Skip to content

சொல் பொருள்

(பெ) ஒரு வகைப் பலா

ஆசினி என்பது ஒரு மரம்; ஈரப்பலா என்பாரும் உளர். (புறம் 158. ப. 2)

சொல் பொருள் விளக்கம்

ஒரு வகைப் பலா

இது ஈரப்பலா என்றும் அழைக்கப்படும். இதன் மரம் நீண்டு உயர்ந்தது என்று கூறுகின்றன மலைபடுகடாமும், அகநானூறும்.

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

Bread-fruit tree, Artocarpus incisa

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

அரலை உக்கன நெடும் தாள் ஆசினி – மலை 139

நெடும் கால் ஆசினி ஒடுங்காட்டு உம்பர் – அகம் 91/12

இதனுடைய காய் குடம்போன்று இருக்கும் என்கிறது நற்றிணை.

குடக் காய் ஆசினி படப்பை – நற் 44/9

குடம்போன்ற காயையுடைய ஆசினிப்பலாவையுடைய தோட்டத்தில்

இதனுடைய பழம் மென்மையாக இருக்கும் என்று கலித்தொகை குறிப்பிடுகிறது

ஆசினி மென் பழம் அளிந்தவை உதிரா – கலி 41/12

ஆசினிப்பலாவின் மெல்லிய பழங்களில் நெகிழ்ந்தவற்றை உதிர்த்து

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *