சொல் பொருள்
(பெ) அழுந்தூர், பார்க்க : அழுந்தூர்
சொல் பொருள் விளக்கம்
அழுந்தூர்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
a city in sangam period
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: தந்தை கண் கவின் அழித்ததன் தப்பல் தெறுவர ஒன்றுமொழி கோசர் கொன்று முரண் போகிய கடும் தேர் திதியன் அழுந்தை கொடும் குழை அன்னிமிஞிலியின் இயலும் – அகம் 196/8-12 தன் தந்தையின் கண்ணின் எழிலைக் கெடுத்ததாகிய தவற்றிற்காக, அச்சம் உண்டாக, நெடுமொழியினையுடைய கோசர்களைக் கொல்வித்து, மாறுபாடு தீர்ந்த விரைந்த தேரையுடைய திதியனது அழுந்தூர் என்னுமிடத்தே, வளைந்த குழையினை அணிந்த அன்னி மிஞிலி என்பாளைப் போல களிப்புற்று நடக்கும். கோசர் என்பார் தன் தந்தையை அருளின்றிக் கண் களைந்தமையின் அன்னி ஞிமிலி என்பாள் சினம் கொண்டு குறும்பியன், திதியன் என்பவர்களால் அக் கோசரைக் கொல்வித்து மாறுபாடு தீர்ந்து களிப்புற்றாள். இதனை அகம் 262 விரிவாகப் பேசுகிறது. இங்ஙனம் நிகழ்ந்தது அழுந்தூரில் என இந்த அடிகளால் அறிகிறோம்.
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்