Skip to content

சொல் பொருள்

1. (வி.மு) 1. அது போன்றது, 2. அத்தன்மையது,

2. (வி. அ) இல்லாமல்,

சொல் பொருள் விளக்கம்

1. அது போன்றது,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

Is like, of the same kind, is of such nature or quality, without

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

படு மழை பொழிந்த சாரல் அவர் நாட்டு
குன்றம் நோக்கினென் தோழி
பண்டை அற்றோ கண்டிசின் நுதலே – குறு 249/3-5

ஒலிக்கின்ற மழை பொழிந்த மலைச்சரிவையுடைய அவரின் நாட்டுக்
குன்றத்தை நோக்கினேன், தோழி!
(பசப்பூர்ந்த என் நெற்றி) முன்பு இருந்ததைப் போல் ஆனதோ, உற்றுப்பார் என் நெற்றியை

உரும் இசை புணரி உடைதரும் துறைவற்கு
உரிமை செப்பினர் நமரே விரி அலர்
புன்னை ஓங்கிய புலால் அம் சேரி
இன் நகை ஆயத்தாரோடு
இன்னும் அற்றோ இ அழுங்கல் ஊரே – குறு 351/4-8

இடியோசை போன்ற முழக்கத்தையுடைய அலைகள் உடைக்கும் கடல்துறைத் தலைவனுக்கு
உன்னை உரிமையாகக் கூறினர் நம் இல்லத்தார்; விரிந்த பூக்களைக் கொண்ட
புன்னை மரங்கள் உயர்ந்து வளர்ந்த புலவு நாறும் சேரியிலுள்ள
இனிய சிரிப்பையுடைய மகளிர்கூட்டத்தோடு
இன்னும் அத்தன்மையுடையதோ (முன்புபோல் பழிச்சொற்கள் கூறுமோ), இந்த ஆரவாரமுள்ள ஊர்?

செறுவும் வாவியும் மயங்கி நீர் அற்று
அறு கோட்டு இரலையொடு மான் பிணை உகளவும் – பட் 244,245

வயலும், குளங்களும், தம்மில் ஒன்றாகி, நீர் இல்லாமல்,
நெளிவுள்ள கொம்புகளையுடைய கலைமான்களோடு பெண்மான்கள் துள்ளிவிளையாடவும்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *