சொல் பொருள்
(பெ) முன்பனிக்காலம்,
சொல் பொருள் விளக்கம்
முன்பனிக்காலம்,
மார்கழி, தை ஆகிய இருமாதங்களும் முன்பனிக்காலமாகும் சிலவேளைகளில் இது பின்பனிக்காலத்தையும் குறிக்கும்.
கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில் என்ற ஆறு பருவங்களையுடையது தமிழர் ஆண்டுக்கணக்கு. இது ஆவணியில் தொடங்கி இரண்டிரண்டு மாதங்களாகச் செல்லும்.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வாடை தூக்கும் வரு பனி அற்சிரம் – அகம் 78/10 வாடைக் காற்று வீசும் வருகின்ற பனியைக் கொண்ட முன்பனிக்காலம் அற்சிரம் நீங்கிய அரும் பத வேனில் – அகம் 97/17 பின்பனிக்காலம் நீங்கிய அரிய பதமான இளவேனில்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்