சொல் பொருள்
அச்சம், அழிவு, உண்மை, சமயம், சோர்வு, மறைவு, மெலிவு, வறுமை
(பெ) 1. சமயம், பொழுது, 2. வருத்தம்,
சொல் பொருள் விளக்கம்
அச்சம், அழிவு, உண்மை, சமயம், சோர்வு, மறைவு, மெலிவு, வறுமை முதலிய பலபொருள் பயப்பது. தைரியமறுதலின் அச்சமும், வாழ்வறுதலின் அழிவும், தன்னொடுமிடைந்த பொய் முதலியவற்றினின்றும் அறுதலின் உண்மையும், பொருள் முதலாயின அற்ற சமயமும் வலியற்ற சோர்வும் மெலிவும் கண்கூடற்ற மறைவும், பொருளறுதலின் வறுமையுமாம். (தமிழ் வியா. 55.)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
occasion, opportunity
suffering
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அற்றம் பார்த்து அல்கும் கடுங்கண் மறவர் – கலி 4/3 சரியான சமயத்தை எதிர்நோக்கிக் காத்துக்கிடக்கும் கொடிய மறவர்கள் இரந்தோர் அற்றம் தீர்க்கு என விரைந்து இவண் உள்ளி வந்தனென் யானே – புறம் 158/19,20 இரந்தோரது துன்பத்தைத் தீர்க்கக்கடவேன் யான் என்று நீ இருத்தலால் விரைந்து இவ்விடத்தே பரிசில்பெற நினைந்து வந்தேன் யான்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்