கு இசை சிதடி பொரி அரை பொருந்திய - பதி 58/13

விடை அரை அசைத்த வேலன் கடி_மரம் - பரி 17/3

அரை வரை மேகலை அணி நீர் சூழி - பரி 21/14

முள் அரை தாமரை முழு_முதல் சாய்த்து அதன் - கலி 79/2

முள் அரை பிரம்பின் மூதரில் செறியும் - அகம் 6/19

பெரும் களிறு உரிஞ்சிய மண் அரை யாஅத்து - அகம் 17/16

நீள் அரை இலவத்து ஊழ் கழி பன் மலர் - அகம் 17/18

பொரி அரை புதைத்த புலம்பு கொள் இயவின் - அகம் 53/9

புல் அரை இத்தி புகர் படு நீழல் - அகம் 77/13

பொகுட்டு அரை இருப்பை குவி குலை கழன்ற - அகம் 95/6

புகர் அரை தேக்கின் அகல் இலை மாந்தும் - அகம் 107/10

பேஎய் தலைய பிணர் அரை தாழை - அகம் 130/5

புல் அரை இருப்பை தொள்ளை வான் பூ - அகம் 149/3

கள்ளி முள் அரை பொருந்தி செல்லுநர்க்கு - அகம் 151/12

பொரி அரை விளவின் புன் புற விளை புழல் - அகம் 219/14

கயிறு அரை யாத்த காண்_தகு வனப்பின் - அகம் 220/7

வாங்கு சினை மலிந்த திரள் அரை மராஅத்து - அகம் 221/7

நிழல் பட கவின்ற நீள் அரை இலவத்து - அகம் 245/14

நார் அரை மருங்கின் நீர் வர பொளித்து - அகம் 257/15

திரள் அரை இருப்பை தொள்ளை வான் பூ - அகம் 275/11

புரிசை மூழ்கிய பொரி அரை ஆலத்து - அகம் 287/7

புற்று அரை யாத்த புலர் சினை மரத்த - அகம் 327/14

தேன் தேர் சுவைய திரள் அரை மாஅத்து - அகம் 348/2

திருந்து அரை நிவந்த கரும் கால் வேங்கை - அகம் 349/10

அணை அணைந்து இனையை ஆகல் கணை அரை/புல் இலை நெல்லி புகர் இல் பசும் காய் - அகம் 363/5,6

பூதம் தந்த பொரி அரை வேங்கை - அகம் 365/13

மணி அரை யாத்து மறுகின் ஆடும் - அகம் 368/17

அரை சேர் யாத்த வெண் திரள் வினை விறல் - அகம் 375/9

திருந்து அரை ஞெமைய பெரும் புன குன்றத்து - அகம் 395/13

போழ் புண் படுத்த பொரி அரை ஓமை - அகம் 397/11

பெரும் பொளி சேய அரை நோக்கி ஊன் செத்து - அகம் 397/12

திருந்து அரை நோன் வெளில் வருந்த ஒற்றி - புறம் 44/3

இன்றின் ஊங்கோ கேளலம் திரள் அரை/மன்ற வேம்பின் மா சினை ஒண் தளிர் - புறம் 76/3,4

முழா அரை போந்தை பொருந்தி நின்று - புறம் 85/7

களிறு இல ஆகிய புல் அரை நெடு வெளில் - புறம் 127/3

ஆர் இருள் அரை இரவில் - புறம் 229/2

கவை முள் கள்ளி பொரி அரை பொருந்தி - புறம் 322/2

அரை மண் இஞ்சி நாள்கொடி நுடங்கும் - புறம் 341/5

முழா அரை போந்தை அர வாய் மா மடல் - புறம் 375/4

பண்டு அறி வாரா உருவோடு என் அரை/தொன்றுபடு துளையொடு பரு இழை போகி - புறம் 376/9,10

வறன் யான் நீங்கல் வேண்டி என் அரை/நிலம் தின சிதைந்த சிதாஅர் களைந்து - புறம் 385/5,6

தன் உழை குறுகல் வேண்டி என் அரை/முது நீர் பாசி அன்ன உடை களைந்து - புறம் 390/13,14

விரும்பிய முகத்தன் ஆகி என் அரை/துரும்பு படு சிதாஅர் நீக்கி தன் அரை - புறம் 398/18,19

துரும்பு படு சிதாஅர் நீக்கி தன் அரை/புகை விரிந்து அன்ன பொங்கு துகில் உடீஇ - புறம் 398/19,20

கலிங்கம் அளித்திட்டு என் அரை நோக்கி - புறம் 400/12

விண் முழுது அன்றி மண் முழுது இறைஞ்சும் வேந்தர் வேந்து அரை நொடி பொழுதில் - தேம்பா:14 41/2

அரை ஒழியா முனர் அகன்று யாண்டையும் - தேம்பா:14 101/3

இலங்கு அரை உயர் மலை என கண்டு உம்பரை - தேம்பா:14 127/3

அழல் எழ வளைத்த சாபம் நிமிர் இல அரை நொடி முடித்து இலாது விடு கணை - தேம்பா:24 33/1

மேக மாலை மிடைந்து அரை கீழ் உறை - தேம்பா:32 1/2

முறி கலந்தது ஒரு தோல் அரை மேல் உடையான் இடம் மொய்ம் மலரின் - தேவா-சம்:12/3

புற்றில் வாழும் அரவம் அரை ஆர்த்தவன் மேவும் புகலூரை - தேவா-சம்:22/1

புற்றில் நாகம் அரை ஆர்த்து உழல்கின்ற எம் பெம்மான் மடவாளோடு - தேவா-சம்:26/2

அரவம் எல்லாம் அரை ஆர்த்த செல்வர்க்கு ஆட்செய அல்லல் அறுக்கல் ஆமே - தேவா-சம்:46/4

அளை பயில் பாம்பு அரை ஆர்த்த செல்வர்க்கு ஆட்செய அல்லல் அறுக்கல் ஆமே - தேவா-சம்:49/4

குண்டர்களோடு அரை கூறை இல்லார் கூறுவது ஆம் குணம் அல்ல கண்டீர் - தேவா-சம்:53/2

அரை பொரு புலி அதள் உடையினன் அடி இணை தொழ அருவினை எனும் - தேவா-சம்:200/3

புலியின் அதள் கொண்டு அரை ஆர்த்த புனிதன் - தேவா-சம்:318/2

ஆடு ஆர் அரவம் அரை ஆர்த்து அமர்வானே - தேவா-சம்:333/4

படம் கொண்டது ஒரு பாம்பு அரை ஆர்த்த பரமன் - தேவா-சம்:339/3

அரை ஆர் விரி கோவண ஆடை - தேவா-சம்:371/1

அரவம் அரை ஆர்த்த அழகன் - தேவா-சம்:374/2

அரை புல்கும் ஐந்தலை ஆடல் அரவம் அமைய வெண் கோவணத்தோடு அசைத்து - தேவா-சம்:418/1

சூழ் தரு பாம்பு அரை ஆர்த்து சூலமோடு ஒண் மழு ஏந்தி - தேவா-சம்:422/2

அரை கெழு கோவண ஆடையின் மேல் ஓர் ஆடு அரவம் அசைத்து ஐயம் - தேவா-சம்:427/1

அன்னம் அன்ன மென் நடையாள் பாகம் அமர்ந்து அரை சேர் - தேவா-சம்:553/3

வரி வளர் அவிர் ஒளி அரவு அரை தாழ வார் சடைமுடி மிசை வளர் மதி சூடி - தேவா-சம்:842/1

அரை ஆர் அழல் நாகம் அக்கோடு அசைத்திட்டு - தேவா-சம்:910/1

நாகம் அரை ஆர்த்தான் நல்லம் நகரானே - தேவா-சம்:923/4

அரை ஆர்தரு நாகம் அணிவான் அலர் மாலை - தேவா-சம்:962/1

வெற்று அரை உழல்பவர் விரி துகிலார் - தேவா-சம்:1183/1

அரை பொரு புலி அதள் அடிகள் இடம் - தேவா-சம்:1197/2

கொட்டுவர் அக்கு அரை ஆர்ப்பது தக்கை குறும் தாளன - தேவா-சம்:1263/1

அரை ஆர் வெண் கோவணத்த அண்ணல் தானே - தேவா-சம்:1286/4

போர்த்தவன் கரி உரி புலி அதள் அரவு அரை
ஆர்த்தவன் வள நகர் அம் தண் ஐயாறே - தேவா-சம்:1294/3,4

அரை பொரு புலி அதள் உடையினர் அதன் மிசை - தேவா-சம்:1319/2

அரை ஆர் அரவம் அழகா அசைத்தான் - தேவா-சம்:1443/2

உடையன் புலியின் உரி தோல் அரை மேல் - தேவா-சம்:1446/3

தோலும் தம் அரை ஆடை சுடர்விடு - தேவா-சம்:1451/1

அரை செய் மேகலையானும் ஐயாறு உடை ஐயனே - தேவா-சம்:1532/4

அரை ஆர் கலை சேர் அன மென் நடையை - தேவா-சம்:1649/1

பாம்பு அரை சாத்தி ஓர் பண்டரங்கன் விண்டது ஓர் - தேவா-சம்:1941/1

அக்கு அரை மேல் அசைத்தானும் அடைந்து அயிராவதம் பணிய - தேவா-சம்:1988/2

தையலாளொடு பிச்சைக்கு இச்சை தயங்கு தோல் அரை ஆர்த்த வேடம் கொண்டு - தேவா-சம்:2012/3

அரை ஆர்ந்த மேகலையீர் அந்தணாளர் தலைச்சங்கை - தேவா-சம்:2066/3

ஆடல் புரியும் ஐவாய்அரவு ஒன்று அரை சாத்தும் - தேவா-சம்:2117/1

நாகம் அரை மேல் அசைத்து நடம் ஆடிய நம்பன் - தேவா-சம்:2138/3

வெற்று அரை சீவரத்தார்க்கு வெளிப்பட நின்றிலர் போலும் - தேவா-சம்:2176/1

கான் ஆர் களிற்று உரிவை மேல் மூடி ஆடு அரவு ஒன்று அரை மேல் சாத்தி - தேவா-சம்:2251/1

பிச்சர் நச்சு அரவு அரை பெரிய சோதி பேணுவார் - தேவா-சம்:2521/3

பை மிகுத்த பாம்பு அரை பரமர் காழி சேர்-மினே - தேவா-சம்:2524/4

தக்கனார் தலை அரிந்த சங்கரன் தனது அரை
அக்கினோடு அரவு அசைத்த அந்திவண்ணர் காழியை - தேவா-சம்:2527/1,2

அக்கு அணிந்து அரை மிசை ஆறு அணிந்த சென்னி மேல் - தேவா-சம்:2541/3

தூசுதான் அரை தோல் உடை கண்ணி அம் சுடர்விடு நறும் கொன்றை - தேவா-சம்:2589/1

கிளர் இள மணி அரவு அரை ஆர்த்து ஆடும் வேட கிறிமையார் - தேவா-சம்:2670/2

விடம் முன் ஆர் அ அழல் வாயது ஓர் பாம்பு அரை வீக்கியே - தேவா-சம்:2773/1

வெண் புலால் மார்பு இடு துகிலினர் வெற்று அரை உழல்பவர் - தேவா-சம்:2778/1

நாகம் நல்லார் பரவம் நயந்து அங்கு அரை ஆர்த்தவன் - தேவா-சம்:2784/2

வெற்று அரை உழல்வார் துவர் ஆடைய வேடத்தார் அவர்கள் உரை கொள்ளன்-மின் - தேவா-சம்:2810/1

புடை பட அரை மிசை புனைந்தவனே - தேவா-சம்:2828/2

துற்று அரை ஆர் துவர் ஆடையர் துப்புரவு ஒன்று இலா - தேவா-சம்:2898/1

அரை அரவு ஆட நின்று ஆடல் பேணும் அம்மான் அல்லனே - தேவா-சம்:2903/4

புலி அதள் பாம்பு அரை சுற்றினானும் புனவாயிலில் - தேவா-சம்:2914/2

படையினார் வெண் மழு பாய் புலி தோல் அரை
உடையினார் உமைஒருகூறனார் ஊர்வது ஓர் - தேவா-சம்:3085/1,2

அரை உலாம் கோவணத்து அடிகள் வேடங்களே - தேவா-சம்:3111/4

பைத்த பாம்போடு அரை கோவணம் பாய் புலி - தேவா-சம்:3118/1

புற்று அரவம் புலி தோல் அரை கோவணம் - தேவா-சம்:3123/1

அரவு அரை அழகனை அடி இணை பணி-மினே - தேவா-சம்:3129/4

மிக்கு அரை தாழ வேங்கை உரி ஆர்த்து உமையாள் வெருவ - தேவா-சம்:3430/1

சிங்க அரை மங்கையர்கள் தங்களன செங்கை நிறை கொங்கு மலர் தூய் - தேவா-சம்:3528/1

கல்லவடம் மொந்தை குழல் தாளம் மலி கொக்கரையர் அக்கு அரை மிசை - தேவா-சம்:3652/1

பல் வளரும் நாகம் அரை யாத்து வரைமங்கை ஒருபாகம் - தேவா-சம்:3691/1

அக்குடை வடமும் ஒர் அரவமும் அலர் அரை மிசையினில் - தேவா-சம்:3702/2

அக்கினொடு அரவு அரை அணி திகழ் ஒளியது ஒர் ஆமை பூண்டு - தேவா-சம்:3718/1

அம் கதிர் ஒளியினர் அரை இடை மிளிர்வது ஒர் அரவொடு - தேவா-சம்:3747/1

அரை மல்கு புலிஅதளீரே - தேவா-சம்:3819/2

அரை மல்கு புலிஅதளீர் உமது அடி இணை - தேவா-சம்:3819/3

அரை விரி கோவணத்தீரே - தேவா-சம்:3833/2

அரை விரி கோவணத்தீர் உமை அலர் கொடு - தேவா-சம்:3833/3

பொறி கிளர் பாம்பு அரை ஆர்த்து அயலே புரிவோடு உமை பாட - தேவா-சம்:3880/1

அரை தரு பூம் துகில் ஆரணங்கை அமர்ந்தார் இடம் போலும் - தேவா-சம்:3907/3

அக்கு அரவோடு அரை ஆர்த்து உகந்த அழகன் குழகு ஆக - தேவா-சம்:3950/2

வெற்று அரை ஆகிய வேடம் காட்டி திரிவார் துவர் ஆடை - தேவா-சம்:3954/1

மை திகழ் நஞ்சு உமிழ் மாசுணமே மகிழ்ந்து அரை சேர்வதும் மா சுணமே - தேவா-சம்:4015/1

படம் கொள் அரவு அரை செய்தனனே பகடு உரிகொண்டு அரைசெய்தனனே - தேவா-சம்:4016/3

ஆடு பாம்பு அரை ஆர்த்தது உடை அதே அஞ்சு பூதமும் ஆர்த்தது உடையதே - தேவா-சம்:4028/2

நீடு செய்வதும் தக்கதே நின் அரை திகழ்ந்தது அக்கு அதே - தேவா-சம்:4048/3

அரை மல்கு வாள் அரவு ஆட்டு உகந்தீரே - தேவா-சம்:4132/4

அரவு அரை சாத்தி நின்றானும் ஆரூர் அமர்ந்த அம்மானே - தேவா-அப்:33/4

பை வாய் பாம்பு அரை ஆர்த்த பரமனை கைகாள் கூப்பி தொழீர் - தேவா-அப்:88/2

பார்த்தனுக்கு அருளும் வைத்தார் பாம்பு அரை ஆட வைத்தார் - தேவா-அப்:317/1

அரை முழம் அதன் அகலம் அதனில் வாழ் முதலை ஐந்து - தேவா-அப்:435/2

வளை எயிற்று இளைய நாகம் வலித்து அரை இசைய வீக்கி - தேவா-அப்:531/2

அக்கு அரை ஆர்ப்பர் போலும் ஆவடுதுறையனாரே - தேவா-அப்:543/4

அக்கு அரை அணிவர் போலும் ஐந்தலை அரவர் போலும் - தேவா-அப்:647/2

நக்க அரை உருவர் போலும் நாகஈச்சுரவனாரே - தேவா-அப்:647/4

வெற்று அரை சமணரோடு விலை உடை கூறை போர்க்கும் - தேவா-அப்:667/1

பன்னிய மறையர் போலும் பாம்பு அரை உடையர் போலும் - தேவா-அப்:698/1

அரை கிடந்து அசையும் நாகம் அசைப்பனே இன்ப வாழ்க்கைக்கு - தேவா-அப்:757/3

பழிப்பட்ட பாம்பு அரை பற்று உடையீர் படர் தீ பருக - தேவா-அப்:930/2

பாம்பு அரை சேர்த்தி படரும் சடை முடி பால்_வண்ணனே - தேவா-அப்:963/1

துடிக்கின்ற பாம்பு அரை ஆர்த்து துளங்கா மதி அணிந்து - தேவா-அப்:989/1

பை கொள் பாம்பு அரை ஆர்த்த பரமனார் - தேவா-அப்:1088/2

அடைகிலா அரவை அரை ஆர்த்தவர் - தேவா-அப்:1123/2

பற்றி ஆட்டி ஓர் ஐந்தலை பாம்பு அரை
சுற்றியார் அவர் தூ நெறியால் மிகு - தேவா-அப்:1226/2,3

அக்கு அரையோடு அரவு அரை ஆர்த்தவன் - தேவா-அப்:1289/3

பை கொள் பாம்பு அரை ஆர்த்த பழனம்-பால் - தேவா-அப்:1418/3

அரை ஆர் கோவண ஆடையன் ஆறு எலாம் - தேவா-அப்:1606/1

அஞ்சும் அஞ்சும் ஓர் ஆடி அரை மிசை - தேவா-அப்:1948/1

பற்றினானை ஓர் வெண் தலை பாம்பு அரை
சுற்றினானை கண்டீர் தொழல்-பாலதே - தேவா-அப்:2004/3,4

பை கொள் பாம்பு அரை ஆர்த்த பரமனே - தேவா-அப்:2035/4

அரு அரா அரை ஆர்த்தவன் ஆர் கழல் - தேவா-அப்:2036/3

பட அம் பாம்பு அரை ஆர்த்த பரமனை - தேவா-அப்:2044/3

ஐந்தலைய மாசுணம் கொண்டு அரை ஆர்க்குமே அவன் ஆகில் அதிகைவீரட்டன் ஆமே - தேவா-அப்:2118/4

சூடுமே அரை திகழ தோலும் பாம்பும் சுற்றுமே தொண்டை வாய் உமை ஓர்பாகம் - தேவா-அப்:2122/2

அரை ஏறு மேகலையாள் பாகம் ஆக ஆர் இடத்தில் ஆடல் அமர்ந்த ஐயன் - தேவா-அப்:2220/3

அரை சேர் அரவன் ஆம் ஆலத்தான் ஆம் ஆதிரைநாளான் ஆம் அண்ட வானோர் - தேவா-அப்:2239/1

பரியது ஓர் பாம்பு அரை மேல் ஆர்த்தார் போலும் பாசுபதம் பார்த்தற்கு அளித்தார் போலும் - தேவா-அப்:2365/1

அக்கு அரை மேல் ஆடல் உடையான் கண்டாய் அனல் அங்கை ஏந்திய ஆதி கண்டாய் - தேவா-அப்:2477/2

அரை அதனில் புள்ளி அதள் உடையான் கண்டாய் அழல் ஆடி கண்டாய் அழகன் கண்டாய் - தேவா-அப்:2816/2

விடம் திகழும் அரவு அரை மேல் வீக்கினானை விண்ணவர்க்கும் எண்ண அரிய அளவினானை - தேவா-அப்:2875/1

அரை ஆர்ந்த புலி தோல் மேல் அரவம் ஆர்த்த அம்மானை தம்மானை அடியார்க்கு என்றும் - தேவா-அப்:2941/2

அலங்கல் சடை தாழ ஐயம் ஏற்று அரவம் அரை ஆர்க்க வல்லார் போலும் - தேவா-அப்:2972/1

அக்கினொடு பட அரவம் அரை மேல் கொண்டார் அனைத்து உலகும் படைத்து அவையும் அடங்க கொண்டார் - தேவா-அப்:3028/2

மின் ஒத்த நுண்இடையாள்_பாகம் கண்டேன் மிளிர்வது ஒரு பாம்பும் அரை மேல் கண்டேன் - தேவா-அப்:3046/2

சோத்திட்டு விண்ணோர் பலரும் தொழ நும் அரை கோவணத்தோடு ஒரு தோல் புடை சூழ்ந்து - தேவா-சுந்:11/3

புற்று ஆடு அரவம் அரை ஆர்த்து உகந்தாய் புனிதா பொரு வெள் விடைஊர்தியினாய் - தேவா-சுந்:24/1

ஆவணம் செய்து ஆளும் கொண்டு அரை துகிலொடு பட்டு வீக்கி - தேவா-சுந்:51/2

காப்பது வேள்விக்குடி தண் துருத்தி எம் கோன் அரை மேல் - தேவா-சுந்:178/3

ஆர்த்தவர் ஆடு அரவம் அரை மேல் புலி ஈர் உரிவை - தேவா-சுந்:193/1

வெற்று அரை கற்ற அமணும் விரையாது வெண் தாலம் உண்ணும் - தேவா-சுந்:227/1

ஆர்த்தாய் ஆடு அரவை அரை ஆர் புலி அதன் மேல் - தேவா-சுந்:234/1

அரை ஆர் கீளொடு கோவணமும் அரவும் அசைத்து - தேவா-சுந்:274/1

வெய்ய பாம்பு அரை ஆர்ப்பரோ விடை ஏறரோ கடை-தோறும் சென்று - தேவா-சுந்:336/3

கை ஒர் பாம்பு அரை ஆர்த்த ஒர் பாம்பு கழுத்து ஒர் பாம்பு அவை பின்பு தாழ் - தேவா-சுந்:370/1

பாண் உலா வரி வண்டு அறை கொன்றை தாரனை பட பாம்பு அரை
நாணனை தொண்டன் ஊரன் சொல் இவை சொல்லுவார்க்கு இல்லை துன்பமே - தேவா-சுந்:497/3,4

படம்கொள் நாகம் அரை ஆர்த்து உகந்தானை பல் இல் வெள்ளை தலை ஊண் உடையானை - தேவா-சுந்:584/2

மர உரி புலி அதள் அரை மிசை மருவினன் - தேவா-சுந்:730/2

இகழாது உமக்கு ஆட்பட்டோர்க்கு ஏக படம் ஒன்று அரை சாத்தி - தேவா-சுந்:784/2

பற்றி பாம்பு அரை ஆர்த்த படிறன் தன் பனங்காட்டூர் - தேவா-சுந்:875/3

பை கொள் பாம்பு அரை ஆர்த்த படிறன் தன் பனங்காட்டூர் - தேவா-சுந்:878/3

அரை விரி கோவணத்தோடு அரவு ஆர்த்து ஒரு நான்மறை நூல் - தேவா-சுந்:1010/1

அரை ஆடு நாகம் அசைத்த பிரான் அவனியின் மேல் - திருவா:11 6/1

பணம் தாழ் அரவு அரை சிற்றம்பலவர் பைம்பொன் கயிலை - திருக்கோ:34/1

பாம் அரை மேகலை பற்றி சிலம்பு ஒதுக்கி பையவே - திருக்கோ:164/3

பை வாய் அரவு அரை அம்பலத்து எம்பரன் பைம் கயிலை - திருக்கோ:169/1

உற அரை மேகலையாட்கு அலராம் பகல் உன் அருளே - திருக்கோ:260/4

கால் அரை முக்கால் முழுது எனும் மந்திரம் - திருமந்:1289/1

குட்டம் ஒரு முழம் உள்ளது அரை முழம் - திருமந்:2031/1

கொல்லை முக்காதமும் காடு அரை காதமும் - திருமந்:2912/1

அண்டர் தம்பிரான் திரு அரை கோவணம் அதுவும் - 2.தில்லை:7 44/2

அரை மணி கவடி கட்டி அழகுற வளர்க்கும் நாளில் - 3.இலை:3 18/4

காசொடு தொடுத்த காப்பு கலன் புனை அரைஞாண் சேர்த்தி - 3.இலை:3 21/2

அறைந்த சுரும்பு இசை அரும்ப அரை உடுத்த மரவுரியின் - 3.இலை:7 17/3

அஞ்சு வான் கரத்து ஆறு இழி மதத்தோர் ஆனை நிற்கவும் அரை இருள் திரியும் - 4.மும்மை:5 81/1

தோலும் நூலும் சிறு மார்பில் துவள அரை கோவணம் சுடர - 4.மும்மை:6 25/2

புண்ணிய முதலே புனை மணி அரைஞாணொடு போதும் - 6.வம்பறா:1 93/1

பணம் புரி அரவு அரை பரமர் முன் பணிந்து - 6.வம்பறா:1 1111/2

பொருவுஇல் வயிர சரிகள் பொன் அரைஞாண் புனை சதங்கை - 7.வார்கொண்ட:3 21/3

கைக்கு அணி கொள் வளை சரியும் அரை கடி சூத்திர சரியும் - 7.வார்கொண்ட:3 32/3

குஞ்சி திருத்தி முகம் துடைத்து கொட்டை அரைஞாண் துகள் நீக்கி - 7.வார்கொண்ட:3 60/1

அம் கை சரி வளையும் நாணும் அரை தொடரும் - நாலாயி:47/2

தன் அரை ஆட தனி சுட்டி தாழ்ந்து ஆட - நாலாயி:76/2

என் அரை மேல் நின்று இழிந்து உங்கள் ஆயர்-தம் - நாலாயி:76/3

மன் அரை மேல் கொட்டாய் சப்பாணி மாயவனே கொட்டாய் சப்பாணி - நாலாயி:76/4

கவர்ந்த வெம் கணை காகுத்தன் கடியார் பொழில் அரங்கத்து அம்மான் அரை

சிவந்த ஆடையின் மேல் சென்றது ஆம் என சிந்தனையே - நாலாயி:928/3,4

அரை செய் மேகலை அலர்மகள் அவளொடும் அமர்ந்த நல் இமயத்து - நாலாயி:962/2

மங்கை ஆளன் மன்னு தொல் சீர் வண்டு அரை தார் கலியன் - நாலாயி:1017/3

கலையோ அரை இல்லை நாவோ குழறும் கடல் மண் எல்லாம் - நாலாயி:2537/2

அரை வடங்கள் கட்டி சதங்கை இடு குதம்பை பொன் சுட்டி தண்டை - திருப்:9/5

அரை வடம் அலம்பு கிண்கிணி பரிபுரம் நெருங்கு தண்டைகள் அணி மணி சதங்கை கொஞ்சிட மயில் மேலே - திருப்:32/7

தூசு நெகிழ்த்து அரை சுற்றி உடுப்பவர் காசு பறிக்க மறித்த முயக்கிகள் - திருப்:215/7

சரண கமலாலயத்தை அரை நிமிஷ நேரம் மட்டில் தவம் முறை தியானம் வைக்க அறியாத - திருப்:216/1

மாலை ஓதி விரித்து முடிப்பவர் சேலை தாழ நெகிழ்த்து அரை சுற்றிகள் வாசம் வீசு மணத்தில் மினுக்கிகள் உறவாலே - திருப்:597/3

சீகரம் பேணு துடி தோற்ற இடை கொடு போக பண்டார பணி தோற்ற அரை கொடு - திருப்:608/5

நெகிழ் தர அரை துகில் வீழ்ந்து மா மதி முகம் வெயர்வு எழ விழி பாய்ந்து வார் குழையொடு - திருப்:696/3

அரை பணத்தை விற்று உடுத்த பட்டு அவிழ்த்து அணைத்து இதழ் கொடுத்து அநுராகத்து - திருப்:787/2

குறைப்படும் காதல் குனகிகள் அரை பணம் கூறு விலையினர் - திருப்:880/3

இடை துவள உடை கழல இட்டத்து அரை பை அது தொட்டு திரித்து மிக - திருப்:902/5

கரி போல் கிரி முலை கொடி போல் துடி இடை கடி போல் பணி அரை எனவாகும் - திருப்:905/2

எய்த்த இடை அது கொடியோ துடியோ மிக்க திரு அரை அரவோ ரதமோ - திருப்:913/5

ஆடை சோர அவிழ்த்து அரை சுற்றவும் அதி மோக - திருப்:952/6

அலைச்சல் உற்று இலச்சை அற்று அரை பை தொட்டு உழைத்துஉழைத்து - திருப்:954/5

மொழி புகழும் உடை மணியும் அரை வடமும் அடி இணையும் - திருப்:1278/13

முள் அரை பசும் தாள் வட்டு இலை கமல முகை உடைந்து ஒழுகு தேன் தெறிப்ப - சீறா:43/1

கொத்து அலர் சூடி அரை துகில் இறுக்கி குட மது கை மடுத்து அருந்தி - சீறா:57/1

வட்டு இலை முள் அரை வனச வாவியும் - சீறா:515/3

பேதம் அற்று அணுகி ஒட்டக கயிற்றை பிடித்தனர் அரை நொடி பொழுதில் - சீறா:694/3

வனம் உண்டு அரை நாழிகையுள் வழியில் - சீறா:712/2

பொரி அரை தருக்களை புரட்டி பொங்கிய - சீறா:733/2

சொரி மது விதிர்க்கும் பொரி அரை தருக்கள் சுற்றிய வரை மிசை ஏறி - சீறா:1899/3

பொருப்பிடை துறுகல் சார்பில் பொரி அரை தருவின் நீழல் - சீறா:2061/1

அரிசி சோறும் அரை படி பாலும் நல் - சீறா:2343/2

பொரி அரை தருக்கள் யாவும் புது மலர் சொரியும் கானின் - சீறா:2583/1

முள் அரை கானிடை கிடந்து மூரி வெம் - சீறா:2966/3

பொரி அரை காடு நீந்தி பொருப்பிடம் அனைத்தும் போக்கி - சீறா:3415/3

தெற்றும் வளமை தரு மதீனா தென் பால் இரு காது அரை ஆறு - சீறா:4038/3

புனல் தேடி அரை காத வழி சுற்றில் - சீறா:4898/2

மணம் எழுந்து அலர்ந்த முள் அரை பசும் தாள் வனசம் ஏய்ந்து இலங்கு பல்வலத்தும் - சீறா:4925/2

வீக்கினர் நடத்தி தொறு கணம் சாய்த்து விரி தலை பொரி அரை கானம் - சீறா:5022/2

பத்து அரையொடு ஈர் அரை கொள் பல் படையும் நினவே - வில்லி:23 14/3

அரை கலிங்கம் உரிப்புண்ட கலிங்கர் எல்லாம் அமணர் என பிழைத்தாரும் அநேகர் ஆங்கே - கலிங்:466/2

அரைமதி இரும்பொடு கவை முள் கரீஇ - உஞ்ஞை:32/96

சாந்து அரை கூல பெரும் கடை - உஞ்ஞை:40/24

அணி தகு நுதல் வியர்த்து அரை எழுத்து அளைஇ - உஞ்ஞை:40/168

நுரை புரை வெண் துகில் அரை மிசை வீக்கி - உஞ்ஞை:40/286

ஐ_ஐந்து எல்லையும் அரைஇருள் நடுநாள் - உஞ்ஞை:50/61

முள் அரை இலவத்துள் முழை அரண் முன்னி - உஞ்ஞை:53/178

முள் அரை இலவத்துள் அவர் இருப்ப - உஞ்ஞை:56/10

முள் அரை இலவம் ஒள் எரி சூழ - உஞ்ஞை:56/214

சாந்து அரை அம்மியும் தேம் கண் காழ் அகில் - உஞ்ஞை:57/35

அரை விரித்து அசைத்த அம் பூம் கச்சொடு - மகத:17/171

அரை இருள் யாமத்தும் பகலும் துஞ்சான் - புகார்:4/81

பொரி அரை உழிஞ்சிலும் புல் முளி மூங்கிலும் - மது:11/76

வெடி பட வருபவர் எயினர்கள் அரை இருள் - மது:12/149

அரத்த பூம் பட்டு அரை மிசை உடீஇ - மது:14/86

ஒன்று முக்கால் அரை கால் ஆய் உரும் - மணி:27/140

கோழ் அரை மணி மடல் கூந்தல் நெற்றி ஏந்திய - சிந்தா:1 147/1

கோடி மூன்றோடு அரை செம்பொன் கோமான் நல்கும் என அறை-மின் - சிந்தா:1 307/4

பொரி அரை ஞாழலும் புன்னையும் பூத்து - சிந்தா:3 515/1

குழை தவழ் குங்குமம் கோழ் அரை நாகம் - சிந்தா:3 524/2

கொம்பு உற பழுத்திட்டன கோ அரை
வம்புற கனி மா தொடு வார் சுளை - சிந்தா:4 869/2,3

அரை விளை கலை நல்லார் அறுகின் நெய் அணிந்தனரே - சிந்தா:12 2430/4

முள் அரை முளரி வெள்ளை முளை இற முத்தும் பொன்னும் - பால:2 18/1

திரு அரை துகில் ஒரீஇ சீரை சாத்தியே - அயோ:4 148/4

பொன் அரை சீரையின் பொலிவு நோக்கினான் - அயோ:4 157/2

திரு அரை சுற்றிய சீரை ஆடையன் - அயோ:4 187/1

ஆழம் இட்ட நெடுமையினான் அரை
தாழ விட்ட செம் தோலன் தயங்குற - அயோ:8 4/2,3

வில் துறந்து அரை வீக்கிய வாள் ஒழித்து - அயோ:8 9/2

தன்னுடை திரு அரை சீரை சாத்தினான் - அயோ:12 52/2

எல் கலை திரு அரை எய்தி ஏமுற - ஆரண்:6 15/2

அரை கடை இட்ட முக்கோடி ஆயுவும் - ஆரண்:12 30/1

அலங்கு செம் பொன் இழை பயிலும் அரும் துகிலின் பொலிந்த அரை தவத்தின் மீது - ஆரண்-மிகை:10 3/2

வேம் அரை கணத்தின் இ ஊர் இராவணி விளிதல் முன்னம் - யுத்2:19 167/2

அரை கணத்து அரக்கர் வெள்ளம் அளவு இல் கோடி ஆவி போய் - யுத்3-மிகை:31 13/1

அரை கடை இட்டு அமைவுற்ற கோடி மூன்று ஆயு பேர் அறிஞர்க்கேயும் - யுத்4:38 27/1

மிகுத்த மூன்றரை கோடியில் மெய் அரை கோடி - யுத்4-மிகை:40 18/1

யுகம் அரை கோடிகாறு ஏவல் செய்து உழலும் தேவர் - யுத்4-மிகை:41 143/2

ஆரும் திரியா அரை இருளில் அங்ஙனே - நள:337/1

செய்யன் சிவந்த ஆடையன் செ அரை
செயலை தண் தளிர் துயல்வரும் காதினன் - திரு 206,207

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *