சொல் பொருள்
(பெ) 1. துன்பம், 2. இரக்கம், 3. ஆரவாரம்
சொல் பொருள் விளக்கம்
1. துன்பம்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
affliction, compassion, uproar
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அழுங்கல் நெஞ்சமொடு முழங்கும் – குறு 307/8 துன்பமுள்ள நெஞ்சத்தோடே முழங்கும் கதம் பெரிது உடையள் யாய் அழுங்கலோ இலளே – நற் 150/11 சினம் பெரிது உடையவள் தாய், இரக்கமோ இல்லாதவள். ஒலி அவிந்தன்று இ அழுங்கல் ஊரே – அகம் 70/17 ஒலி அடங்கப்பெற்றது இந்த ஆரவாரம் மிக்க ஊர்.
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்