Skip to content

சொல் பொருள்

(வி) 1. வருந்து,  2. கெடு,  3. தவிர்,  4. உருவழி, 

சொல் பொருள் விளக்கம்

1. வருந்து, 

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

suffer, be in distress, be spoiled, avoid, be dispensed with, be disfigured

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

மலர்ந்த பொய்கை பூ குற்று அழுங்க
அயர்ந்த ஆயம் கண் இனிது படீஇயர் – நற் 115/1,2

அகன்று விரிந்த பொய்கையின் பூக்களைப் பறித்து மேனி வருந்திச்
சோர்வடைந்த தோழியர் கூட்டம் இனிதாகக் கண்ணுறங்க

கதழ் பரி நெடும் தேர் வரவு ஆண்டு அழுங்க
செய்த தன் தப்பல் அன்றியும்
உயவு புணர்ந்தன்று இ அழுங்கல் ஊரே – நற் 203/9-11

விரைந்து வரும் ஓட்டத்தையுடைய குதிரை பூட்டிய தேரின் வரவு அங்குக் கெட்டுப்போகுமாறு செய்த தன் தவற்றோடு,
அவரைக் காணாத என் வருத்தத்திலும் சேர்ந்துகொள்கிறது இந்த இரக்கமுள்ள ஊர்

போது ஆர் கூந்தல் இயல் அணி அழுங்க
ஏதிலாளனை நீ பிரிந்ததற்கே – ஐங் 232/1,2

மலரும் நிலையிலுள்ள பூக்கள் நிறைந்த கூந்தலையுடையவளின் தகுதிவாய்ந்த அழகு குன்றிப்போக அன்னியன் போன்ற நீ பிரிந்து சென்றதற்காக

தேர் செலவு அழுங்க திருவில் கோலி
ஆர் கலி எழிலி சோர் தொடங்கின்றே – ஐங் 428/1,2

தேரில் செல்லுதல் தவிர்க்கப்படவேண்டிய அளவுக்கு வானவில் வளைவாகத் தோன்றி
பெருத்த முழக்கத்துடன் மேகங்கள் மழையைச் சொரியத்தொடங்கிவிட்டன

பிணன் அழுங்க களன் உழக்கி – புறம் 98/5

பட்டோரது பிணம் உருவழியப் போர்க்களத்தை உழக்கி

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *