சொல் பொருள்
ஆட்டைத் தூக்கிக் குட்டியில் போடல் – முறைகெடச் செலவிடல், சமாளித்தல்
சொல் பொருள் விளக்கம்
ஆயர்கள் வழக்கம் ஆட்டைத் தூக்கிக் குட்டியில் போடலும், குட்டியைத் தூக்கி ஆட்டில் போடலுமாம். பாலூட்டுதற்காகச் செய்யும் வேலை இது. இவ்வழக்கில் இருந்து வந்தது இத்தொடர். ஒருவகைக்கென உரிய ஒரு தொகையை வேறொரு வகைக்குச் செலவிடலும்; வேறொரு வகைக்கென உரிய தொகையை இன்னொரு வகைக்குச் செலவிடலும் பிறகு மாற்றிச் சரிக்கட்டலுமாக இருப்பவரை இப்பழமொழியால் குறிப்பர். இன்னது இன்னதற்கென இல்லாமல் எதையும் எதற்கும் செலவிடும் வழக்கம் உள்ளவர்களை இவ்வாறு குறிப்பர். இம்முறை சமாளித்தல் எனவும் படும்.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்