Skip to content

சொல் பொருள்

(பெ) மேலும் கீழும் அசைதல், அவ்வாறு அசையும் ஒரு பொருள் – மாலை, தானியக்கதிர்

சொல் பொருள் விளக்கம்

சரிகை முதலியவற்றால் விளங்கும் மாலை

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

movement up and down – an object that moves like that – garland, ear of corn

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

வெண் போழ் தைஇய அலங்கல் அம் தொடலை – நற் 169/8

வெள்ளிய பனங்குருத்தின் துண்டோடு சேர்த்துச் செய்த அசைகின்ற மாலையின் தொங்கலோடு

கழனி நெல் ஈன் கவை முதல் அலங்கல் – அகம் 13/19

வயற்பரப்பின் நெற்பயிர் ஈன்ற கவைத்த அடியைக்கொண்ட ஆடும் நெற்கதிர்

அம் தளிர் மாஅத்து அலங்கல் மீமிசை – அகம் 229/18

அழகிய தளிர்களைக் கொண்ட மாமரத்தின் அசைகின்ற கிளைகளின் மேல்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *