சொல் பொருள்
அறுத்தல், அறுத்ததுண்டு, ஆட்சேபம். தொழிலாகுபெயராய் அறுக்கப்பட்ட துண்டையும், ஒருவர் பேசுங்கால் அவர்பேச்சை யூடறுத்துத் தடுத்தலின் ஆட் சேபத்தையும் உணர்த்திற்று.
சொல் பொருள் விளக்கம்
(1) அறுத்தல், அறுத்ததுண்டு, ஆட்சேபம். தொழிலாகுபெயராய் அறுக்கப்பட்ட துண்டையும், ஒருவர் பேசுங்கால் அவர்பேச்சை யூடறுத்துத் தடுத்தலின் ஆட் சேபத்தையும் உணர்த்திற்று. (தமிழ் வியா. 54.)
(2) அறுப்பு என்பதில் ‘அறு’ முதனிலை; அறுவை, அறம், அற்றல், அறுதி, அற்றம் என்பன வெல்லாம் அறுவால் தோன்றுவனவே. அற்றம் = முடிவு. (குறள், குற்றங்களைதல்.4) அறுவை = துணி, அறுக்கப்பட்டது: (சிறுபாண். 236) அறம் = வரையறுக்கப்பட்டது. அறல், அறுத்தல், அறுகை முதலியவற்றையும் ஆராய்க. ஆறு, அறை என்பவையின் தோற்றம் உணர எளிதே. அறுத்தல் என்பது பிரித்தல். துணித்தல் என்பதன் பொருளும் அஃதே. உள நிகழ்ச்சியைக் காட்டும். பொருட்டுத் துணித்தல் என்பது துணிதல் என்று நின்றவாறு அறுத்தல் என்பது அறிதல் என்று நிற்கும். ஆதலின் அறிதல் – உணர்தல். ( பகுத்துணர்தல் – பிரித்துப் பார்த்தல்) (செந்தமிழ்ச் செல்வி. 2: 140 -141.)
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்