சொல் பொருள்
(பெ) தங்குதல்
சொல் பொருள் விளக்கம்
தங்குதல்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
staying
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பயன் நிலம் குழைய வீசி பெயல் முனிந்து விண்டு முன்னிய கொண்டல் மா மழை மங்குல் அற்கமொடு பொங்குபு துளிப்ப – அகம் 235/4-6 பயந்தரும் நிலங்கள் நெகிழப் பெய்து பின் பெய்தலை வெறுத்து மலையைச் சேர்ந்த கொண்டலாகிய கரிய மேகம் மீண்டும் இரவில் தங்குதலுற்றுப் பொங்கித் துளிக்க ஆனால், அற்கம் என்பதற்கு, அடக்கம் – Self-restraint, self-control என்று பேரகராதி (Tamil Lexicon) பொருள்தருகிறது. முதலில் நிலம் நெகிழப் பெருமழையாய்க் கொட்டிய மேகம், பின்பு தன்னடக்கத்துடன் துளிகளாய்த் தூவியது எனப் பொருள்கொள்ளலாம். ஆனால் அற்கம் என்ற சொல் அல்கு என்ற வினையினை அடியாகக் கொண்டது என்று பேரகராதி கூறுகிறது. அல்குதல் என்பதற்கு அடங்குதல், சுருங்குதல் என்ற பொருள் இருப்பினும் தங்குதல் என்ற பொருளும் உண்டு. அற்கம் என்பதற்கு, அல்குதல் – தங்குதல் என்றே பொருள்கொள்கிரார் ச.சே.சு அவர்கள் தம் உரையில்.
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்