சொல் பொருள்
(பெ) இல்லையாதல்,
அறுபட்ட இடம், ஒடிவு, கடவை
சொல் பொருள் விளக்கம்
அறு+அ+வ்+உ: அறவு = அறுபட்ட இடம், ஒடிவு, கடவை, புல் முதலியன அறுபடுதலின் அங்ஙனம் அறுபட்ட இடத்தையும், அறுதல் ஒடிதலுமாதலின் ஒடிவையும் வேலி நாற்புறமும் வேய்ந்துழி அதனுள்ளிருப்பான் வெளிச்சேறற்கு அவ்வேலியுட் சிறிது அறுத்து வாயில் செய்து கோடலிற் கடவையையுமுணர்த்திற்று. (தமிழ் வியாசங்கள். 53.)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
cessation
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கோள் அறவு அறியா பயம் கெழு பலவின் – அகம் 162/19 காய்த்தல் இல்லையாதல் அறியாத பயனுடைய பலாமரத்தினோடு
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்