சொல் பொருள்
உள், மலை, முழைஞ்சு, குறை, திரை, பாத்தி, பாறை
(வி) 1. அறு, வெட்டு, நறுக்கு, 2. ஒலி, 3. அடி, 4. தெரிவி,
2. (பெ) 1. வெட்டுதல், 2. அறுகை, ஒழிதல், இல்லாதுபோதல், 3. பாத்தி, 4. வீட்டில் தடுப்புப் பகுதி, 5. பாறை, 7. பாசறை, 8. (மாலை)சாற்றுதல்,
சொல் பொருள் விளக்கம்
இஃது உள், மலை, முழைஞ்சு, குறை, திரை, பாத்தி, பாறை முதலிய பலபொருள் பயப்பதோர் சொல் நான்கு பக்கங்களினும் மதிலெழுப்பி ஏனைய இடங்களினின்றும் அறுக்கப்படுதலின் உள்ளாம்; மலையின்கண் அறுத்த குடைந்து குகை செய்யப்படுதலின் முழைஞ்சாம்; அற்றது குறைந்ததாமாதலிற் குறையாம்; கடலின் நீர்ப்பரப்பினின்றும் அற்று எழுந்து மறிந்து வீழ்தலில் திரையாம்; நிலத்தின்கட் கரை கோலப்பட்டு மற்றையவற்றினின்றும் அறுபட்டு நிற்றலிற் பாத்தியாம்; நிலப் பரப்பினை யறுத்துக் கொண்டு மேலெழும்பித் துறுத்து நிற்ற லிற் பாறையாம். (தமிழ் வியா. 55)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
cut, sound, beat, as a drum, declare, cutting, ceasing, disappearing, garden plot, room, rock, war camp
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அறை கரும்பின் அரி நெல்லின் இன களமர் இசை பெருக – பொரு 193,194 அறுக்கின்ற கரும்புக் கழனிகளிடத்தும், அரிகின்ற நெற் கழனிகளிடத்தும், திரண்ட உழவருடைய பண்ணொலி மிகுதியாய் ஒலிப்பதால் பொன் அறைந்து அன்ன நுண் நேர் அரிசி – மலை 440 பொன்னை நறுக்கினாலொத்த நுண்ணிய ஒத்த அரிசியை ஆரை வேய்ந்த அறை வாய் சகடத்து – அகம் 301/7 பாயால் வேயப்பெற்ற ஒலியினைச்செய்யும் வாயினையுடைய வண்டியில் செல்லும் – நாட்டார் உரை விழு கடிப்பு அறைந்த முழு குரல் முரசம் – புறம் 366/1 பெரிய குறுந்தடி அடித்த பெரு முழக்கத்தையுடைய முரசம் அறம் பொருள் இன்பம் என்று அ மூன்றின் ஒன்றன் திறம் சேரார் செய்யும் தொழில்கள் அறைந்தன்று – கலி 141/3,4 அறம் பொருள் இன்பம் ஆகிய இந்த மூன்றினில் ஒன்றாகிய அறத்தின் வழியே சேராதார், இப்பிறப்பில் செய்யும் தொழில்களில் ஒன்றாக நூல்கள் தெரிவிக்கின்றன குறை அறை வாரா நிவப்பின் அறை_உற்று ஆலைக்கு அலமரும் தீம் கழை கரும்பே – மலை 118,119 குறைந்துபோதலும், அற்றொழிதலும் உண்டாகாத வளர்ச்சியுடன், வெட்டுதலுற்று, ஆலைக்காக (அறைபடுவதற்காக)அசைந்துகொண்டிருக்கும் இனிக்கும் கோலாகிய கரும்பு; குறை அறை வாரா நிவப்பின் அறை_உற்று ஆலைக்கு அலமரும் தீம் கழை கரும்பே – மலை 118,119 குறைந்துபோதலும், அற்றொழிதலும் உண்டாகாத வளர்ச்சியுடன், வெட்டப்பட்டு, ஆலைக்காக (அறைபடுவதற்காக)அசைந்துகொண்டிருக்கும் இனிக்கும் கோலாகிய கரும்பு; – குறை – நட்ட கரும்புகள் வளம்பட வளராது தேய்ந்திருத்தல் – அறை – நட்ட கரும்புகள் உயிரற்று அழிதல் – பொ.வே.சோ.உரை, விளக்கம் குறை அறை வாரா நிவப்பின் அறை_உற்று ஆலைக்கு அலமரும் தீம் கழை கரும்பே – மலை 118,119 பாத்தி குறைவுபடாத வளர்ச்சியோடே வெட்டுதலுற்று ஆலைக்குப் பயன்படுதற்கு அசைந்துகொண்டு நிற்கும் இனிய கோலாகிய கரும்பு – அறை குறை வாரா – பாத்தி குறைவுபடாத – நச். உரை எழினி வாங்கிய ஈர் அறை பள்ளியுள் – முல் 64 திரைச்சீலையை வளைத்த இரு அறைகள்(கொண்ட) படுக்கைக்கண்ணே சென்று வான் கண் கழீஇய அகல் அறை குவைஇ – குறி 98 மழை (பெய்து)தன்னிடத்தைக் கழுவிச் சுத்தப்படுத்தின அகன்ற பாறையில் குவித்து பேய் கண் அன்ன பிளிறு கடி முரசம் மா கண் அகல் அறை அதிர்வன முழங்க – பட் 236,237 பேயின் கண்ணை ஒத்த, முழங்குகின்ற காவலையுடைய முரசம் பெருமைகொள்ளும் இடத்தையுடைய பாசறையில் நடுங்குவனவாய் முழங்க திணி நிலை கடம்பின் திரள் அரை வளைஇய துணை அறை மாலையின் கை பிணி விடேஎம் – குறி 176,177 திண்ணிய நிலையினையுடைய கடம்பினது திரண்ட முதலை நெருங்கச் சுழ்ந்த மகளிர் ஒழுங்கிற்கு ஒப்புச் சாற்றுதலையுடைய மாலைபோன்ற கைகோத்தலை விடேமாய் – நச். உரை
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்