சொல் பொருள்
(பெ) 1. பரப்பு,
அ. பாலை நிலப் பரப்பு, ஆ. கடற்பரப்பு இ. போர்க்களப்பரப்பு
சொல் பொருள் விளக்கம்
1. பரப்பு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
a vast expanse
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வாகை வெண் நெற்று ஒலிக்கும் வேய் பயில் அழுவம் முன்னியோரே – குறு 7/5,6 வாகைமரத்தில் வெள்ளிய நெற்றுக்கள் ஒலிக்கும் மூங்கில்கள் நிறைந்திருக்கும் பாலைநிலப்பரப்பில் செல்ல நினைத்தவர் பசும்பிதிர்த், திரை பயில் அழுவம் உழக்கி உரன் அழிந்து – அகம் 210/5 பசிய திவலைகளையுடைய அலைகள் நிறைந்த கடற்பரப்பைக் கலக்கி, வலி குன்றி கறுத்தோர், ஒளிறு வேல் அழுவம் களிறு படக் கடக்கும் – அகம் 81/11,12 வெகுண்டெழுந்த பகைவரின், ஒளிர்கின்ற வேற்படையையுடைய போர்க்களத்தை, யானைகள் மடிய வெல்லும்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்