Skip to content

சொல் பொருள்

(வி) 1. இல்லாமற்போ, நாசமாகு, 2. சிதைவுறு, 3. தோற்றுப்போ, 4. மனம் உடை, 5. மிகு, பெருகு, 6. கெடு, 7. நீக்கு, 8. இல்லாமர்செய், 

2. (பெ) வைக்கோல்,

சொல் பொருள் விளக்கம்

இல்லாமற்போ, நாசமாகு,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

perish, be ruined, decay, be mutilated, be defeated, be disheartened, increase, swell, ruin, damage, remove, destroy, exterminate, hay, straw

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

கழை கவின் அழிந்த கல் அதர் சிறு நெறி – நற் 333/2

மூங்கில்களின் அழகு நாசமாகின மலைகளினூடேஅமைந்த பாதையாகிய சிறிய நெறியில்

அரசு பகை நுவலும் அரு முனை இயவின்
அழிந்த வேலி அம் குடி சீறூர் – நற் 346/3,4

இது அரசர்களின் பகையால் ஏற்பட்ட அவலம் என்பதைப் பறைசாற்றிக்கொண்டிருக்கும் அரிய போர்முனையை அடுத்துள்ள வழியில் சிதைவுற்ற வேலியையுடைய அழகாயிருந்த குடிகள் இருந்த சிறிய ஊரில்,

ஆண் அணி புகுதலும் அழி படை தாங்கலும் – சிறு 211

(பகை)மறவரின் அணியில் (அச்சமின்றிப்)புகுதலையும், தோற்ற படையினரைப் பொறுத்தலையும்,

திருந்துகமாதோ நும் செலவு என வெய்துயிரா
பருவரல் எவ்வமொடு அழிந்த
பெருவிதுப்பு உறுவி பேது உறு நிலையே – அகம் 299/19-21

உம் பயணம் செப்பமுறுக என்று பெருமூச்சுவிட்டு துன்பத்தைத் தரும் வருத்தத்தால் மனம் உடைய பெரிதும் நடுக்கமுற்றவளின் மயக்குற்ற நிலையை

அழி பசி வருத்தம் வீட பொழி கவுள் – சிறு 140

பெருகுகின்ற பசியின் வருத்தங்கள் கெடுமாறு;

ஆனா நோயொடு அழி படர் கலங்கி – அகம் 297/2

அமையாத வருத்தத்துடன் மிக்க துயரத்தால் கலங்க

மைந்து மலி சினத்த களிறு மதன் அழிக்கும்
துஞ்சு_மரம் கடுக்கும் மாசுணம் விலங்கி – மலை 260,261

மதம் மிகுந்து கோபத்துடனிருக்கும் யானையின் செருக்கை(யும்) அழிக்கக்கூடிய,
விழுந்துகிடக்கும் மரத்தைப்போன்ற மலைப்பாம்பினின்றும் ஒதுங்கி

கயிறு பிணி குழிசி ஓலை கொண்மார்
பொறி கண்டு அழிக்கும் ஆவண மாக்களின் – அகம் 77/8

கயிற்றால் பிணித்தலையுற்ற குடத்திலுள்ள ஓலையை எடுத்துக்கோடற்கு
அக்குடத்தின் மேலிட்ட இலச்சினையை ஆய்ந்து நீக்கும் ஆவண மாந்தரைப் போன்று

சொல் பல நாட்டை தொல் கவின் அழித்த
போர் அடு தானை பொலம் தார் குட்டுவ – பதி 43/10,11

புகழ் பெற்ற பல நாடுகளின் பழமையான அழகினை அழித்த,
போரில் பகைவரைக் கொல்லும் சேனைகளையுடைய, பொன்னால் செய்யப்பட்ட மாலையினை அணிந்த குட்டுவனே!

உழுத நோன் பகடு அழி தின்று ஆங்கு – புறம் 125/7

உழுத வலிய பகடு பின் வைக்கோலைத் தின்றாற் போல

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *