சொல் பொருள்
(வி) 1. எரி, 2. காந்து, வெப்பமாக இரு
2. (பெ) 1. நெருப்பு, 2. தீக்கொழுந்து, 3. வெம்மை, வெப்பம், 4. அழுதல்,
சொல் பொருள் விளக்கம்
1. எரி
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
burn, glow, burn, fire, flame, heat, weeping
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பாவைவிளக்கில் பரூஉ சுடர் அழல – முல் 85 பாவை (ஏந்திநின்ற)தகளியில் பரிய விளக்கு நின்றெரிய விசும்பு உற நிவந்து அழலும் விலங்கு அரு வெம் சுரம் – கலி 150/6 வானத்தில் தோயும்படியாக உயர்ந்து வெம்மையைச் செய்யும் கடப்பதற்கு அரிய கொடுமையான காட்டுவழியை தேரோர்க்கு அழன்ற வேலினை எனவும் – சிறு 234 ‘தேரினையுடையோர்க்கு வெம்மைசெய்த வேலினையுடையோய்’ எனவும், கடுவொடு ஒடுங்கிய தூம்பு உடை வால் எயிற்று அழல் என உயிர்க்கும் அஞ்சுவரு கடும் திறல் பாம்பு – திரு 148-150 நஞ்சுடன் மறைந்திருக்கும் உள்துளையுடைய வெண்மையான பல்லினையும், நெருப்பென்னும்படி நெட்டுயிர்ப்புக்கொள்ளும் அச்சம் தோன்றும் கடிய வலிமையினையும் உடைய, பாம்புகள் விளக்கு அழல் உருவின் விசி_உறு பச்சை – பொரு 5 விளக்குப் பிழம்பின் (நிறத்தை ஒத்த)நிறமுடையதும் விசித்துப் போர்க்கப்பட்டதும் ஆகிய தோல் காடே நிழல் கவின் இழந்த அழல் கவர் மரத்த – நற் 256/3 காடோ, நிழல்தரும் அழகினை இழந்த, வேனில் வெம்மையால் கரிந்துபோன, மரங்களைக் கொண்டு, அழல் தொடங்கினளே ஆய்_இழை – நற் 371/7 அழத் தொடங்கினாள் ஆராய்ந்த அணிகலன்களை அணிந்த தலைவி;
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்